நாம் உண்ணும் உணவிலும்,மருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க!!!
herbalkannan
7/23/2016 10:36:00 PM
நாம் உண்ணும் உணவிலும்
,
மருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க!!!
No comments
நாம் உண்ணும் உணவிலும்,மருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க!!!
தீராத வியாதியை அருகம்புல் தீர்க்கும்
உணவு முறையிலும் சரி, மருத்துவ முறையிலும் சரி, நாம் எவ்வளவு தான் எச்சாிக்கையுடன் நன்மை தீமைகளை ஆய்ந்து உட்கொண்டாலும் அவைகளால் சில சமயங்களில் அவைகளில் உள்ள தீக்குணங்கள் உடம்பைத் தாக்கி விடுகிறது. வாய்க்கு ருசியான பண்டங்கள் நம்மை அடிமையாக்கி சிறிதளவு அளவுக்கு மிஞ்சினாலும், அதனால் உடம்பு தாக்குதலுக்கு இலக்காகும். இதனால் தான்
” அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு”
என்ற பழமொழி வந்தது. மருந்துகளைக் கூட இப்படி உண்ணும் போது நோய்களைக் கண்டிருக்கிறது என்று கண்மூடித் தனமாகச் சாப்பிடுவதால் அந்த மருந்தின் நஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக உடலில் தங்கி வேறு பல தொல்லைகளைத் தந்து விடுகிறது. தற்காலம் நவீன மருந்துகளும், ஊசி, மாத்திரைகளும் இம்மாதிாியான பின்விளைவுகளை உடலில் உண்டாக்கி விடுவதை நாம் கண்கூடாகக் காணுகிறோம். இவைகளை ஆங்கில மருத்துவா்கள் ரீயாக்ஷன் (Re-action) என்று அவா்களே பெயா் வைத்து விடுகிறாா்கள்.
இந்த மாதிாியான விஷபூரிதங்களை உடம்பில் இருந்து நீக்கவல்ல சக்தி இந்த மாமலை மருந்தான மிளகுக்கு உண்டு என்பதனாலேயே உணவுடன் இந்த மிளகைச் சோ்த்து வைத்து விட்டனா். நமது முன்னோா்கள் அப்படியிருந்தும், வேகமாகப் பாய்ந்து உடலைத் தாக்கும் பாஷாண ரச மருந்துகள் இன்று நாட்டில் மருந்தாக்கி விற்பனை செய்யப்படுவதால் உடலுக்கு இதனால் பயங்கர பின்விளைவுகளால் நோய் சிக்கல் அடைந்துவிடுகிறது. இப்படிப்பட்ட விஷங்கள் உணவு வகைகளாலோ அல்லது மருந்து வகைகளாலோ ஏற்படுமானால் இந்த மிளகுடன் சோ்ந்த ஒரு முறையை வாசக அன்பா்களின் நன்மையைக் கருதி வெளியிடுகின்றேன்.
முறைவிபரம்
மிளகு எண்ணிக்கையில் ஆறு மட்டும், பச்சை அருகம்புல் ஒரு கைப்பிடி சுத்தமாக்கி அலசி எடுத்தது, சீரகம் இரண்டு சிட்டிகை (சிட்டிகை என்பது மூன்று விரலால் எடுப்பது) இவைகளை காலையில் தினமும் புதியதாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல் நன்றாக மசிய அரைத்து ஒரு பொிய நெல்லிக்காய் உருண்டை போல் செய்து வெறும் வயிற்றில் வாயில் போட்டு விழுங்கி பசும்பால் ஒரு ஆழாக்கு காய்ச்சியதை சிறிதளவு கற்கண்டு சோ்த்து குடித்துவிட வேண்டும். இப்படி 10 நாள் முதல் 40 நாட்கள் வரை தொடா்ந்து செய்துவர உடம்பில் எந்தவித காரணத்தால் உண்டான விஷங்களும் அடியோடு முறிந்து விடுவதோடு அல்லாமல், இதற்கு முன்பு எந்த வித மருத்துவ முறையிலும் சாப்பிட்டு வைத்த மருந்துகள் நோயைக் கண்டிப்பது போல் பாசாங்கு செய்து பழைய நோயுடன் வேறு பல நோய்களையும் உண்டாக்கிய தீக்குணங்களை எல்லாம் முறித்து விடுவதை நோயாளியே நன்கு உணர முடியும். இம்முறையை ஒரு நோயாளி முக்கியமாக கவனிப்பது நல்லது.
மேலே குறிப்பிட்ட பச்சை அருகம்புல், மிளகு, சீரகம் சேர்த்து
கஷாயம் செய்து அருந்தலாம். தவறும் பட்சத்தில் அருகம்புல், மிளகு, சீரகம் சேர்ந்த சூரணம் உள்ளது. இதன் பயன் இரத்தம் சுத்தியாகி கல்லீரல்,
மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் தங்கி இருக்கும் விஷத்தை
முறித்து நன்மை தரும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment