குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய !!!

No comments
         குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய!!! 


         இது இரப்பைக்கு கீழேயும் சிறுகுடலுக்கு மேலேயும் குறுக்காக
பக்கவாட்டிலுள்ள ஒரு சுரப்பி, அகலமாக இருக்கும் கனையயப் பகுதியை
தலை என்றும், குறுகிய முனையை வால் என்றும் நடுப்பகுதியைஉடல் மற்றும் கழுத்துப்பகுதி என்று அழைப்பார்கள். கணையத்தில் நாலமுள்ள
சுரப்பி எக்ஸோக்ரைன்  EXOCRINE நாளமில்லா சுரப்பி என்டோக்ரைன்
ENDOCRINE  இரண்டு உள்ளன. எக்ஸோக்ரைன் நாளங்கள் வழியாக இரத்தத்தில் கலக்கும். எனவே கணைய நாளமுள்ள சுரப்பியும்,
நாளமில்லா சுரப்பியும் உள்ள கலப்பு சுரப்பி  MIXED GLAND  என்பார்கள்.
இது சுமார்  15  செ. மீ  நீளமுள்ளதும்   சுமார்  90 கிராம்கள் எடையும் கொண்ட ஒரு மிருதுவான சுரப்பியாகும்.

           அல்வியோலை  ALVEOLY  எனும் கணைய அணுக்கள் சுரக்கும் திரவம் தான் கணைய நீர்  PANCREATIC JUICE  இதில் புரதம், கொழுப்பு, மாவு முதலிய உணவு சத்துக்களை ஜீரணிக்கும் என்ஸைம்கள்  உள்ளன. இந்த நீர் கணைய நாளம் வழியாக பயணித்து பித்தப்பை நாளத்துடன்  BILE DUCT  சேர்ந்து டுயோடினம் எனும்  முன்சிறு குடலுக்குள் நுழைகிறது. இந்த அல்வியோலை எனும் கனைய  நீருக்கு இடையே சிறு சிறு திட்டுக்கள் தீவுகள் போல காணப்படும்.  இதற்கு லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்  என்று பெயர் ISLETS OF LONGERHANS  லாங்கர்ஹான்ஸ் என்ற   விஞ்ஞானி இவற்றை கண்டுபிடித்ததால் இந்த  கணைய தீவுகளுக்கு அவர் பெயரேயே வைத்து விட்டார்கள். இந்த திட்டுகள் சுமார்  10 இலச்சத்திற்கும் மேல் உள்ளதாம், இதில்  ஆல்: . பா, பீட்டா,  டெல்டா, முதலிய உயிரணுக்கள் உள்ளன இவைகளை முரையே  ஏ, பி, டி  என்பார்கள்.

        இதை நீரிழிவு நோய் என்கின்றனர். உடலில் சக்தியை உருவாக்க
உடல் திசுக்களுக்கு குளு கோஸ் தேவைப்படுகிறது, இன்சுலின் குளுகோஸை உடலில்  பல பகுதிகளுக்கு அளவுடன்  வினியோகிக்கிறது, அதிகபடியாக உள்ள குளுகோஸை  க்ளைகோஜென்னாக மாற்றி கல்லீரலின் மேற்பகுதியில் படியவைக்கிறது. உடலில் குளுக்கோஸின் அளவு  குறையும் போது அல்லது அதிகபடியாக தேவைப்படும்பொழுது,  க்ளைகோஜென் குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலந்து  ஈடுகட்டுகிறது. இன்சுலின் இல்லையென்றால் குளுகோஸை சேமித்து வைக்கவோ, அதை மறுபடியும்  உபயோகிக்கவோ முடியாது.

          தொடர்ந்து மது அருந்துவோருக்கு கணையத்தில் மிகக் கொடிய நோயான ஆக்யூட்  பேங்கிரியாடைடிஸ்  ACUTE PANCREATITIS  தாக்கும். இந்த நோயினால் உடனடியாக  மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. கலப்பட உணவு எண்ணைகள் கணையத்தை கெடுத்து விடும் கணையம் கெட்டுவிட்டால் இன்சுலின் சுரப்பு  குறைந்து சர்க்கரை வியாதி தோன்றும்.  அதிக  அளவு காபி, டீ, அருந்துதல், குறைவான காய்கறிகளை  உண்ணுதல், சர்க்கரை நோய்  அதிகமாதல் முதலியவை கணைய நோய்களுக்கு  முக்கிய காரணங்களாக அமைகின்றன.

     
      முதலில் மூளையின் வேலை என்ன என்பதை சுருக்கமாக பார்போம்
உடலில்  ஒவ்வொரு பகத்திலும் இருந்து வரும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப
அடுத்து என்ன  செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டு வழிநடத்தி உடலை இயக்குவது மூளை . இது தலையில் இருப்பது.    அதே மாதிரியான
வேலையை வயிற்றில் இருந்து கொண்டு செய்யும் உறுப்பு ஒன்று இருக்கிறது. நீங்கள் சாப்பிடுவது  பால்சாதமா?  பருப்பு சாதமா? சிக்கன் பிரியாணியா? காய்ந்துபோன பரோட்டாவா?  குடிப்பது காப்பி, டீயா? பழரசமா? என்றெல்லாம் கண்காணித்து ஜீரண மண்டலத்துக்குள்  வரும் பொருள் என்னவோ அதற்கு ஏற்ற சுரப்பினை சரியான அளவி ல் சுரக்கும்படி கட்டளை இடுகிறது கணையம்.

      உடல் சீராகச் சிறப்பாக மூளை நன்றாக இருப்பது எப்படி அவசியமோ
அப்படித்தான் கணையத்தின் அவசியமும்.  வேலை நாளில்  காலையில்
எழுந்து பரபரப்பாக காபியை விழுங்கி  டிபனைக் கொட்டிக் கொண்டு
லஞ்சுப்பேக்கை தூக்கிக்கொண்டு ஓடினாலும் சரி லீவு நாளில்  ஆற அமர்ந்து துளித்துளியாக காபியை உறிஞ்சி, சோம்பல் முகத்துடன் பொங்கலோ, பூரியோ சாப்பிட்டு   மதியம் ஊர்வன , பறப்பன, நீந்துவன, என்று வகைவகையாக ஒரு கை பார்த்தாலும் சரி  கணையம் கட்டளையிட்டால்தான் நீங்கள் சாப்பிட்ட எதுவும் ஜீரணமாகும். அதில் உள்ள சத்து உங்கள் உடலில் சேரும்.

        இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல்  என்று பலவற்றையும் தெரிந்து வைத்திற்கும் அளவுக்கு கணையத்தினைப்பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம் கணையத்தின் செயல்பாடு என்ன என்பதும் அதன் இயக்கம் தடைபட்டால் என்னென்ன பாதிப்புகள்  வரும் என்பதையும் பலரும் உணராமல் இருப்பதுதான்.


     கணையம் முழுமையாக செயல் இழந்துபோனால் நீங்கள் சாப்பிடக்கூடிய ஒரே ஒரு இட்லி கூட , அல்லது ஒரே ஒரு டம்ளர் காபிகூட குடலைக்  கெடுத்துவிடலாம்!                        

                                                கணையத்தின்  பணி:

     கணையம் நீரை சுரக்கச் செய்து. கணையத்தில் உள்ள   அசினார் என்கிற செல்கள் ஜீரணநீரைச் சுரக்கின்றன. அது கணையத்தில் உள்ள நாளத்தின் வழியாக சிறுகுடலைச் சென்று அடைகிறது. இந்த கணைய சுரப்பி  ஒரு  நாளைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லிட்டர் அளவு இருக்கும். அதேசமயம் நீங்கள்  சாப்பிடும் உணவை பொருத்து இது மாறுபட கூடும்.ஏனென்றால் இந்த சுரப்பு நீரில் ஜீரணத்துக்கு அவசியமான என்சைம்கள் மினரல்கள் என்று பலவும் இருக்கிறது.


