மலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா!!!
மலைவாழ் மக்களின் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா!!!
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
இந்த கோவில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவிலில் கருமலைநாச்சியார், வனப்பேச்சி, போன்ற வனதேவதை
களை வனங்கப்படுகிறது. இந்த கோவில் சில ஆண்டுகளுக்கு முன்
ஸ்ரீவில்லிபுத்துர் தாலுகாவிலுள்ள திரு. மூர்த்தி பாரஸ்ட் அதிகாரி
அவர்கள் மேற்குத்தொடர்ச்சி வனத்துறையில் பணியாற்றி வந்தார்
அந்தநிலையில் மலைவாழ்மக்கள் குடியிருப்பு வீடுகள் மொத்தம் 14 வீடுகள் உள்ளது. இதில் சுமார் 60 வதுக்கு மேற்ப்பட்ட மக்கள் வசித்து
வருகின்றன. இதற்கு காவல் தெய்வம் தேவை என்று இந்த கோவிலை
கட்டிவைத்தார்கள்.
அதன்பிறகு பணிமாற்றம் செய்ததால் கோவிலுக்கான திருவிழா நடத்த இயலவில்லை. இந்த கோவில் மேற்குத்தொடர்ச்சி மலை வல்லப்பழம்
அருள்மிகு கருப்பசாமி திருக்கோவிலும், அத்திகோவிலும், நல்லதங்
காள் திருகோவிலும், ஸ்ரீசதுரகிரி சுந்தரமாலிங்கம் திருக்கோவிலும்
அமைந்துள்ளது.மலைவாழ்மக்களுக்கு சாமிகும்பிடும் பழக்கமும் கிடையாது. இவ்விழாவை எடுத்து செய்வதற்கான ஆட்கள் முன் வர
வில்லை.
இவர்களுக்கு அசைவ உணவு செய்வதற்கான வசதி வாய்ப்புகள்
கிடையாது.அதனால் இவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள
கோவிலுக்கு பக்த்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக கடா வெட்டி
சமைத்து உண்பது வழக்கம் அந்த நாட்களில் மலைவாழ் மக்கள் அங்குசென்று ஓரமாக அமர்ந்து, நமக்கு இன்று சுவையான உணவு கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். விழாவுக்கு வந்த பக்தர்
கள் சாமிக்கு நேர்த்திகடன் செலுத்தி வந்த உறவினர்களை உபசரித்த பின்
புதான் மலைவாழ் மக்களை கவணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால்
சிலருக்கு மீதம் உள்ள உணவு கிடைக்கும். ஒருசிலர் ஏமாற்றதுடன்
செல்வதும் வழக்கம் அந்த காட்சிதான் மேலே உள்ளது இது மிகவும் மனவேதனையை தருகிறது.
இந்த சிறுவனை பாதுகாக்க பெற்ற தாயும் இல்லை, தன் உடலை
மறைக்க ஆடைகளும் இல்லை, இந்த சூழ்நிலையில் தந்தை மட்டும்
வளர்த்து வருகிறார். இவருடைய வேலை மலைக்குள் சென்று விரகு
வெட்டித்தான் இந்த சிறுவனை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இவர்கள் யாரிடமும் சென்று உதவி வேண்டி நிற்பதில்லை
முடிந்த அளவில் உழைத்து வாழ்வோம் என்று நோக்கத்துடன் இருப்பார்
கள். இவர்கள் தன்னுடலை பாதுகாக்கக்கூட தெரியாத அந்த சூழ்
நிலையில் சிலர் நோய்வாய்பட்டு சிறுவதிலேயே இறந்து போகிறார்கள்
அதிலும் ஒரு குற்றமான செயல் பெண்கள்( Age Attend ) செய்த உடனே
திருமணம் செய்துவைத்து அந்த பெண் 13 வயதில் பிரசவகாலத்தில்
உடல் நிலை ஒத்துழைக்காததால் இறந்து போவதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையிலிருந்து மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ஒரு
நிறுவனத்தில் வேலை செய்து இருக்கும் போதே மேற்க்கு தொடர்ச்சி
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தேவையான வசதியும்,
உடல் சார்ந்த பக்குவ நிலையும் செய்து வருவோம். இதற்க்கு நான் முன்
வர காரணம் இவர்கள் குடியிருப்பு அருகில் எங்கள் தோட்டங்கள் உள்ளன
அதில் பணியாற்றி வருவார்கள் அப்போது இவர்கள் கஷ்டங்களை அறிந்
தேன் அதனால் இவர்களுக்கு பண்டிகை காலங்களில் சில அன்பர்களிடம்
புத்தாடை உதவி கோரி வழங்கி வருகிறோம். மற்ற நாட்களில் பழைய
ஆடைகள் சேகரித்து கொடுத்துவருகிறோம்,
இவர்களுக்கு மின் இணைப்பு இல்லாமல் பழைய காலம் போல்
இருட்டறையில் வாழ்ந்து வந்தார்கள் அப்போது என்னுடைய முயற்ச்சியால் மின்விளக்கு வசதி செய்து தரப்பட்டது. அவர்கள் எனக்கு
நன்றி தெரிவித்த வார்த்தைகள் பழங்குடியின மலைவாழ் மக்கள் நாங்கள் கண்கள் இருந்தும் குருடராக இருந்தோம் எங்களுக்கு வெளிச்சம் காட்டிய உங்களுக்கும் வாழ்க்கை வெளிச்சமாக அமையட்
டும் என்று வாழ்த்தினார்கள் அந்த வார்த்தைகள்தான் இறைவன் எனக்கு
கொடுத்த பரிசு இந்த மூலிகை செல்வமும், மக்கள் செல்வமும்.
