[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்!!!

1 comment

                                                          
                                        இருதய இரத்த குழாய் அடைப்பு நீங்க!!!

                                                              
                
               மனித உடலின் மிக முக்கிய உறுப்பு இருதயம். உடலின் சீரான
இயக்கத்திற்கு இருதய பலம் மற்றும் அதன் இயக்கம் மிகவும் இன்றியமையாதது. மனித இதயத்தின் அளவு ஒவ்வொருவரின்
இடதுகையை மூடினால் என்ன அளவோ அந்த அளவைத் கொண்டிருக்கும்.இருதயம் உடலில் இரத்தக் களஞ்சியமாக உள்ளது.
இருதயம் பொதுவில் சாதாரணமாக எந்தவித அற்பமான தாக்கு
தலுக்கும் உட்படுவதில்லை, பாதிக்கப்படுவதில்லை.இருதயம் ஒவ்வொரு நிமிடமும் 70 முதல் 80 துடிப்பு வரை துடித்து இரத்த 
ஓட்டத்தை உடல் முழுவதும்சீராகச் செலுத்துகிறது.

                                                      மாரடைப்பு  { Heart Attack }
          
        மாரடைப்பு என்பதன் தாக்கம் பொதுவாக மார்பின் நடுவில் 
இருந்துதான் ஆரம்பிக்கும். பின்னர் தோள்பட்டை, கைகளில் -
குறிப்பாக இடது கை உள்பகுதி, கழுத்து, கீழ்த்தாடை ஆகியவை
இறுக்கமடையும். மூச்சுத் திணறல், தொடர்ந்து சீரணமின்மை,
அசீரணக் கோளாறு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகத் தோன்றும்.

                             
                                                                 
     மாரடைப்பு  என்பது பொதுவாக திடீர் என்று வருவதில்லை.
உள்ளுக்குள் சில வலிகள் தொடர்ந்துக் கொண்டு இருக்கும். இதனை
 மருத்துவரால் மட்டுமே கணிக்க இயலும். மார்பில் இனம் புரியாத
  “ குத்துவது ‘ போன்ற வலி, நமைச்சல் எடுப்பது { மார்பில் }
அழுத்தம் ஏற்படுவது, இருக்க தன்மை, ஒருவித எரிச்சல் போன்றவைகளும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

      மாரடைப்பு என்பதைப் பொருத்தவரை இந்நோய் வராமல் தவிர்த்து
கொள்வது சிறந்த்து, வந்தபின் கவனித்து கொள்வோம் என்பது உகந்தது
அல்ல, பரம்பரையில் சர்க்கரை நோய் இருதய கோளாறு வர வாய்ப்புள்ளது என்று தெரியவரின் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்
கள்  30 வயது முதலே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.தற்கால
உணவு பழக்கம் திசை மாறிய பரபரப்பான வாழ்க்கை முறை போன்ற
வற்றின் காரணமாக எந்த வயதில் ஒருவருக்கு  மாரடைப்பு  வரும் என
தீர்மானிக்க இயலாது. அதனால் “ வருமுன் காப்போம் ” என்ற பழமொழிக்கு ஏற்ப நமது உடலை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டியது 
அவசியம்.

  
                                                                  இருதய வலி:

      இருதய வலி என்பது பலவகைப்பட்டது. எல்லா இருதய வலிகளுமே
மாரடைப்புக் காரணமாக வருவதுதான் என்று என்னக்கூடாது. மார்புபகுதியில் இருந்து வரும் வலியால்  ஏற்படுவதுதான் மாரடைப்பு
என்பது அல்ல. இருதய வலி மார்பை சுற்றியுள்ள நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாய் உதரவிதானம் என்று சொல்லப்படும் மார்பையும்
வயிற்றையும், பிரிக்கும் தசைப்பகுதி. சிறுகுடல் மேல்பகுதி கல்லீரல்
பித்த பை வயிறு முதுகெலும்பு,  பல பகுதிகளில் வரும் வலிகள் கூட
மாரடைப்புக்கு க் காரணமாகின்றன  என்று இருதய நோய் மருத்துவ 
நிபுணர்கள் குறிப்பிடுகின்றன. 

                                               
                                                     இருதய வலி வகைகள்

     இது “ இருதயச் சுவர் வலி ”மற்றும்  “ பெரிகார்டிஸ்” என இரண்டு 
வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இருதய சுவர் வலி:  நடக்கும் போது, மார்புப் பகுதியில் ஏற்படும்
தசைவலி இருதயச் சுவர் வலி வகையில் அடங்கும்.

பெரிகார்ட்டிஸ்;   இவ்வலியால் மார்பைச் சுற்றியுள்ள தசைகளில் 
வீக்கம் ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் ஒருவித வைரஸ் 
காரணமாக வரும் வலி இது. பெரிகார்டிஸ் வலி தோன்றினால்
மணிக்கணக்கில் நீடிக்கும். 
                                                                   கல் தாமரை
                                இருதய வலி ஏற்படக் காரணங்கள்:

இருதய நோய் பற்றி மருத்துவ வல்லுநர்கள் உரைப்பது: இந்நோய்
ஒரு ஆட்கொல்லி நோய்.ஓய்வில்லாமல் வேலைசெய்வது, அவசர 
கோலத்தில் உணவு உண்ணுதல், காலம் கடந்து உண்ணுதல், இரவில்
நீண்ட நேரம் கண் விழித்தலாலும்,  ஏற்படும்  நரம்புத் தளர்வு, பரம்பரையாக வரும் இருதய நோய், மன அமைதியில்லாமை, காலையில் எழுந்தவுடன் அதிக அளவில்  டீ, சிகரெட், அருந்துவதாலும்,  அதிக அளவில் மது  குடிப்பதினாலும், அதிகமாக இறைச்சி உண்ப
தாலும், இருதயத்திற்கு செல்லும் நரம்புகளை கொழுப்பினாலும்,சதை
அடைப்பினாலும் பாதிக்கப்பட்டு காலப்போக்கில் ஆட்கொல்லி நோயாக மாறுதல் ஆகிய காரணங்களால் இருதய வலி தோன்றுகிறது.

                                                                     
       மாரடைப்பு மற்றும் மூளை இரத்த குழாய் வெடிப்புக்கு 60 சதவீதம்
காரணம் “உயர் இரத்த அழுத்த நோயே” [ Hypertension ] காரணம் எனக் 
கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை
நோய் காரணமாகவும் இருதயம் உட்பட உடல் முழுவதும் உள்ள இரத்த
குழாய்கள் பல இடங்களில் அதன் அளவில் குறுகத் தொடங்குகின்றன.
அதன் விளைவும் மாரடைப்பிற்கு வழிகோலுகிறது.


                                        இதற்கு தழிழ் மருத்துவம் 

     நமது தழிழ் மருத்துவம் இருதய நோயை தமரக நோய் -தமரக வாய்வு
எனக் குறிப்பிடுகிறது. மூலிகைகளில் இருதயத்திற்கு வலுவைக் 
கொடுத்து இரத்தக் குழாய்களை பலப்படுத்தி, இரத்தததை சுத்தி செய்து
இரத்தக் குழாய்யின்  அடைப்பை நீக்கி நீண்ட ஆயிளைத் தரும்   ஒரு அருமருந்து.


                                              மூலப்பொருள்கள்

1  கப்  எலுமிச்சை சாறு
1  கப்  இஞ்சிச்  சாறு
1  கப்  பூண்டுச்  சாறு
1  கப்  ஆப்பிள்  சைடர் வினிகர்

    எல்லா சாறுகளையும் ஒன்றாக கலந்து இலேசான இளஞ்சூட்டில்
[ சிம்மரில் ] 60 நிமிடம் கொதிக்க வைக்கவும். நான்கு கப் மூன்றாக
குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு
இயற்கை மலைத்தேன் கலந்து ஜாடியில் வைத்துக்கொல்லவும்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் பாணத்தை
சாப்பிட மேலே கண்ட இருதய இரத்த குழாய் அடைப்பை நீக்கும்
என்று பலருக்கும்  தெரிந்த விஷயம்தான், மேலும் இருதயம் 
ஆரோக்கியம் பெற

 1  கப்  வெண் தாமரை பூ
 1  கப்  செம்பருத்தி  பூ
 1  கப்  கல் தாமரை     
    
     இந்த சாறுகளையும் மேலே குறிப்பிட்ட பாணங்களுடன்
சேர்த்து 30  வயதிற்கு மேற்பட்டோர்களும், தீய பழக்கங்கள்
உள்ளவர்களும், அதிக உடல் எடை உள்ளவர்களும், இதனை
தயார்செய்து. அருந்தி வர  இரத்தம் சுத்தியாகி  மாரடைப்பு
[ Heart Attack ] என்னும் மரண பயத்திலிருந்து நீங்களே உங்களை
பைபாஸ் அறுவை சிகிச்சைலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    இந்த மருந்தினை 30 வயதிற்கு மேல் மூன்று மாதத்திற்கு ஒரு
முறை பயன்படுத்தினால் நாம் உண்ணும் உணவில் உள்ள
தேவையற்ற கொழுப்புகளையும், துர்நீர்களையும்,அகற்றி உடலை
காக்கும்.     
                                                         
                                                                   வெண் தாமரை கஷாயம்

     

         இந்த கஷாயத்தை தாங்களால் தயாரிக்க தாமதம் ஏற்பட்டால்
ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்க்கு   தாங்கள் தொடர்புக்கு வரலாம்!!

 குறிப்பு:-  அல்சர்  சிறுகுடல், பெருங்குடல் என இருவகைப்படும்.
இவைகளில்  மலச்சிக்கல், புண், குன்மம் போன்ற வியாதிகள்
இருந்தாலும்  வாய்வு அதிகரித்து இருதய வலி பயத்தை உண்டு
பண்ணி, கற்பனை செய்வார்கள்  அதற்கு பயம் வேண்டாம்.

நான்கு வெற்றிலையும், ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து
சாப்பிட வாய்வு வெளியேறும்,  பின்பு  கடுக்காய், மணத்தாக்காளி,
வில்வம் போன்ற பவுடர்களை கலந்து பயன்படுத்தினால் இந்த
பிரச்சனைகள் தீரும்.  
  
                                                      

                                                          இயற்கை காளான்

1 comment :

  1. This is a great medicine for Heart ailments and irregular periods.
    I personally used this medicine for cholesterol balls like tumors all over the body. I had many tumors all my body and after taking 3 bottles of Venthamarai Kashayam, all my cholesterol balls have gone away, I am free of all the tumors now. Great Medicine to use for any kind of Cholesteral unknown issues.

    Many many Thanks to Mr. Herbal Kannan Sir. He is serving the human society in a service oriented way, Kudos to Kannan Sir. May God Bless you and give a long long life.

    ReplyDelete