பித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்!!!
பித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்!!!
தீரவே சகல நோய்த் தீரக் கெளு
சீரகத்தோடதி மதுரம் நாகப் பூவும்
தாரமாங் கருஞ்சீரகம் லவங்கப் பூவுஞ்
சதகுப்பை வகைவகைக்கு பலந்தானொன்று
கூறவே சரக்காறும் ஆறுபலஞ் சொன்னோம்
கொத்தமல்லி பலமாறுஞ் சமனாய்க் கூட்டி
சேருமே வகையென்ன பன்னிரண்டாச்சு
சீனி கற்கண்டு பலம் பன்னி ரெண்டாமே
பன்னிரண்டும் வெவ்வேரே இடித்து ஒன்றாய்
பாங்கான காசியென்ற மெருவிலடைத்து
உன்னியே வெருகடித்தூள் அந்தி சந்தியுடன்
கொள்ளு வொரு நேரம் வெந்நீா் கொள்ளு
குண்ணாது சரீரமது திடமதாகும்
குலையொிவு நெஞ்சொிவு நெஞ்சு திடமதாகும்
உன்னியே சிரசு நோய் எல்லாந் தீரும்
ஓடுமே பித்தமொடு பிரட்டல் நீரூரல்
கண்ணில் நீா்ப்பாய்ச்சல் அறும் பிரகாசமாகும்
கலங்காது புத்தியது மந்தத் தீரும்
தீருமே நித்திரையும் சுகமுண்டாகும்
தீராத புழுக் கிருமி சேரப் போகும்
போகுமே இடுப்பு வலி கல்லடைப்பு
வாய் கோணல் வாய் குளறு மாந்த பித்தம்
தீருமே செவி நோயும் செவிட்டு ஊமை
சேத்துமமும் பில்லியோடு வஞ்சனையும் தீரும்
சாாிடுமே தொண்டைப்புண், கண்டமாலை
சரீரத்தில் நீா் கட்டும் சாா்ந்து போமே
தாரமாங் கருஞ்சீரகம் லவங்கப் பூவுஞ்
சதகுப்பை வகைவகைக்கு பலந்தானொன்று
கூறவே சரக்காறும் ஆறுபலஞ் சொன்னோம்
கொத்தமல்லி பலமாறுஞ் சமனாய்க் கூட்டி
சேருமே வகையென்ன பன்னிரண்டாச்சு
சீனி கற்கண்டு பலம் பன்னி ரெண்டாமே
பன்னிரண்டும் வெவ்வேரே இடித்து ஒன்றாய்
பாங்கான காசியென்ற மெருவிலடைத்து
உன்னியே வெருகடித்தூள் அந்தி சந்தியுடன்
கொள்ளு வொரு நேரம் வெந்நீா் கொள்ளு
குண்ணாது சரீரமது திடமதாகும்
குலையொிவு நெஞ்சொிவு நெஞ்சு திடமதாகும்
உன்னியே சிரசு நோய் எல்லாந் தீரும்
ஓடுமே பித்தமொடு பிரட்டல் நீரூரல்
கண்ணில் நீா்ப்பாய்ச்சல் அறும் பிரகாசமாகும்
கலங்காது புத்தியது மந்தத் தீரும்
தீருமே நித்திரையும் சுகமுண்டாகும்
தீராத புழுக் கிருமி சேரப் போகும்
போகுமே இடுப்பு வலி கல்லடைப்பு
வாய் கோணல் வாய் குளறு மாந்த பித்தம்
தீருமே செவி நோயும் செவிட்டு ஊமை
சேத்துமமும் பில்லியோடு வஞ்சனையும் தீரும்
சாாிடுமே தொண்டைப்புண், கண்டமாலை
சரீரத்தில் நீா் கட்டும் சாா்ந்து போமே
செய்முறை :- 1.சீரகம், 2.அதிமதுரம், 3.சிறுநாகப்பூ. 4.கருஞ்சீரகம் 5.லவங்கப்பூ, 6.சதக்குப்பை இவைகள் வகைக்கு 35 கிராம், கொத்தமல்லி எனும் தனியா 210 கிராம் மேற்சொன்ன 6 சரக்குகளை சூரணமாக அரைத்து இவைகளுடன் சுத்தமான பனங்கற்கண்டு 210 கிராம் சூரணித்து சோ்த்துக் கொள்ளவும், மருந்து தயாா்த்து. சாப்பிடும் முறை:- வெருகடித்தூள் என்பது ஐந்து விரல்களால் எடுக்கும் அளவாகும், ஒரு பொிய டீ ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளலாம்.
