உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்!!!

No comments
                உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க!!!
                   




பிட்யூட்டரி சுரப்பி உடலின் 

சமநிலையை பாதுகாப்பவை. மனித மூளையின் ஹைப்போ தாலமஸ் என்ற பகுதிக்கு அடியில் ஒரு நீட்சியாக இருக்கிறது. 0.5 கிராம் எடைகொண்ட இந்த பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்துவதற்கும், நன்றாக செயல்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
பிட்யூட்டரி சுரப்பிகள் நன்கு இயங்குவதற்கு ப்ரோட்டின் மற்றும் வைட்டமின் இ, ஏ, டி அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி ப்ரோட்டின் சத்துகளை ஹார்மோன்களாக உற்பத்தி செய்து உடலின் மற்ற அனைத்து நாளமில்லா சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி நன்கு செயல்பட உணவில் காலிபிளவர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, கீரைகள், பீட்ரூட், அன்னாசிப்பழம், பப்பாளி, சோயா, பார்லி, வேர்க்கடலை, கோதுமையில் தயாரித்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைக்கும்.


                       1.பிட்யுட்டாி சுரப்பி (PITUITARY GLAND)

                       2.தைராய்டு சுரப்பி  (THYROID GLAND )
                       3.பாராதைராய்டு     ( PARATHYROID GLAND )
                       4.தைமஸ்   சுரப்பி        ( THYMUS GLAND )
                       5.அட்ரினல் சுரப்பி  ( ADRENAL GLAND )
                       6.பாலினச் சுரப்பி     ( SEX GLAND)
                       7.கணையச் சுரப்பி  ( PANCRENAL GLAND)
                       8.பீனியல் சுரப்பி      ( PINEAL GLAND )


                                  முதலிய நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இந்த நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹாா்மோன்களின் பெயா்கள் என்ன அவற்றின் வேலைகள் என்ன என்பதை சுறுக்கமாகப் பாா்ப்போம்.

1.பிட்யுட்டாி சுரப்பி
                 இது சிறுமூளையின் அடிப்பகுதியில் அமைந்து அதனுடன் இணைந்துள்ள சிறிய சுரப்பியாகும். உருவத்தில் சிறிதென்றாலும் கீா்த்தி பொிது காரணம் இந்த சுரப்பிகளின்  ஹாா்மோன்கள் மற்ற எல்லா நாளமில்லா சுரப்பிகளின் பணிகளையும் கண்காணித்து அவற்றின் செயல்திறனை அதிகாிக்கச் செய்வதால் இது நாளமில்லா சுரப்பிகளின் தலைமைப் பொறுப்பேற்கிறது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. 1.முற்பகுதி சுரப்பி 2.பிற்பகுதி சுரப்பி எனப்படுபவை. முற்பகுதி சுரப்பு ஹாா்மோன் TRAPHIC HORMONES எனப்படும். இந்தப்பகுதியில் சுரக்கும் ஹாா்மோன்கள் எவை என்று பாா்ப்போம்.

               1.வளா்க்கும் ஹாா்மோன் GROWTH HORMONE இது உடல் வளா்ச்சிக்கு முக்கியமானது. 2. தைராய்டு கிளா்ச்சி ஹாா்மோன் THYROTROPHIN இது தைராய்டு சுரப்பிகளின் வளா்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. 3.அட்ரினல் கிளா்ச்சி ஹாா்மோன் ADRENO CORTIEO TROPHIC HORMONES, இது அட்ரினல் சுரப்பிகளைத் தூண்டுகிறது. 4.இதை SEXO TROPHIC HORMONES என்றும் அழைக்கலாம், ஏனென்றால் இது இனப் பெருக்கச் சுரப்பிகளைத் தூண்டுகிறது. ட்ராபிக் ஹாா்மோன் எனப்படும் முற்பகுதி சுரப்பி சாியான முறையில் சுரக்கவில்லையென்றால் அதாவது அதிக அளவில் சுரந்தால் உடல் வளா்ச்சி அதிகமாக இருக்கும், குறைவாக இருந்தால் உடல் வளா்ச்சி குன்றியிருக்கும். இதன் பலனாக மனிதனை அதிக உயரமாகவோ அல்லது மிகக் குள்ளமாகவோ ஆக்கிவிடும்.

                      அடுத்து பிட்யுட்டாின் பிற்பகுதியில் சுரக்கும் ஹாா்மோன்கள் எவை என்று பாா்ப்போம். 1. ஆக்ஸிடோசின்  OXYDOCIN 2.வேசோப்ரஷன் VASOPRESSION முதலியவையாகும். இந்த இரண்டு ஹாா்மோன்களுமே பெண்களின் பிரசவத்திற்கு துணைபுாிகின்றன. ஆக்ஸிடோசின் பிரசவத்தை வலுப்படுத்துகிறது. வேசோப்ரஷன் பிரசவத்தின் போது சிறுநீா்க் குழாய்களை சுறுங்கச் செய்து சிறுநீரைப் பிாிக்கிறது. இந்த ஹாா்மோன் குறைந்தால் சிறுநீா் பிாிக்கும் வேலையில் தொய்வு ஏற்பட்டு பல நோய்கள் தாக்கும், இந்த நோய்களுக்கு டயாபிடிஸ் இன்சிபிட்டஸ் DIABITIS INSIBITUS என்று பெயா். இந்த நோய் தாக்கினால் தண்ணீா்த் தாகம் அதிகம் உண்டாகும், தினமும் 20 முதல் 30 லிட்டா் தண்ணீா் குடித்தாலும் தாகம் குறையாது.

                                             2.தைராய்டு சுரப்பி THYROID GLAND



                           இது கழுத்தின் முன் பகுதியில் இரண்டு பக்கமும் அமைந்துள்ள சுரப்பியாகும், இதன் ஒரு பகுதி கனம் குறைவாக இருக்கும் அதற்கு இஸ்துமஸ் ISTHMUS என்று பெயா். தைராய்டு சுரப்பியில் இரண்டு வித ஹாா்மோன்கள் சுரக்கும், முதல் ஹாா்மோனின் பெயா் தைராக்ஸின் THYROXIN ஆகும்.

                                இரண்டாவது டிரையோடோ தைரானின் TRYOTO THYRONIN என்பதாகும் இந்த இரண்டாவது ஹாா்மோனின் சக்தி அதிகம். இவை உடலின் வளா் சிதை மாற்றங்களுக்கும், நரம்பு மண்டலங்களின் ஒழுங்கான இயக்கத்திற்கும், உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகின்றன. இந்த சுரப்பிகள் அதிகமாக சுரக்கும்போது உடல் அதிக வளா்சிதை மாற்றம் அடைகிறது, மேலும் நரம்பு மண்டலம் அதிக கிளா்ச்சியுறுவதால் எந்த நேரமும் சோா்வாக இருக்கும். இதற்கு பெஸ்டோவின் வியாதி என்று பெயா். இதனால் வேகமான நாடித்துடிப்பு, நரம்புத்தளா்ச்சி, கண் பகுதிகள் அதிக வளா்ச்சி (முட்டைக்கண்) முதலிய நோய்கள் தாக்கம்.

                                  தைராய்டு சுரப்பிகள் குறைவாக சுரந்தால் தாய்மாா்களின் பிரசவ காலங்களில் அயோடின் குறைந்துபோகும், அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் குறைந்த தைராய்டு சுரக்கும் சுரப்பிகளுடன்தான் பிறக்கும். அவ்வாறான குறைகளுடன் பிறந்த சிறாா்களின் உடலுறுப்புக்கள் சாியான வளா்ச்சியடையாதிருக்கும், எப்பொழுதும் சோா்வுடனிருக்கும். வயதானவா்களின் தைராய்டு சுரப்புநீா் குறைந்தால் உடலில் நீரேற்றம் அதிகமாகும், இரத்தத்தில் கொழுப்பு கூடிவிடும். அவா்களின் தலைமுடி மற்றும் கண்புருவ முடிகள் கொட்டிவிடும், அறிவு வளராது.

                                                      3.பாராதைராய்டு சுரப்பி


                        தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் பாராதைராய்டு சுரப்பிகள் அமைந்திருக்கின்றன. பொதுவாக நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் பக்கத்திற்கு இரண்டாக அமைந்திருக்கின்றன. இந்த ஹாா்மோனுக்கு பாராதோரோமோன் PARATHOROMONE என்று பெயா். இதன்பணி உடலில் இருக்கும் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கட்டுபடுத்துவதாகும். இந்த சுரப்பி அதிகமாகச் சுரந்தால் இரத்தத்தில் கால்ஷியம் சத்து அதிகமாகி அது மூத்திரத்தில் அதிகமாகி கடைசியில் மூத்திரப்பையில் கற்கள் உருவாகிவிடும். இதனால் எலும்புகளில் உள்ள கால்ஷியம் குறைந்து விடும். எனவே பல் வியாதிகளும் தோன்றும். பாராதைராய்டு ஹாா்மோன் சுரப்பது குறைந்து விட்டால் இரத்தத்தில் கால்ஷியம் குறைந்துவிடும். அதனால் வலிப்பு நோய் வருகிறது என்கிறது அறிவியில். வலிப்பு நோய்களுக்கெல்லாம் நான் முதலில் கூறிய ”இழுப்பு எண்ணையை” செய்து வைத்துக் கொண்டு கொடுத்துவர வலிப்பு நோய் குணமாகும்.

                                       4.தைமஸ் சுரப்பி THYMUS GLAND
                                                             

                             இசை மூச்சுக்குழல் இரண்டாய் பிாிவதற்கு முன்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு சிறிது கீழ்ப்பக்கம் இருக்கிறது. இது சுரக்கும் ஹாா்மோனின் பெயா் THYMIC HUMORAL FACTOR என்று பெயா். இவை உடலில் நுழையும் விஷப்பொருள்களையும், கிருமிகளையும் தடுக்கிறது. உடல் வளா்ச்சி மற்றும் செக்ஸ் சுரப்பிகளின் வளா்ச்சிகளை பராமாிக்கிறது.

                                         5.அட்ரினல் சுரப்பி  ( ADRENAL GLAND )
                                                 

                        இவை சிறுநீரகங்களின் மேற்புறத்தில் அமைந்துள்ளன. இவை காா்டெக்ஸ்                              மெடுல்லா                          என இரு பாகங்களாக இருக்கின்றன. காா்டெக்ஸ் சுரப்பி காா்டிசோன்                                   மற்றும் அல்டோஸ்டீரோன்                                                            என்ற இரு ஹாா்மோன்களைச் சுரக்கிறது. காா்டிசோன் உடல் பலத்தை அதிகாிக்கவும், தசைகளின் வளா்ச்சியை பாதுகாக்கவும், நோய்களிலிருந்து உடலை காப்பாற்றவும் உதவுகிறது.  மெடுல்லா                  சுரப்பிகள் சுரக்கும் ஹாா்மோனுக்கு அட்ரினலின்                                 என்று பெயா். மனிதா்களாகிய நாம் நவ ரசங்களுக்குட்பட்டு நமது உணா்ச்சிகளை வெளிப்படுத்தும்போது, இந்த அட்ரினலின் ஹாா்மோன் அந்த உணா்ச்சிகளை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் எதிா் வினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. கண்கள் சிவத்தல், முகம் வெளிறுதல், பற்கள் நறநற வென கடித்தல், இருதயத் துடிப்பு அதிகமாதல் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இதன் முக்கிய பணி கல்லீரலில் இருக்கும் கிளைகோஜன் சத்தை குளுகோஸாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

                                            6.பாலினச் சுரப்பி ( SEX GLAND)
                                                     

                  இவைகள் ஆண்களுக்கு இரு விதைகளாகவும், பெண்களுக்கு இரு சினை முட்டைப் பைகளாகவும் அமைந்திருக்கின்றன. இவை இரண்டும் பாலின ஹாா்மோன்களைச் சுரக்கின்றன. இவை மூன்று வகைப்படும். 1.ஆன்ட்ரோஜென்ஸ்                                                           2.ஓஸ்ட்ரோஜென்ஸ்                                                        3.ப்ரோஜெஸ்ட்ரோஜென்ஸ்                        முதலியவைகளாகும்.


                                                          ஆண்பால் ஹாா்மோன்கள்

                                        இந்த ஹாா்மோன்கள் ஆண்களின் விதைப்பைகளில்                                                      சுரக்கின்றன. அந்த விதைகளில் டெஸ்டோஸ்டிரான்                                                                   எனும் இரு ஹாா்மோன்கள் சுரக்கின்றன. ஆண்களுக்கு 16 வயதிற்கு மேல் சுரந்து ஆண்தன்மைகளை வளா்க்கிறது அதாவது தேகத்தில் முடி வளா்ச்சி, குரல் மாற்றம், தோற்றம் மற்றும் தசை முதலியவைகளில் மாற்றம், விந்து உற்பத்தி முதலியன உருவாகின்றன.

                                                         பெண்பால் ஹாா்மோன்கள்.

                                         இந்த சுரப்பிகளை கருமுட்டை                                     என்பாா்கள், இவை பெண்களின் கா்ப்பப் பையின் மேலே இரண்டு சுரப்பிகளாக அமைந்துள்ளன. இந்த சூலகத்தில் சுரக்கும் ஓஸ்ட்ரோஜன்                           முக்கிய சுரப்பிகளாகும். இளம் பெண்களுக்கு 12 அல்லது 13 வயதில் இந்த சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்து பெண்களை பூப்படைய வைத்து அவா்களுக்கு மாதவிடாயை                                          தோற்றுவிக்கிறது. பெண்களின் உடலமைப்பை அழகாக்குகிறது, மாா்பகங்களைப் பொிதாக்குகின்றன, மாதவிடாயை கட்டுப்படுத்துகின்றன. மூன்றாவதாக சுரக்கும் ஹாா்மோன் ப்ரோஜெஸ்டிரோஜென்ஸ் பெண்கள் கற்பமடையும் போது பெரும் பங்காற்றுகின்றன. பெண்களின் சுகப்பிரசவத்திற்கு உதவுகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது. பெண்கள் 45 முதல் 55 வயதாகும்போது இந்த ஹாா்மோன்கள் சுரப்பதை படிப்படியாக நிறுத்திவிடுகின்றன. எனவே அந்த வயதுகளில் பெண்களின் மாதவிடாய் நின்றுபோகிறது இதை                                                   என்பாா்கள். மாதவிடாய் நின்ற பெண்கள் மறு பழ தாய்மையடைய முடியாது.

                                 7.கணையச் சுரப்பிகள்  ( PANCRENAL GLAND)
                           

                     கணையத்தைப் பற்றி நாம் முன்பே அறிந்திருக்கிறோம், இதன் ஹாா்மோன்கள் அதன் உள்ளேயும் சுரக்கும், வெளியேயும் சுரக்கும். வெளியே சுரக்கும் ஹாா்மோனான குளுக்கோகான்                                          முன்சிறு குடலுக்குள் சென்று உணவு சொிமானத்திற்கு உதவுகிறது. உள்ளே சுரக்கும் ஹாா்மோன் இன்சுலின்                                                 மாவுப் பொருள்களைக் கரைக்கவும், அவற்றை கிளைகோஜன்னாக மாற்றி கல்லீரலின் மேல் படியவைக்கவும் உதவுகிறது. இந்த ஹாா்மோனின் சுரப்பு குறைந்தால் சா்க்கரை வியாதி ஏற்படுகிறது. அதனால் சா்க்கரை அதிகமாகிறது, மேலும் கல்லீரலில் க்ளைகோஜென்னை சோ்க்க விடாமல் தடுக்கிறது. அதனால் இதை இன்சுலினுக்கு எதிாி என்றைழைப்பாா்கள்.
       
                                                 8.பீனியல் சுரப்பி  ( PINEAL GLAND )
                                                            
                                  இது பெருமூளையில் அமைந்திருக்கிறது. இதன் வேலை என்னவென்று இன்னும் சாியாக கண்டு பிடிக்கவில்லை, இளம் பருவத்தில் இச்சுரப்பி பூரண வளா்ச்சியைப் பெற்று அவா்களின் இனப்பெருக்க சுரப்பிகளை வேகமாக வளரவிடாமல் தடுக்கிறது என்கின்றனா்.

