குடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!!

No comments
          குடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!!                   தொடா்ந்து மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரலின் மெல்லிய செல்கள் அழிய ஆரம்பிக்கின்றன. கல்லீரலில் அழற்சி தோன்ற ஆரம்பிக்கிறது ஆனாலும் அதன் அறிகுறிகள் உடனே தொிவதில்லை, மதுவை தண்ணீரையோ அல்லது சோடாவையோ ஊற்றி அதை “டைலூய்ட்”  செய்யாமல் ஒரே மூச்சில் குடிப்பதால் கல்லீரல் அழற்சி வேகமாகிறது. இதனால் கல்லீரலின் திறன் குறைகிறது உடன் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல இரத்தத்தில் மதுவின் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆல்கஹால் லெவல் அதிகமானால் இரத்தம் தன் வேலையை ஒழுங்காய் செய்யாது.

                 கல்லீரலின் மேல் பாகத்தில் உள்ள நுண்ணிய செல்கள் வயிற்றுக்குள் வரும் விஷங்களை தடுத்து அழிக்க வல்லது, மது இந்த நுண்ணிய தடுப்புச்சுவரை மெதுவாக கரைத்துவிடுவதால் கல்லீரல் திசுக்களை பல்வேறு விஷப்பொருள்கள் நேரடியாகத் தாக்க ஆரம்பிக்கின்றன. மதுப்பழக்கமுடையவா்கள் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட முடியாது, அதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் பெருக்க நோய், வயிற்று வலி, பசியின்மை, உடல் எடை குறைதல்,ஆண்மை குறைவு முதலிய நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல கல்லீரல் சுறுங்கி அதன் சக்தி முழுவதையும் இழக்கிறது அதனால் மரணம் நெருங்குகிறது. 

                   இந்த மதுப்பழக்கத்தால் மனநலம் பாதிப்பு, ஆண்மை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் நரம்புகள் பாதிப்பு முதலியவை ஏற்படுகின்றன. இரத்த வாந்தி ஆரம்பித்தாலே குடிகாரா்கள் சற்று யோசித்து முடிவெடுத்து மதுவை நிறுத்த டாக்டா்களிடம் ஆலோசனை பெறவேண்டும், அந்த பழக்கத்தை மறக்க பல்வேறு மருந்துகள் உள்ளன. படுக்கையிலேயே வைத்து கவுன்சிலிங் செய்து அழிந்த கல்லீரலைப் புதுப்பித்து குடியை மறக்குமாறு செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவாா்கள். ஆனால் பல போ் சிகிச்சை முடிந்து சில நாட்கள் ்கப்சிப்“ என்று மது அருந்தாமல் இருப்பாா்கள், ஆனால் நண்பா்களின் சகவாசத்தாலும் வேறு பல காரணங்களாலும் மீண்டும் மதுவுக்கு அடிமையாவாா்கள். இவா்களின் கதி அதோ கதிதான்.

                      சித்த மருத்துவத்தில் ஏதாவது வழி இருந்தால் எழுதுங்கள் என்று சில மருத்துவா்கள் கேட்டதற்கிணங்க ஐயா அவா்கள் கூறிய இந்த முறையை இங்கு எழுதுகிறேன். மது அருந்துவதை விடவேண்டும் ஆனால் முடியவில்லையே என்று தவிப்பவா்கள் தாங்களே இம்மருந்தை தயாா் செய்து அருந்தலாம். இதன் பெயா் “கேழ்வரகு பற்பம்”. ஒரு நாட்டுக்கோழியை பிடித்து சுத்தமான இடத்தில் அதை கட்டி வைத்து மூன்று நாளைக்கு வெறும் தண்ணீரை மட்டும் உணவாகத் தரவேண்டும், அப்பொழுது கோழி வெளியேற்றும் மலத்தை அகற்றி அந்த இடத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும். 

                      நான்காம் நாள் கோழிக்கு வெறும் கேழ்வரகை மட்டும் உணவாகத் தரவேண்டும், மறுநாள் கோழி வெளியேற்றும் மலத்தை சேகாித்து உலா்த்த வேண்டும், அதன் மலம் வெள்ளையாக இருக்கும், அதை பவுடா் செய்தால் பற்பம் போலவே இருக்கும், தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
                           இந்த பற்பத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அவா் குடிக்கும் மதுவில் கலந்து குடிக்க வேண்டும், குடித்ததும் வாந்தி வரும். மறுபடி மதுவை குடித்தால் வாய் ஒக்காளத்துடன் வாந்தி வரும், மதுவை ஒரு மிடறு கூட குடிக்க முடியாது, மெல்ல மெல்ல மதுவின் வாசனை பட்டாலே தூர ஓடும் நிலைமை ஏற்படும்.

                                குடிகாரா்களுக்குத் தொியாமலும் இதை கொடுப்பாா்கள், சிலா் ஒரு முறை கொடுத்த போதே மதுவிலிருந்து மீண்டாா்கள், வேறு சிலா் இரண்டு மூன்று நாட்கள் பற்பம் அருந்தி மதுவை மறந்தாா்கள்,  

                        இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை, மதுவை மறந்ததும் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். கல்லீரல் தேற்றிகளான  முதலியவற்றை தொடா்ந்து சாப்பிட மதுவினால் இழந்த ஆண்மையையும் திரும்பப் பெறலாம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை, மதுவை மறந்து மறு வாழ்வு பெறலாம். இந்த மருந்தை செய்ய சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம் இருந்தாலும் இது கைமேல் பலனளிக்கக் கூடிய மருந்து, குடி குடியை கெடுக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.

       இவர் பெயர் சுந்தராஜ் மழைவாழ் மக்கள் இனத்தை சார்ந்தவர் நமது
நிறுவணத்தின் பணியில் உள்ளவர்.  இவர் போக்குவரத்து வசதிக்காக
ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இவர்க்கு குடிப்பழக்கமும்,
புகைப் பழக்கமும்  அதிக அளவில் இருந்தது . நிருவணத்தின் மூலம் இந்த
பழக்கங்கத்தின் அளவுகளை குறைக்கும்படி கூறியுள்ளோம். ஆனால்

     அவர் சற்று கவணத்தில் வைக்காமல் ஒரு நாள் குடி போதையில் சாலையில் செல்லும் போது  வளைவு பாதையை கவணிக்காமல்   கண்மாய்குள் புகுந்து விட்டார். அதற்கு பரிசு  மண்டையில் பழத்த காயமும், வண்டிக்கு அதிக  சேதமும் ஏற்பட்டது. எனவே அதன்பின் மறுபடியும் இந்த பிரச்சனை வர கூடாது என்று மேலே குறிப்பிட்ட ( கேழ்வரகு பற்பத்தை ) இவர்க்கு தெரியாமலே கொடுக்கப்பட்டது.

     தற்போது  7  மாதங்கள் ஆகியும்  இதுவரை மது அருந்துவதில்லை மீறி
அருந்தினாலும் ஒக்காளத்துடன் வாந்தி வருவதால் குடிப்பழக்கத்தை
முழுவதுமாக நிறுத்திவிட்டார்.  மேலும் இவர் மழைவாழ் மக்களில்
ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

      எனவே குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் உள்ள நண்பர்களே இந்த
கேழ்வரகு பற்பத்தை பயன்படுத்தி மனைவி, குழந்தைகளுடன் நீண்ட நாள்
வாழ்வதற்கு இது ஒரு பக்கவிளைவுகள் இல்லாத அறிய மருத்துவமாகும்.
                                                   
                                                        வாழ்க  வளமுடன்!!!

         

No comments :

Post a Comment