herbalkannan
8/09/2019 04:28:00 PM
சிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்
,
வருமுன் தடுக்கவும்!!!
No comments
சிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்,வருமுன் தடுக்கவும்!!!
உடலில் பாதுகாவலர்களாகக் கருதப்படும் உள்ளுறுப்புகளுள் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகம் நமது உடலில் உள்ள யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட், சல்பேட், மற்றும் கிரியாட்டினின் ஆகியவற்றோடு நீரையும் இயல்பான அளவுக்கு மேல் உடலில் தங்காமல் சிறுநீரில் வடிக்கிறது. இவற்றில் எதன்நிலை உயர்ந்தாலும் உடலுக்கு ஏற்காது, நச்சேற்றம் பெற்று உடலில் பல சிக்கல்கள் ஏற்படும்.
சிறுநீர் இயல்பாக வடிய வேண்டிய அளவு 800 மி.லி. முதல் 2500 மி.லி ஆகும். ஆனால் சிறுநீரகச் செயலிழப்பால் , 24 மணிகளில் 400 மி.லி. க்கு குறைந்தால், குறை சிறுநீர் ( oliguria ) என்றும் 24 மணிகளில் 100 மி. லி.க்கு குறைந்தால், சிறுநீரற்ற நிலை என்றும் ( anuria) அழைக்கப்படும். சிறுநீரகத் திடீர்ச் செயலிழப்பு சிறுநீரகத்திற்கு வழங்க வேண்டிய இரத்தம் குறைவதால் ஏற்படுகிறது. இதனை சிறுநீரக முற்பகுதிச் செயலிழப்பு என்றும் இரு சிறுநீரகத்திலிருந்தும் வடிந்த சிறுநீர் வெளிப்படாமல் ஏற்படும் அடைப்பால் விளையும். சிறுநீரக பிற்பகுதிச் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம்.
சிறுநீரகச் செயலிழப்பில் சிறுநீரகத்திற்கு வரவேண்டி இரத்தம் குறைவதால் சிறுநீர் வடிவது குறையும். சிறுநீரக இரத்தம் ஓட்டம் குறைந்து இரத்த உப்பு குறைவதால் ரெனின் என்ற இயக்குநீர் சுரக்கப்பட்டு, இரத்த குழாய் ஒடுக்கிகள் வெளியிடப்படும், இதனால் இரத்தஅழுத்தம் உயரும். மேலும் ஆல்டோஸ்டீரான் வெளியிடப்பட்டு,சிறுநீரிலுள்ள உப்பும், நீரும், மீண்டும் உறிஞ்சப்படுவதால் சிறுநீரின் அடர்வு மிகைத்து சிறுநீர்குழாயில் வடியும் பொழுது எரிச்சல் திசுசிதைவை விளைவிக்கிறது.
நோய்க்கூறு:- சிறுநீரகம் பெருக்கும் ,சிறிது நீர்க்கட்டு ஏற்படும்,
நெப்ரான் எனப்படும் நுண் சுரப்புக் குழாய்களில் நச்சேறி, சிறுநீரக
புரணியில் திசுமரிக்கும்.
திடீர் அழற்சி ஏன் ஏற்படுகிறது?
உடலில் நீர்வறட்சி, இரத்த ஒழுக்கு , ஆல்புமின் குறைவு,
இதயச் செயல்திறன் குறை அதிர்ச்சி சிறுநீரகத் தமனி ஒடுக்கம் ஆகியவற்றால் இயல்பாக, சிறுநீரகத்துக்கு வரவேண்டிய இரத்தத்தின் அளவு மிகவும் குறைவதால், திடீர் செயலிழப்பு ஏற்படும். இதற்கு சிறுநீரக முன் குறைச் செயலிழப்பு என்று பெயர். பாம்புக்கடி, நோய்த்தொற்று, ஏற்படும் இரத்தக் குறை சிறுநீரக நெப்ரான்களில் மருந்துகளால் நச்சேற்றம், ஒவ்வாமையால் ஏற்படும் இரத்த ஒழுக்கு, பொருந்தா இரத்தம் ஏற்றுதல் ஆகியவற்றால் ஏற்படும் சிறுநீரக திடீர் செயலிழப்பை சிறுநீரக கோளாறால் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம். சுரக்கப்பட்ட சிறுநீர் சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட கல் அடைப்பால், தடைப்பட்டு தேங்கும். இத்தேக்கத்தால் சிறுநீரக அழுத்தம் மிகைத்து, செயலிழக்கலாம். சிறுநீர்க் குழாய் மரத்தல், மற்றும் சிறுநீரக திசு மரித்தல் ஆகியவற்றால் சிறுநீர் வடிவதில் தடை ஏற்படும். சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வடிவது, கல் மற்றும் புராஸ்டேட் சுரப்பிப் புற்று ஆகியவற்றால் அடைப்படும். சிறுநீர் வடிகுழாய் அடைப்பால் சிறுநீர்ப் பையில் தேக்கம் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
உதாரணமாக பசுவுக்கு காசநோய் இருந்தால் அதன் பாலைக் குடிக்கும் நமக்கும் காசநோய் ஏற்படும். சிறுநீரக காச நோயை கண்டறிய என்ன அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் இருக்கும். அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்படும். மலட்டுத்தன்மை ஏற்படும். அதிகமான வெள்ளைப்பாடும் ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்களுடன் இரத்தம் கசியும். திடீரென்று
காரணமே இல்லாமல் உடல் சோர்வு ஏற்படும். தாங்கமுடியாத இடுப்புவலி ஏற்படும். காரணம் இல்லாமல் உடல் எடை குறையும். இது போன்ற அறிகுறிகள் தெரியாமலும் கூட காச நோய் ஏற்படும். ஏனெனில் காச நோயின் பாதிப்பு ஒரு சிறுநீரகத்தில் மட்டும் இருந்து மற்றொரு சிறுநீரகம் தொடர்ந்து தன் வேலையைச் செய்யும். அதுவும் பழுதுபட்டால்தான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகத்தான் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக உடனே கண்டு பிடித்து விடமுடியாது நோய் முற்றிப் போகும் நிலை ஏற்படும் வரையிலும் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாமல் இருப்பது தான் இந்நோயின் மோசமான தன்மையாகும். சிறுநீரகத்திலுள்ள பல இலட்சச் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள் ( நெப்.` .ப்ரான்கள்) ஒவ்வொன்றாக பழுது அடைந்து கொண்டே வரும். ஆயிணும் இந்த இழப்புகள் குறித்து சிறுநீரகங்கள் கவலைப்படாமல் தொடர்ந்து தம் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாளருக்கு 90 சதவிகிதம் பாதிப்பு ஏற்ப்ட்டபின்பே, சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.
சிறுநீரகச்
செயல் இழப்புக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் முன்பு சிறுநீரகங்களின் செயல்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும், வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். ஆனால் பணி இதோடு முடிந்துவிடுவதில்லை. உடலில் கார அமிலம் சமநிலையை பராமரிப்பது, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது , எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.
இதயம்
தொடர்ந்து
துடித்துக் கொண்டே
இருப்பது
போலவே,
சிறுநீரகங்களும் வடிகட்டும் பணியை
இடைவிடாது
செய்து
கொண்டே
இருக்கின்றன.
மூக்கிரட்டை
சாரணை
நோயின் அறிகுறிகள்:-
எதிலும் கவனம் செலுத்த இயலாமை , எரிச்சல் அடைவது, காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் சண்டை பிடிப்பது, வேலை நேரத்தில் தூங்குவது, வித்தியாசமான முறையில் நடந்துகொள்ளுவது,
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, எப்போதும் கடுகடுவென்று இருப்பது போன்ற மனக்குறிகள் நோயாளரிடம் தென்படும்.
தலைசுற்றல்
, நெஞ்சுவலி,
படபடப்பு,
மூச்சுத்திணறல், கடுமையான தலைவலி, பசியின்மை, இதயம் மற்றும் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளுதல், குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தொடர் விக்கல், இருமும் போது இரத்தம் வெளியாதல், கை கால்களில் வீக்கம், நாக்கில் வறட்சி ஏற்பட்டு, மூர்சுக்காற்றில் துர்வாடை வீசுதல், வலிப்பு மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வாந்தி உயர் இரத்தம் அழுத்தம், மாதவிலக்கில் ஒழுங்கின்மை போன்ற பிரச்சனைகள் வருவதற்கான சில முக்கிய காரணங்கள்
1. தண்ணீர் சரியாக அருந்தாமல் இருப்பது
2.சிறுநீர் கழிக்க சோம்பறைப்படுவது அல்லது சூழ்நிலையின் காரணத்தால் தவிர்ப்பது
மேலே குறியிட்ட பல பிரச்சனைகள் வர முக்கிய காரணம்
1. ரெகுலர் உணவு போன்ற வலிமாத்திரைகள் உண்பதினால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம்.
எனவே, இது போன்ற பிரச்சனையை சரி செய்யவும் வருமுன் தடுக்கவும் மூக்கிரட்டை லேகியம் உள்ளது.
இதில் அடங்கியுள்ள பொருட்கள்
மூக்கிரட்டை சாரணை, நெருஞ்சிமுள் செடி, சிறுகண்பீளை, காசினிக்கீரை, திரிகடுகு திரிபலா, முருங்கைக்கீரை, மல்லி, சீரகம்,
மூக்கிரட்டை
லேகியம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment