கபச் சூரணம் தொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillits}

No comments


                                  கபச் சூரணம் தொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}


      தொண்டையின் மேற்ப்புரத்தில்  எதிரெதிராக இரண்டு  சதைகள்
உள்ளன. அவை நிணநீர்த் திசுக்களால் ஆனவை. ஒவ்வொன்றும் ஒரு
அங்குலம் நீலம் உடையது. இவை வாதுமை பருப்பு  [ பாதாம்பருப்பு ]
போன்ற தோற்றமுடையன. இவை சிலேட்டு மப் படத்தால் [Mucous -
Membrane ] மூடப்பட்டிற்கும்.

     தொண்டை சதையில் “ தொண்டை சதை அழற்சி ” என்றும் ‘தொண்டை
சதை கட்டி” என்றும் இரண்டு வகை நோய்கள் ஏற்படுவதுண்டு.
தொண்டை சதை அழற்சியைப் பொதுவாக தொண்டை சதை வளர்ச்சி
என்றும் கூறுவதுண்டு.  தொண்டை சதை வளர்ச்சி [ Tonsillitis ] நமது 
சித்த மருத்துவத்தில் தொண்டைக்கட்டு , சுரபங்கம் என்றும் அழைக்
கப்படுவதுண்டு. சித்த மருத்துவத்தில் அறுவைசிகிச்சையின்றி இந்
நோயை குணப்படுத்தி விடலாம் என்று சித்தர் பெருமக்கள் மொழிந்
துள்ளன்ர்.இந்நோயால் மரணம் உண்டாவதில்லை. ஆனால் திரும்ப
திரும்ப இந்நோய் வந்தால் தொண்டை சதைகள் நிலையாக நோயுற்று
உடல் நலத்தை கெடுத்துவிடும்.

    தொண்டைக்குள் சாதாரணமாகக் குழந்தைகளுக்கு சதை வளர்ந்து,
சளி, இருமல்,சுரம் போன்ற வியாதிகள் பாதிக்கப்பட்டு வளர்ச்சியின்றி
மெலிந்து போவார்கள். பெரியோர்களுக்கும் சிலருக்கு  தொண்டையில்
சதை வளர்வதுண்டு.இவ்வியாதியுள்ளவர்கள்  ஐஸ் பானங்கள், ஐஸ்கிரீம் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.வெந்நீர் சூடாக
சாப்பிடுவது நல்லது.தலையில் அதிக அளவில் தண்ணீர் ஊற்றக்கூடாது.

     மூக்கின் வழி சுவாசித்தலால் ஏற்படும் நன்மைகள்:

   சுவாசித்தால் நிகழ்வு மூக்கின் வழியே நடப்பதுதான் சிறந்தமுறை
நாசிப்பாதையில் மெல்லிய இழைகள் போன்ற  “ சிலியாக்கல்” அமைந்
துள்ளன.மேலும் பல “ தந்துகிகளும் ” இந்த பாதைகளில் இருக்கின்றன.
நாசிப் பாதைகளின் முன் பாகத்தில் உரோமங்களும் உண்டு. நாசிப்பாதையில் உள்ள உரோமங்களும், சிலியாக்களும், தூசு மாசு
களையும்,-நுண் கிருமிகளையும் -புகைமூலம் செல்லும் நுட்பமான
பொடிகளையும் உட்செல்லாதவாறு தடையை ஏற்படுத்துகின்றன.
இதனால் தூய காற்று மட்டும் நமது உடலுக்குள் செல்கிறது.

                         வாய்வழி சுவாசித்தால் ஏற்படும் தீமைகள்:

    வாய்வழியாக சுவாசிக்கும் போது ,நோயை உண்டாக்கும் நுண்
கிருமிகள் வாயின் வழியாக எளிதாக நுழைகின்றன. வாய்வழிப்
பாதையில்  தூசுகளை யும், நுண்கிருமிகளையும் வடுகட்டும் 
அமைப்பு ஏதும் இல்லை. இதனால் ‘ டான்சிலுக்கு’ அழற்சி ஏற்படுகிறது.
இதன் காரனமாக சளி, இருமல், சுரம், கீல் வாதம், சிலவகை இதயநோய்,
செவிட்டுத்தன்மை,சிறுநீரக நோய்கள், அசீரணம் ஆகியவை உண்டாகலாம்.தொண்டைச் சதை வீங்கினால் அறுவை சிகிச்சை செய்வது நவீன முறை மருத்துவத்தில் பொதுவாகப் பின்பற்றப்படும்
செயலாகும்.              
                                                                        சாதிக்காய்

            நோய் தோன்றுவதற்குறிய காரணங்கள்:

1,  மிகுந்த குளிர்காற்றில் பணிபுரிதல்
2,  குளிச்சியான போருள்களை உட்கொள்ளல்
3,  தொண்டைப் புண் உருவாகும் அளவில் வெந்நீர், தேனீர்,காபி
      போன்றவற்றைச் சூடாக அருந்துதல்
4,  இருமல் நோய்க்குத் துணையாகவும் சில நேரங்களில் தொண்டைச்
      சதை வளர்ச்சி ஏற்படுவதுண்டு                                                                                               
                                              நோய்க் குணங்கள்:

        உடலில் கொழுப்பு அதிகமாகி,அது தொண்டையிலும் மிகுந்து,
தொண்டையை அடைத்துப் பேச்சொலியைத் தடைப்படுத்தும்,
குரல் கம்மலும் ஏற்படும். 

       சிறு வயதினருக்கு குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீருணவு இவைகளால்
தொண்டை சிவந்து, கபம் கூடி தொண்டையில் சதை வளரும். இந்த
சதை நாளும் வளர்ந்து, பருத்து, கட்டிகளைப் போல் உருவாகி, 
குரல்வலையின் இரு பக்கங்களையும் இருக்கும். அத்துடன் சுரம், 
வாய்நாற்றம், மூக்கில் நீர் வடிதல், மூச்சுத் திணறல், இருமல் ஆகிய அறிகுறி குணங்களையும் உண்டாக்கும்.

                                  இந்த வியாதிக்கு மருந்து

    சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின்றி இந்நோயைக் குணப்
படுத்த பல மருந்துக்கள் சித்த பெருமக்கள் கூரியுள்ளார்கள் அவை

1,   அதிமதுரம்
2,   கடுக்காய் தோடு
3,   திரிகடுகு சூரணம்
4,   சித்தரத்தை 
5,   வால் மிளகு 
6,   சாதிக்காய் 
7,   நிலவேம்பு
எல்லாவற்றையும் தனித்தனியே வருத்து இடித்து அல்லது மிஷினில்
அரைத்து சன்னமாக சூர்ணமாக்கி புட்டியில் அடைக்கவும்.சிறு குழந்தை
களுக்கு இரண்டு சிடிகைகள் காலை, மாலை தேனில் கொடுக்கவும்.
வயதிற்கு தகுந்தவாறு கூட்டிக் கொடுக்கலாம். இந்த சூர்ணம்  3 மாதங்
கள் தொடர்ந்து சாப்பிட  அறுவை சிகிச்சையில்லாமல் தொண்டையைக்
காப்பாற்றலாம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பலருக்கு
ஆஸ்துமா நோய் வந்து நேரிடும்.

    மேலும் இந்த கெளமதி சூரணத்தை புகைபிடித்தல்,புகையிலை, பாக்கு
போன்ற பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்த தொண்டைப் புண்,
தொண்டை சளி, கொடிய நோய்கிருமிகளிடமிருந்து
 காப்பாற்றலாம்.

                                                  
    

No comments :

Post a Comment