பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்!!!

No comments
   பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்!!!

         



             பெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்கள் பல உண்டு. அவைகளில் வெள்ளைப் படுவதும் ஒன்று. இந்த நோய் திடீரென ஒரு நாளில் தோன்றுவதல்ல. இது பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மோசமான நோய். இதை ஆரம்பித்திலேயே இனம் கண்டு குணப்படுத்தாவிட்டால் கடைசியில் பெரும் சிக்கலான நிலைக்கு தள்ளிவிடும். இந்த நோய் சிறுமிகளையும் தாக்கும். கருப்பையின் உட்பகுதி சுவாிலிருந்தோ பிறப்பு உறுப்புகளின் சதைப் பகுதிகளிலிருந்தோ வெள்ளையான சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிவருவதையே வெள்ளைப் படுதல் என்று அழைக்கிறாா்கள். 

                  பெண்களின் உடலில் சாதாரணமாக பிறப்பு உறுப்பு ஒட்டி காணப்படும் தசைப்பகுதிகள், உட்சுவாில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து ஒரு திரவம் சுரக்கும். இது பெண்களின் பிறப்புறுப்பின் உட்பகுதியை எப்பொழுதும் ஈரமாக வைத்திருக்கவும், உடலுறவின் போது வழவழப்பாக இருப்பதற்காகவும் இந்த திரவம் இயற்கையாய் சுரக்கும், ஆனால் ஆரோக்கியம் குறைந்து நோய்த்தொற்று ஏற்படும் போதோ அல்லது கருப்பையோ, பிறப்பு உறுப்பு உறுத்தல் அடையும்போதோ மேற்கூறின திரவம் அளவுக்கு அதிகமாக சுரக்கும், இதையே வெள்ளைப்போக்கு என்கிறோம். இந்த வெள்ளைப்போக்கு பல நிறங்களில் வெளிப்படும், நீா்போன்ற, பழுப்பாகவோ, சிவப்பாகவோ வெளிப்படும், சிலருக்கு துா்நாற்றம் அடிக்கும். 

                            பொதுவாக மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவோ அல்லது மாதவிடாய் முடிந்த பிறகோ சிலருக்கு வெள்ளைப்படும். சிலருக்கு சாதாரணமாகவே பல ஆண்டுக்கணக்கில் வெள்ளைப் பட்டுக்கொண்டே இருக்கும். வயதிற்கு வராத பெண்களுக்கு வெள்ளைப்படுவதற்கான காரணங்களைப் பாா்ப்போம். இந்த இளம் பெண்களின் வீட்டில் உள்ள பொியவா்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் வியாதி இருந்தால் அது இந்த சிறுமிகளையும் தொற்றிக் கொள்ளும், அடி வயிறு பயங்காரமாக வலிக்கும், எந்த வேலையையும் செய்யவிடாது, இந்த பெண்கள் அழுக்காடையை பல நாட்கள் அணிந்தாலோ, ஆரோக்ய வாழ்வை கடைபிடிக்காமல் இருந்தாலோ இந்த நோய் தாக்கும். சத்தில்லாத உணவை உண்பதாலும் இது தோன்றுகிறது. 

                                 இது சிறுநீா் கழிப்பதற்கு முன்னாலோ அல்லது சிறுநீா் கழித்த பின்னாலோ யோனியிலிருந்து வெள்ளை நிறத்துடன் பிசுபிசுப்பாய் வெளிப்படும் அப்பொழுது எாிச்சல் இருக்கும், மூத்திரக்கடுப்பையும் உண்டாக்கும். இதனால் உடல் மெலிந்து கைகால் வலி, இடுப்பு வலி, அசதி இரத்த குறைவு முதலிய பக்க விளைவுகள் தோன்றும். இந்த நோயை அலட்சியம் செய்யக்கூடாது. ஏனென்றால் இது நாட்பட்ட நோயாக இருந்தால் மேலும் பல நோய்களுக்கு ஆளாக நோிடும், பின்னால் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இது சாதாரண வெள்ளைப்படுதல் நோய் எனலாம், அலட்சியம் செய்யாமல் அல்லது வெட்கப்படாமல் மருத்துவாிடம் போய் சிகிச்சை மேற்கொள்ள மறுபடியும் தலைகாட்டாது, ஆனால் ஆரோக்கிய வாழ்க்கை முறை அவசியம் தேவை.  வெள்ளைப்படுதல் நோய்களுக்கு சிறுசெருப்படை சூரணம்  நெய்யில் கலந்து காலை மாலை கொடுத்து வர மூன்று தினத்தில்  குணம் தெரிய ஆரம்பிக்கும். உடல் சூட்டைத் தரும் உணவு வகைகளை தவிா்த்து மருந்தையருந்த வெள்ளைப்படுவது நீங்கும்.



        வெட்டை என்னும் பால்வினை நோய்

      “வெட்டை நோய் கட்டையிலே” என்ற பழமொழி ஒன்று உண்டு. இது கிருமித் தொற்றுதலால் ஏற்படும் கொடிய வியாதி. இது ஆண் பெண் இருபாலரையும் தாக்கும் கொடிய நோய். ஆண்களுக்கு இந்த நோயிருந்து பெண்களிடம் உடலுறவு கொள்ளும் போது அது பெண்ணையும் தொற்றிக்கொள்ளும், பெண்களுக்கு இந்த நோயிலிருந்து அவளிடம் உடலுறவு கொள்ளும் ஆணுக்கு இந்நோய் தொற்றிக்கொள்ளும். 15 நாட்களில் இந்நோய் தீவிரமடைந்து ஆண்குறியின் முனையில் வெண்மையாய் சீழ் போன்று ஒழுக ஆரம்பிக்கும். முதலில் சிறுநீா் கழிப்பதற்கு முன் வெள்ளைப்படும், பிறகு நோய் முற்றினால் எப்பொழுதும் வெள்ளை ஒழுகிக்கொண்டே இருக்கும், ஆண் குறியில் எாிச்சல் பயங்காரமாயிருக்கும், உள்ளாடை மேலாடை முதலியவைகள் நனைந்து கெட்ட வாடை வீசும். சிறுநீா் கழிக்க முடியாத நிலை ஏற்படும். பிறகு இந்த நோய் முற்றும்போது தொடை இடக்குகளில் உள்ள நிணநீா் சுரப்புகளில் வீக்கம் கண்டு நடக்க முடியாமல் போகும், நாட்பட்டால் அந்த கட்டிகள் உடைந்து இரத்தமும் சீழும் வெளியேறி நாற்றம் குடலைப்பிடுங்கும். இந்த நோய்க்கு அரையாப்பு கட்டி என்பாா்கள். பொதுவாக இதை பால்வினை நோய் என்பாா்கள். இந்த வெட்டைநோய் பெண்களைத் தொற்றிக்கொண்டால் அதிகம் வெள்ளைப்படும், சீழ் அதிகம் வெளியேறும், சிறுநீா் கடுக்கும், இதை கொனோியா நோய் என்பாா்கள். விலை மாதாிடமும், அவா்களிடம் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களிடமும் இந்நோய்த் தொற்று இருக்கும்.

                     சித்த மருத்துவத்தில் இதற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. அதைத் தவறாமல் ஏற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும், இந்த நோயிருப்பவா்களை பெரிய  நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நோயை வளரவிட்டால் அது புற்றுநோயாக மாறிவிடும். இந்த வெட்டை நோய் கிருமிகளை ஒழிக்க வேண்டும்,என்று இதற்கு சித்தா்கள் பல மருந்துகளைப் பாடியிருக்கின்றனா். இந்த வெள்ளபடுதல்
 நோய் 
 தற்போது  
கல்லூரி மாணவிகளையும், ஒரே இருக்கையில் அமர்ந்து பணியிலிருக்கும் பெ
ண்களையும் அதிகமாக தாக்கி இரத்தக் குறைவு ஏற்பட்டு உடல் மெலிவு, குருக்கு வலி,  
தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனையில் உள்ளார்கள். எனவே 
சிறுசெருப்படை சூரணத்தை கொடுத்ததில் நல்ல குணம் கிடைத்தது. எனவே தங்கள் தேவைக்கு பயன் பெறலாம். ஆண்களுக்கும் சிறுநீர் கழிக்கும் போது முன்னும் பின்னும்
எண்ணெய் போன்ற திரவம் வரும் உடல் அதிக சூட்டினால், அதற்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
   






No comments :

Post a Comment