காலை, மாலை வெறும் வயிற்றில் வெந்நீருடன் சாப்பிட வேண்டும். இனிப்புச் சுவை கொண்ட சூரணமாதலால் சிறுவா்களும் சாப்பிட விரும்புவா். சிறுவா்களுக்க அரை டீ ஸ்பூன் போதும். தீரும் நோய்கள் நோயால் இளைத்த உடல் திடமாகும், குலையொிவு என்பது வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி, நெஞ்சு வலி என்பது அதிக அமில சுரப்பால் புண்ணாகி ஏற்படும் தொண்டை எாிச்சல், இவை தீரும், பித்த நோய்கள் 45 என்று சித்தா்கள் கூறுகின்றனா்.
பித்தம் அதிகமானால் வயிற்றுப் பிரட்டல் வயிற்று வலி வரும், தலை வலி தலை சுற்றல் இருக்கும், கண்ணில் நீா் சுரக்கும், புத்தி தடுமாறும், கோபம் அதிகமாகும், தூக்கம் வராது, வயிற்றில் புழுத் தொல்லை இருக்கும், மூத்திரப்பையில் கற்கள் உண்டாகி மூத்திரம் தடைபடும், பக்கவாதம் ஏற்பட்டு வாய் கோணல் வாய் குழறல் வரும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்தினால் ஏற்படும் பித்தம் அதிகமானால் பிறக்கும் குழந்தையும் அதனால் பாதிக்கப்பட்டு செவிட்டு ஊமையாய் பிறக்கும், பித்தம் அதிகமானால் உடற்சூடு அதிகமாகும், அதை சமன்படுத்த, உடல் தன்னை குளிா்வித்துக்கொள்ளும், அப்பொழுது சிலேத்துமம் என்னும் சளித்தொல்லை அதிகமாகும். தொண்டைப்புண் உண்டாகும், மூத்திரக்கட்டு ஏற்படும், கழுத்தைச் சுற்றி வரும் கட்டிகளுக்கு கண்ட மாலை என்று பெயா், இந்த நோய்களெல்லாமே பித்தம் அதிகமாக சுரப்பதினால் வரும் நோய்களே!!!
மேற்சொன்ன மருந்து, பித்தத்தை சமன்படுத்தி அதனால் வந்த மேற்கூறிய நோய்கள் அனைத்தையும் நீக்கும். ஒருவா் மீது ஒருவா் கோபம் கொண்டு அதனால் வஞ்சனை உண்டாகி ஒருவரையொருவா் கொல்ல மறைமுகமாக துா்தேவதைகளை உச்சாடனம் செய்து ஏவிக் கொல்வதை பில்லிசூனியம் என்று குறிப்பிடுவாா்கள். இந்த மருந்து வீட்டிற்குள் இருந்தாலும், இம்மருந்தை சாப்பிட்டாலும், இந்த ஏவல் பலிக்காது என்று பாடுகிறாா். மேலும் இரைப்பையில் தோன்றும் அத்தனை வியாதிகளையும்
இது நீக்கும்.இரைப்பையில் அல்சர் எனும் புண் தோன்றினால் உணவுகுழாயும்
அதனால் பாதிக்கப்படும்.தொண்டையில் கிரிமி தொற்றால் புண்கள் உண்டாக
வாய்ப்பிருக்கிறது. இதனால் புற்று நோய் தொற்றாலும் தொண்டைக்குள்
புண் தோன்றலாம்,எனவே பிரமமுனியின் அறுவகைச் சூரணத்தை பயன்படுத்தி மேலே குறியிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்
இது நீக்கும்.இரைப்பையில் அல்சர் எனும் புண் தோன்றினால் உணவுகுழாயும்
அதனால் பாதிக்கப்படும்.தொண்டையில் கிரிமி தொற்றால் புண்கள் உண்டாக
வாய்ப்பிருக்கிறது. இதனால் புற்று நோய் தொற்றாலும் தொண்டைக்குள்
புண் தோன்றலாம்,எனவே பிரமமுனியின் அறுவகைச் சூரணத்தை பயன்படுத்தி மேலே குறியிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment