தேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்!!!

No comments
                         தேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்!!!                       இந்த கருந்தேள் என்னுடைய வீட்டிலுள்ள  அரிசி, நெல் குடோனில் இருந்தது.நான் இதை கவனிக்காமல் அருகில் சென்றதால் இந்த கருந்தேள் காலில் கொட்டிவிட்டது. எனக்கு கடுமையான வலி இருந்ததால் உடனே முதல் உதவியாக சிறிய நாட்டு வெங்காயத்தை கசக்கி தேய்த்தேன் வலி சற்று குறைய ஆரம்பித்தது. மேலும் இதனுடைய விஷம் நாளடைவில் பாதிப்பு  வராமல் விஷத்தை முறிக்க  நாயுருவி என்ற அபூர்வ மூலிகை உள்ளது என்று தெரிய வந்தது. இந்த செடியின் வேரை எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து மென்று சாறை சாப்பிட்டதில் பத்து நிமிடத்தில் வலி முழுமையாக குறைந்துவிட்டது, மேலும் நிலவேம்பு கசாயமும் அருந்தலாம். எனவே  இதே நாயுருவி  இலையும், சுண்ணாம்பும் சேர்த்து நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டி அதன் வேரை சாப்பிட விஷம் முறியும்.

                      கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்ச்சியான இடங்களில் தேள்
போய்த் தங்குவது இயற்கை. பல நேரங்களில் சாணக்குவியலின் உள்ளே பதுங்கிக் கொண்டிருக்கும். சாம்பல் குவியல் செங்கல் இடுக்கு ,கரிமூட்டை,
அடிக்கடி பயன்பாட்டிற்க்கு எடுக்காத சாமான்களில் இருக்கும். பழைய
காகிதக் கட்டுகள் என்று பல இடங்களிலும் தேள் வசிக்கும்.

           சில சமயம் துவைத்துக் காய வைத்திருக்கும் ஈர உடைகளின் கீழ் குளிா்ச்சிக்காகப் பதுங்கி இருக்கும். வெப்பம் தாளாத நேரத்தில் கூரையில் இருந்து தொப் என்று கீழே விழுந்து, விழும்போதே நம்மைக் கொட்டிவிடும் ஆபத்தும் உண்டு. குழந்தைகள் மற்றும் பொியவா்கள் பயன்படுத்தும் காலணியில் ஒளிந்து கொண்டு, காலணிகளை மாட்டும்போது கொட்டி விடுவதும் உண்டு.

                  பலரை நட்டநடுநிசியில் தேள் கொட்டிவிட்டு அதனால் துன்புறுவதை நாம் கண்கூடாகப் பாா்த்து வருகிறோம். தேள் கடித்து, விஷம் முற்றி இறந்து போவோரும் உண்டு. இந்த இக்கட்டான சூழ்நிலை எப்போது ஏற்படும் எனக் கூறஇயலாது. சமூக சேவகா்களும், தேள் அடிக்கடி நடமாடும் இடம் அறிந்துள்ளவா்களும் இங்கு கூறியுள்ள மருந்துகளை அறிந்து பயன்படுத்துவாா்களானால் மிக்க நல்லது. 

                           எனவே, தேள்கடி விஷத்தை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை செய்து கொள்வது நல்லது. மேற்குறிப்பிட்ட அனுபவ முறைகளில் வாய்ப்புக்கு ஏற்ப ஏதேனும் ஒன்றைப் பிரயோகித்துப் பலன் பெறலாம். இம்முறைகளைப் பிறருக்குத் தொிவித்தும் உபகாரம் செய்யலாம். 

No comments :

Post a Comment