திருவிழாவிற்க்கு காப்புகட்டிய காட்சி
மேலும் இவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும்,இவர்களின் உடல்
நிலை ஆரோக்கியத்திற்கும் சாமி கும்பிடும் பழக்கம் ஏற்பாடு செய்ய
( ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை ) மூலமும், நமது இணையதள
வாசக ஆதரவாளர்கள் மூலமும், செய்வதாக வாக்கு கூறி தீர்மானம்
செய்யப்பட்டு வருடத்திற்க்கு ( இரண்டு ) கடா வெட்டி அன்னதானமும்,
அனைவர்க்கும் புத்தாடைகளும், மூன்று நாட்கள் பொங்கள் திருவிழாவும்,
மூன்று நாட்கள் நிகழ்ச்சியும் நடத்தி தருவதாக கூறி வருகிற 03/06/2014 முதல் 05/06/2014 வரை பொங்கள் திருவிழாவை
நடத்த இருப்பதால் இந்த பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு ஆண்மீக
வளர்ச்சி பாதையை காட்டவும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய
வும், நமது இணையதள விருப்பமுள்ள அன்பர்கள் ஆதரவு தரலாம்.இந்த
மக்கள் சூதுவிணைகள் தெரியாதவர்கள் இவர்கள் தெய்வீக குழந்தைகள்
இவர்களுக்கு நாம் உதவி செய்வது கடவுளுக்கு செய்வது போல் ஒப்பிடலாம். இவர்கள் மனது நிறைவு பெற்றால் நமது துயரங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்.
மேலும் ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை மூலம் வேலை
வாய்ப்புகலும், மறைந்து போன பாரம்பரிய சித்த வைத்திய தொழில்களும்
கற்றுத்தருகிறோம். இவர்கள் ஆரோக்கியத்திற்க்கு இலவச சித்த வைத்தியமும் செய்து தருகிறோம். இவர்கள் வருடகூலியாக ரூபாய் 5000/-
என்று பேசி ஆடு, மாடு மேய்ப்பதை மாற்றி தின கூலி, மாத கூலி, செய்
வதற்கான வாய்ப்புகள் அமைத்து தருகிறோம். மேலே படக்காட்சியில்
உள்ளவர் வருடகூலி செய்து ஆடு, மாடு மேய்த்தவர் இவர் பெயர் சுந்தராஜ் தற்போது நமது நிறுவனத்தில் மாதம் ரூபாய் 5000/- ஐந்தாயிரமும், அவர் போக்குவரத்துக்காக புதிய இருசக்கர வாகனமும்
கொடுக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்
அடைந்தார்கள், ஆனால் இவர் இந்த வாகனத்தை பழகுவதற்கு மட்டும் 10 நாட்கள் ஆயினும் டவுன் பக்கம் செல்ல இயலவில்லை காரணம் இவர்கள் அனுகு முறை இல்லாதவர்கள் அதனால் இவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவோம்!!!!!


Subscribe to:
Post Comments
(
Atom
)
திரு,கண்ணன் அவர்களுக்கு, மலைவாழ்மக்களின் வாழ்கை வளம்பெற தங்கள் மகத்தானமுயர்ச்சி என்றும் வெற்றி பெறஎனது வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க அறமுடன்!வளர்க அருளுடன்!
B S N L பாலு அறச்சலூர் >ஈரோடு
This comment has been removed by the author.
ReplyDeleteதிரு, பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்!!
Deleteதங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி!!!
என்றும் அன்புடன்
ஹெர்பல் கண்ணன்
காற்று, நீர், மண்,உணவு அனைத்திலும் விஷம் கலந்துவிட்ட நகரம் எனும் நரகங்கள் அதிகரித்து வரும் வேளையில் தாங்கள் செய்யும் இத்திருப்பணி இயற்கை அன்னையை வாழ்விக்கும் சேவை. அடுத்த முறை என்னால் இயன்ற பங்களிப்பை உறுதிப்படுத்துகிறேன்.
ReplyDelete