    நாளமில்லா சுப்பியாகச் செயல்பட கணையத்துக்கு உதவுபவை
அதில் மிதக்கும்  ஆல்பா,  பீட்டா, டெல்டா, செல்கள் இவற்றில் ஆல்பா
செல்கள் குளுக்கானையும் சுரக்கின்றன.  

    ஆபத்தான சுரப்பி:  அரோக்கியத்திற்கு உதவும். இதே சுரப்பி, ஆபத்தாகவும் மாறக்கூடியது. அதாவது  நாம் வளர்க்கும் சல்லிக்கட்டு காளை  வாடிவாசலில்  வெளியே வரும் போது வளர்த்தவர்களையே காளை  சீறி பாய்வதே போன்றது.  ஜீரணத்துக்குத் தேவையான என்சைம்களைச் சுரக்கும்
என்று பார்த்தீர்கள் அல்லவா? அவை மிகமிக அடர்த்தியான அமிலங்கள்
போன்றவை  இவை அதிக நேரம்  குடலில் தங்கினால் அந்த இடமே
அரிக்கப்பட்டு ஓட்டையாகிவிடும் .சுரக்க வேண்டிய அளவுக்குக் குறைந்தால்  ஜீரணம் செய்ய வயிறு திணறும்.  அதிகமானால் வயிறு
கெடும். புரியும்படி சொன்னால், மாவு அரைக்கும் சமயத்தில் போதுமான
நீர் விட வேண்டும் குறைந்தால் கிரைண்டரின் கற்கள் அரைப்பதில்
திணறி சிக்கி, பழுதாகும் மாவும் அரையாது. இதுவே அதிகறித்தாலும்
மாவு நீர்த்து கெடும். கிரைண்டர் சரியாக அரைக்காது. இதேதான்
கணையத்தின் செயலும்.

       உள்ளே அரைபடப் போகிற பொருள் என்ன என்பதை, அது சிறுகுடலை
அடைதற்கு முன்பாகவே தீர்மானித்து அதற்கு தேவையான அளவு என்சைம்களை சுரந்து தயாராக வைக்கிறது கணையம் உணவு மண்டலத்தின் செயல்பாடு,  நாக்கின் சுவை அரும்புகள் உணவைத்
தொடும்போது ஏற்படும் உணர்வில் இருந்து தொடுகின்றன என்பார்கள்.
நாவில் உணவு நன்கு பட்டு  உமிழ்நீரோடு கலக்கும்போதுதான்  உணவு
நன்கு ஜீரணமாகும். உண்டதில் உள்ள சத்து உடலில் ஒட்டும் என்று
சொல்வது இதனால்தான்  அதாவது மெயின் சுவிட்சைப் போட்டதும்
மற்ற இணைப்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்வதுபோல  நாக்கு
நாக்கு உணவைத் தொட்டதுமே, இந்த மாதிரியான உணவு வருகிறது.
என்ர தகவலைப் புரிந்து கொண்டுவிடுகிறது  கணையம். அதற்கு ஏற்ப
ஜீரணநீரைச் சுரக்கச் செய்து முன்னேற்பாடாக தயாராக வைத்துவிடுகிறது.

       இப்படி திட்டமிடல் மூலம் சாப்பிடும் உணவின் தன்மைக்கு ஏற்ப  அமிலம்,  டிரிபின்,  லைப்பேஸ், போன்ற என்சைம்களை சுரக்கச் செய்கிறது. உணவில் மவுச்சத்து இருந்தால் அது குளுகோஸாக மாறும்.
புரோட்டின் இருந்தால் அமினோ அமிலமாகும், கொழுப்பு சத்து இருந்தால்
அது  :. பேட்  ஆசிட்டாகவும் மாறி அங்கிருந்து  கல்லீரலுக்குக் கடத்தப்படும். அதாவது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றுவதற்கு
கலீரலுக்கு அனுப்பப்படும்.

       ஆனால் கணையம் உங்கள் உடல் நலத்தைக் கெடுக்கும் பொருட்களை
நீங்களே சாப்பிடும்போது இயன்றவரை போராடி அவற்றைத் தடுக்கப்
பார்க்கிறது. அந்தப் போராட்டத்தில் அது வலு இழக்கும் சமயத்தில், உள்ளே  செல்லும் பொருட்களின் பாதிப்பால் அதிலிருந்து சுரக்கும் என்சைம்கள் சுரப்புகள் தாறுமாறாகி அதிகறித்தும்  குறைந்தும் குடலைக் கெடுத்து, உடலைக் கெடுத்து முடிவில் உயிரிழப்புக்கே காரணமாகிறது.

                                                  அறிகுறிகள்

         மேல் வயிற்றில் வலி முதுகுத் தண்டில் குத்தல் வலி, உட்கார்ந்தால்
சமாளிக்கும்படி இருக்கும் வலி , படுக்கும் போது அதிகரிக்கும், வாந்தி,
குமட்டல், சிறிது உண்டாலும் நெஞ்செரிச்சல் அதிகரித்து மாரடைப்பு போன்ற மிரட்சி ஏற்படும்.  அதீத உணர்ச்சி வசப்படுத்துதல், தேவையில்லாத நேரத்தில்  அதாவது பசிக்காமலே அடிக்கடி உணவுகளை  அதிக அளவில் எடுத்து கொள்பவர்கள்,  காபி, டீ  போன்றவற்றை அடிக்கடி  (ஒரு நாளைக்கு முறைக்கு மேல் ) குடிப்பவர்கள், தொடர்ந்து அஜீரண உபாதைகள் உள்ளவர்கள் ஆகியோருக்கு   கணைய பாதிப்பு வர  வாய்ப்புகள் அதிகம் உண்டு.
ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக  கணையம்
பாதிக்கப்படும்.   


        மேல்வயிற்றில்  வலி, பித்த அதிகரிப்பு, மஞ்சள்காமாலை நோய்
அறிகுறி,  அஜீரணம், மலம் சளிபோல் ஒழுகுவது, வயிற்றில் பலமாக
அடிபடுதல் போன்ற பிரச்சனைகள்  உங்கள் உடல் நலம் சிறந்திருக்க 
கணையத்தை  கவணிப்பது முக்கியம் என்பதை உணர்ந்து, முதல்
வேளையாக  ஆல்கஹால் பழக்கத்தினை அறவே விட்டுவிடுங்கள்
மனைவி, குழந்தைகளுக்காக   அடுத்து உணவை பசி அறிந்து உண்ணுங்கள்  அடித்து மேலே குறியிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், வருமுன் காக்கவும்    ஆவாரம் பூ சூரணம் பயன் படுத்தலாம்.
   
                                    இந்த சூரணத்தின் சேர்மானங்கள்

   ஆவாரம் பூ, திரிபலா, நாவல், ஓமம், பெருங்காயம், வெந்தயம்,
கருஞ்சீரகம் போன்ற பொருள்கள் உள்ளன.  இதன் பயன்கள்

1, கணையத்தை சீராக இயக்க செய்வது.
2,  கணையப்  புற்றுநோய்யை  தடுக்கிறது.
3,  சர்க்கரை வியாதியை குணமாக்கவும், வருமுன் தடுக்கவும் செய்கிறது.
4,  கல்லீரல் , மண்ணீரலை சீராக இயக்க செய்கிறது.
5,  பித்தப்பையில்  கல் வராமல் பாதுகாக்கிறது.
6,  பித்த நீரை சரியாக சுரந்து, அல்சர் நோயை தடுக்குகிறது
7,  சிறுநீரக செயல்பாடுகளை சீராக இயக்குகிறது.
 என்றும் அன்புடன்

ஹெர்பல்கண்ணன்


  

 No comments :

Post a Comment