மலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது!!!
மலைவாழ் மக்களின் பொங்கல் திருவிழா!!!
பொன் இருளப்பசாமியாக காட்சி தரும் திருக்கோவிலில் முதல்
நிகழ்ச்சியாக பொங்களிட்டு சாமிதரிசனம் செய்யப்படுகிறது.
இந்த மலைவாழ் மக்கள் சாமி கும்பிடுமிடம் இவர்கள் குடியிருப்பு
பகுதிக்கு அருகில் உள்ள வனப்பதியில் அமைந்துள்ளது.இவர்கள்
இந்த பகுதிக்கு நேர்த்திகடன் செலுத்தும் மக்களிடம் மிஞ்சிய
உணவுகளை பெருவதற்காக மட்டுமே இந்த பகுதிக்கு வருவார்கள்
இவர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கான பழக்கமும் இல்லை,
இவர்களுக்கு இறைவழிபாடு செய்ய வழிகாட்டியாக யாரும்
முன்வரவில்லை, காரணம் மலைவாழ் மக்களாகிய இவர்கள் தாழ்த்த
பட்ட மக்கள் என்றும், பணம் வசதி இல்லாதவர்கள் என்றும், நாட்டு
மக்களாலும், பூசாரியாலும் ஒதுக்கப்பட்டவர்கள்.இந்த பகுதியில்
மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை கண்டாலே
நாட்டுமக்கள் என்று கூச்சலிட்டு காட்டுக்குள் ஓடி செல்வார்கள்
இவர்களை கண்ட நாம் காட்டு மக்கள் என்று வனத்தில் வாழும்
மிருகங்களில் ஒன்றாய் பார்த்தோம்.
மலைவாழ் மக்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்த பின்பு
தங்களால் தயாரிக்கப்பட்ட பொங்களை ஆர்வத்துடன் சாப்பிடும் காட்சி.
தற்போது இவர்களது வாழ்க்கை தரம் உயர்வதற்காக நாட்டு மக்களிடம் பழக ஆரம்பித்தார்கள் மேலும் இந்த ஆதிவாசி மலைவாழ் மக்கள் வாழ்க்கை தரம் உயரவும், இறைவன் கொடுத்த இந்த இயற்கைகளை அனுபவிக்கவும், நாம் இவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்போம் என்று ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளையின் மூலம் முதல் முறையாக இறை அருள் தரிசனம் செய்து தரப்பட்டது.
மலைவாழ் மக்கள் பொங்கல் திருவிழாவிற்கு வருகை
தந்த வனத்துறை அதிகாரியையும், பொதுமக்களையும் வரவேற்பு
செய்தார்கள்.

இந்த மலைவாழ் மக்களின் குடியிருப்பு பகுதியில் நாட்டுமக்களை
பொங்கள் திருவிழாவிற்கு அழைப்பு கொடுத்து அன்னதானம் கொடுத்து
உபசரித்தனர்,
அருள் மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் வைக்கும் காட்சி
மலைவாழ் மக்களின் துயரங்கள் தீர நேர்த்திகடன் செலுத்தும்
காட்சி.
இந்த மலைவாழ் மக்களின் மனநிலை வனத்தில் வாழ்ந்த நாங்கள்
தீப்பட்டி எடுத்து பீடி, சிகரெட் புகைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினோம்,
ஆனால் தற்போது வாழ்க்கையில் முதல் முறையாக சாமி தரிசனம்
செய்வதற்காக கற்ப்பூரம், பத்தி ஏற்ற வழிகாட்டியாக வந்த ஸ்ரீ சதுரகிரி
ஹெர்பல்ஸ் அறக்கட்டளைக்கு கோடி புண்ணியம் என்று கண்ணீர் மல்க
கூறினார்கள். இந்த புண்ணியத்தை மலைவாழ் மக்களுக்கு வாழ்க்கை
தரம் உயர்வதற்கு நன்கொடை அளித்த வலைத்தள அன்பர்களுக்கு செலுத்தி ஆள்ந்த நன்றியினை தெரிவித்து எல்லா வளமும் நலமும்
பெற இறைவன வேண்டுகிறோம். மேலும் இதே போன்று இவர்கள்
வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் பாராட்டுக்
கள் தெரிவித்து தாங்களும் இது போன்று நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்கின்
றோம் என்று முன் வந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
excellent
ReplyDelete