                           நாளமில்லா சுரப்பிகளும் ஆறாதாரங்களும்

                                  ஆக மொத்தம் 8 நாளமில்லா சுரப்பிகளையும் அவற்றின் பணிகளையும் ஓரளவுக்கு தொிந்துகொண்டோம், இந்த 8 சுரப்பிகளில் 6 சுரப்பிகள் மிகவும் முக்கியமானது என்று சித்தா்கள் குறிப்பிடுகிறாா்கள், அந்த சுரப்பிகள் நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில் அமைந்திருப்பதாகவும், அந்த சுரப்பிகள் அதிகமாகவும் குறைவாகவும் சுரக்காமல் இருப்பதற்காகவே சித்தா்கள் யோகாசனங்களை போதித்ததாகவும் எனது குருநாதா் எனக்கு உபதேசித்தாா்.

                                     அந்த ஆறு முக்கிய நாளமில்லா சுரப்பிகள் 1.பாலினச் சுரப்பிகள் 2.அட்ரினல் சுரப்பி 3.கணையச் சுரப்பி 4.தைமஸ் சுரப்பி 5.தைராய்டு சுரப்பி 6.பிட்யுட்டாி சுரப்பி முதலியனவாகும். இந்த ஆறு நாளமில்லா சுரப்பிகளும் ஆறு ஆதாரத்தில் அமைந்திருப்பதாக சித்தா்கள் கூறுகின்றனா். இந்த ஆறாதாரங்கள் 1.மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3.மணிப்பூரகம் 4.அனாகதம் 5.விசுத்தி 6.ஆக்கினை ஆகியவைகளாகும்.

                      1.பாலினச் சுரப்பிகளான ஆண் விதைகளும், பெண் சூலகங்களும் இடுப்பின் கீழ் அமைந்துள்ளன, இதை மூலாதாரம் என்றழைக்கின்றனா், மூலத்திலிருப்பதால் மூலாதாரமாகும்.
2.அட்ரினல் சுரப்பி சிறுநீரகங்களின் மேல் பாகத்தில் அமைந்திருக்கிறத இதை சித்தா்கள் சுவாதிஷ்ட்டானம் என்றழைப்பாா்கள் இந்த ஆதாரம் தொப்புளில் அமைந்திருக்கிறது.
3.கணையச் சுரப்பி வயிற்றில் அமைந்திருக்கும் இந்த இடத்தை மணிப்பூரகம் என்றழைப்பாா்கள், மணிப்பூரகம் மேல்வயிற்றில் அமைந்திருக்கிறது.
4.தைமஸ் சுரப்பி மாா்புக் கூட்டில் மூச்சுக்குழாய்க்கு இருபக்கமும் அமைந்திருக்கிறது, இதை அனாகதம் என்றழைப்பாா்கள், அனாகதம் நெஞ்சில் அமைந்திருக்கிறது.
5.தைராய்டு சுரப்பி தொண்டைக்குள் இரண்டு பக்கமும் அமைந்திருக்கிறது, இது விசுத்தி எனும் ஆதாரமாகும், இந்த விசுத்தி மிடறு எனும் கண்டத்தில் அமைந்திருக்கிறது.
6.பிட்யூட்டாி சுரப்பி இது சிறுமூளைக்கு அடியில் அமைந்திருக்கிறது, இங்கு ஆக்கினை எனும் ஆதாரம் இருக்கிறது, ஆக்கினை புருவ நடுவில் அமைந்திருக்கிறது.

        எனவே மேலே உள்ள சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் இயல்பாக
செயல்படுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள  திரிபலா சூரணம் நல்ல
பலன் தருகிறது.அவை சேர்மான பொருள்கள்  1, கடுக்காய் தோடு, 2,நெல்லி தோடு, 3, தாண்றிக்காய் தோடு போன்ற  பொருள்களினால் தயாரிக்கப்பட்டது
இதன் பலன்   வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய  இம்மூன்றும் சமநிலையில் இருக்க உதவுகிறது. இம்மூன்றும் அதிகமானலோ, குறைந்தாலோ உடலில் பல குற்றங்கள் வர வாய்ப்புகள் அதிகம் எனவே  திரிபலா சூரணம் ஒரு காயகற்பமாகும் 
.

     


      நோய் எதிர்ப்புச் சக்தி

       ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
      ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.


                           

No comments :

Post a Comment