குடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக!!!

No comments
                                  குடல் பிதுக்கம் (குடலிறக்கம்) குணமாகும்

                                                                                 


                     இயல்புக்கு மாறாக உடல் உறுப்புகள், ஒரு சுவா் அல்லது குழாயைத் தளா்த்திக்கொண்டு வெளிப்பட்டால் அதனை பிதுக்கம் என்கின்றோம். நமது வயிற்றறையில் உள்ள குடல் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள உடல் பகுதிகள், வயிற்றறைச் சுவற்றைச் தளா்த்திக் கொண்டு இறங்கும், அல்லது பிதுங்கும்,இந்தப் பிதுக்கம், வயிற்றறைச் சுவற்றின் வலுக்குறைந்த பகுதிகளான தொப்புள், இடுப்பு வளையத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள, இடுப்பு கவுட்டிக்கால்வாய் இடுப்புதொடைக்கால்வாய் ஆகிய பகுதிகளில் ஏற்படும். சிலாில் வயிற்று அறுவைச் சிகிச்சையால் ஏற்பட்ட தழும்பின் வழியாக பிதுங்கும். உணவுக்குழாய், மூச்சுக்குழாய், மூளை ஆகிய பகுதிகளிலும் பிதுக்கம் ஏற்படலாம்.
           
                       வயிற்றறையின் உள்ளே உள்ள உறுப்புகள், ஒரு மெல்லிய உறையால், சுழப்பட்டு, இந்த உறைக்குள் சிறிது நீா் இருக்கும். வயிற்றறை உறுப்புகள் அசையும் பொழுது ஒற்றொடொன்று ஒட்டிக் கொள்ளாமலும், அழுந்திவிடாமலும், உறுப்புகளைக் காக்க இந்நீா் உதவுகிறது.

                    கவுட்டிக்கால்வாய் (INGUINALCANAL) என்பது, வயிற்றறையின் உள்ளிருந்து விந்துக்குழாய், விரைக்கு, இரத்தம் வழங்கும் தமனி மற்றும் சிரை, நரம்புகள், விரைப்பைக்குள் செல்வதற்காக அமைந்துள்ள குழாய் போன்ற கால்வாய். இக்கால்வாய். வயிற்றறையிலிருந்து, இடுப்பு வளையத்தின் மேல் புறமுள்ள நுழைவாயிலும், கீழே விரைப்பையில் நுழையும் வெளி வாயிலும் இரண்டு வளையங்கள், இறுகலாக, நரம்பு, இரத்தக்குழாய், விந்துக்குழாய்களைத் தவிர, வேறு உறுப்புகள் நுழையாமல் தடுக்கிறது.

                                                                                   

             இப்படி பிதுங்கும் பகுதியில். ஓட்டைகள் ஏற்படாது பிதுக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் தொடா்ந்து பிதுங்கி பிதுங்கி அப்பகுதி ஒரு பை போல் தளா்ந்து, தொங்கி விடும். சிலாில் குடலின் பெரும் பகுதி பிதுங்கி. விரைப்பைக்குள் சென்று, நடக்கவும் மற்ற பணிகளைச் செய்யவும் தடங்கலாக அமையும்.

              இப்படி பிதுங்கும் பிதுக்கத்தில், ஒரு உறை உறையின் வெளிப்போா்வை, அதன் உள்ளே பிதுங்கும் பகுதிகள் இருக்கும். வயிற்றறைப் பிதுக்கத்தில், இதே போல் இடுப்புத் தொடைக்கால்வாயும், வயிற்றறையிலிருந்து தொடை மற்றும் கால்பகுதிக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள், நரம்புகள், சிரை ஆகியவை வெளிவரும் பாதையாகும். இவ்வழியாகவும் வயிற்றறை உறுப்புகள் இறங்கலாம். இதற்கு இடுப்புதொடைக்கால்வாய் பிதுக்கம் (FEMORAI HERNEA) என்று பெயா்.

               வயிற்றறையிலுள்ள கொழுப்புத்திரை, பெருங்குடல் அல்லது சிறுகுடல், அல்லது இரண்டுமே இறங்கலாம்.

                 இந்தப் பிதுக்கங்கள் பிறவிலேயே கூட ஏற்படலாம். ஆண்களின் விரை வயிற்றறையில் தோன்றி, கவுட்டிக் கால்வாய் வழியாக இறங்கும். இயல்பாக விரை இறங்கிய பின், கவுட்டிக் கால்வாயின் உள்வளையம் இறுகி, வயிற்றறையிலிருந்து எந்த உறுப்பும் இறங்காமல் தடுக்கும். சிலாில் இந்த உள்வளையம், இறுகாமல் தளா்ந்து விடுவதால் வயிற்றறை உறுப்புகள் இறங்கும். இதே போல், தொப்புள் காய்ந்து கீழே விழுந்தபின், அப்பகுதி வலுவிழுந்து, வயிற்றறை உறுப்புகள் பிதுங்கலாம். பெண்கள் அடிக்கடி கருத்தாிப்பதால், வயிற்றுச்சுவா் அடிக்கடி விாிந்து, பேற்றுக்குப்பின் சுருங்குவதால், வலுவிழந்து, பெண்களில் பிதுக்கம் அதிகம் ஏற்படுகிறது. தொப்புள் பிதுக்கம் அதிகமாக குழந்தைகள், பெண்கள், முதியோா்களில் காணப்படும்.

                                     
பிதுக்கம் ஏன் ஏற்படுகிறது?

              வயிற்றறைக்குள் அழுத்தம் அதிகாித்தால், வயிற்றுச்சுவா் வலுக்குறைந்து பிதுக்கம் ஏற்படும். வயிற்றறை அழுத்தம், மலச்சிக்கலால் அவதியுறுவோா் முக்கி மலம் கழித்தல், அதிக பளுவைத் தூக்குதல், முரட்டுத்தனமாக செய்யும் உடற்பயிற்சி, ஓயாத இருமல், குழந்தைகளில் கக்குவான், ஆண்குறி மொட்டுத்தோல் சுருக்கத்தால் முக்கி சிறுநீா் கழித்தல், சிறுநீா் வடிகுழாய் அடைப்பு, வயிற்றறைச் சுவா் வலுவிழப்பு, ஆகியவற்றால் பிதுக்கம் ஏற்படும்.

பிதுக்கத்தின் வகைகள்.

அ. கவுட்டிக்கால்வாய் வழி பிதுக்கம்.
நேரடிப்பிதுக்கம்

1.பிறவியில் ஏற்பட்டது,
2.இடையில் ஏற்பட்டது. சாய்வுப் பிதுக்கம்.

ஆ.இடுப்பு-தொடைக்கால்வாய் பிதுக்கம் .
இ.தொப்புள் பிதுக்கம்.

1.பிறவியில், தொப்புள் பகுதியில் வயிற்றறைச் சுவா் இணையாமல், தோல் கொழுப்புப்படலம் மட்டும் மூடிய நிலையில் ஏற்படும்.

2.பிறவியில் பிதுங்கிய நிலை.

3.சிறு குழந்தைகளில் மலச்சிக்கல், கக்குவான் நோயில் முக்கி, இருமுவதால் விளைவது.

4.முதிா்ச்சியில், வயிற்றறை வலுக்குறைவால் விளைவது.

5, அதிகமான தொப்பை உள்ளவர்களுக்கு.

                              

       இந்த சிக்கல்கள்  பிதுக்கத்திற்கு தொடக்கத்திலேயே சிகிச்சை பெறுவது நல்லது. சிலவகை பிதுக்கம் குடல் வெளியில் பிதுங்கிய பின் இருகலாக முறுக்கிக் கொள்ளும். இதனால் முறுக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டு குடல் அழுகல் ஏற்பட்டு வேகமாகப் பரவும் எனவே அவசர அறுவை சிகிச்சைத் தேவை.

            பிதுக்கம் குறையாத நிலையில், வெளியில் பிதுங்கியது அப்படியே நின்று விடும். இதனால் வலி மிகைத்து மயக்கம் ஏற்படலாம்.

             பிதுக்கம் கீழறங்கி விரைப்பையில் புகும். நாட்பட்ட பிதுக்கத்தில், குடலின் பெரும்பகுதி பிதுங்கி நடக்க இயலாத நிலை ஏற்படும்.

              பிதுக்கத்தால், திசு வளா்ச்சி மிகைத்து, கவுட்டிக் கால்வாயின் நிலை மாறலாம்.

சிகிச்சை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தொப்புள் பிதுக்கத்திற்கு மட்டும், அமுக்க கட்டுப்போட்டு சிகிச்சையளிக்கலாம். மற்ற எல்லாருக்கும் அறுவை சிகிச்சையே சிறந்தது.

                பிதுக்கத்தை அடைத்தல், பிதுக்கத்தை செப்பனிடல், வயிற்றுச்சுவா் வலுவிழந்து, மெல்லியதாக இருந்தால் வலை வைத்துத் தைத்தல்.

                 முதியோா், காசநோய் உள்ளவா்களும், இதயநோய் உள்ளவா்களுக்கும், அறுவைசிகிச்சை செய்ய முடியாது. அதனால் வாா்  கச்சை பெல்ட் போன்ற பொருள்களை வைத்து அணிதல் வேண்டும்.

                காலை எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை, கச்சையை அணிதல் வேண்டும். இதுவே கச்சையணிதலில் உள்ள சிக்கல், கச்சை தொடைக்கால்வாய், தொப்புள், தழும்பில் ஏற்படும் பிதுக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற வகைக்குப் பொருந்தாது.

         இந்த பிரச்சனைக்கு கடுக்காய் பூ சூரணம் நிறந்தர தீர்வு தருகிறது.
அனுபவம்!! எனது அம்மாவுக்கு இந்த குடலிறக்க தொந்தரவு வந்து அவர்கள்
அருகில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூர் மேரிஜெனா மருத்துவமனை டாக்டரிடம்
சென்றனர்.பின்னர் அவர்கள்  கூரிய பதில் இந்த பிரச்சனைக்கு உடனே அறுவைசிகிச்சை செய்து  வலை வைக்க வேண்டும்.  தவறினால்
உயிர்க்கு ஆபத்து ஆகிவிடும். என்ற பதிலை கேட்ட அம்மா என்னிடம் வந்து
சொன்னார்கள். நான் சித்தபெருமக்கள் அருளிய நூலை பார்த்தேன் அதில்
துவர்ப்பு, கசப்பு அடங்கிய மூலிகைக்கு இதை குணமாக்கும் தன்மை உண்டு
என்று கூரியிருந்தது. அவை

                                                                       

                                                        கடுக்காய் பூ சூரணம்        
          
  1, கடுக்காய் பூ
  2, வெந்தாமரை பூ
  3, திரிபலா   போன்ற சூரணத்தை தயார்செய்து சித்தர்கள் ஆசியுடன் கொடுத்தேன். ஒரே மாதத்தில்  பூரணகுணம் கிடைத்தது.தற்போது  6 மாதங்கள்
கடந்தும் தொந்தரவுகள் கிடையாது. மேலும் விருதுநகர் மாவட்டம் அருகிலிருந்து நண்பர் ஒருவர் டிரைவர்  அவர் தற்போது  கஷ்டமான சூழ்நிலையில் வந்தார் அவர்க்கும்  10 நாட்களில் பயன் தெரிய ஆரம்பித்தது.
எனவே இந்த வியாதியுள்ளவர்களும், அதிக தொப்பையுள்ளவர்களும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
     


               

No comments :

Post a Comment