மலைவாழ் மக்கள் என்ற ஆதிவாசிகள் பயன்படுத்திய இயற்க்கை உணவு மலை நெல்!!!

2 comments

                                                      இயற்க்கை உணவு மலை நெல்!!
 
                இந்த மலை நெல் வனத்தில் வாழும் உயிரினங்களுக்காக இறைவனால் படைக்கப்பட்டது. இதை யானை, மான்,முயல், காட்டு எருமைகள், போன்ற விலங்குகள் விரும்பி சாப்பிடுவதை பார்த்த குகை வாழ் மனிதர் ஆதிவாசிகள்  உணவாக இந்த மலை நெல்லை பயன்படுத்தினார்கள்.

              இதை அறுவடை செய்து பாறைகளில் உலரவைத்து உமியை நீக்கிவிட்டு அரிசியாக எடுத்தார்கள். அதை சமைத்து உண்பதற்க்கு
நெருப்பு தேவை, அதற்க்கு இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்தி
தண்ணீர் கிழுவை குச்சியையும், கல்விருசு குச்சியையும், சேர்த்து
சறுகுகளிலும், பஞ்சு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்களில்
சுழற்ற தீப்பற்றி எறிய வைத்து சமைப்பார்கள்,

                                                                 


                    சமைத்த உணவை உண்பதற்க்கு தடித்த தாவர இலையையும், மரபட்டைகளையும் தட்டுகளாக ப்யன்படுத்துவார்கள். இந்த உணவை சுவைத்து சாப்பிட  காரம் தேவை அதற்க்கு கானமிளகாய், காட்டுசுண்டை, கண்டங்கத்திரி, காட்டுதக்காளி, மலைபூசணி,மலைபூண்டு,காட்டுஉள்ளி, போன்ற வகைகளையும், கீரைவகைகளையும், சமைப்பார்கள்.அதனை தாளிப்பதற்க்கு  ஆயில் தேவை அதற்க்கு கொங்கட்டி என்ற மரத்தின் வித்துக்களை எடுத்து கசக்கினால் நெய் போன்ற வாசனை தரும் அதனை ஆயிலாக பயன்படுத்தினார்கள்.

                  இவர்களுக்கு அசைவ உணவு தேவைகளுக்கு  மரகம்புகளை
ஆயுதமாக பயன்படுத்தி  மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவார்கள். மேலும் இவர்களுக்கு நண்பர்களாக இருக்கும்  புலி, ஓநாய், போன்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்ட மீதம் உள்ள இறைச்சிகளை அவர்கள் அடிக்கடி சாப்பிடும் பழக்கமும் உண்டு.

 
                                     இவர்கள் சதுரகிரி ஹெர்பல்ஸின் பணியாளர்கள்                   


                   பழவகைகளில்  கொட்லான்பழம், கருநெல்லி,ஈஞ்சு, ஜோதிவிருட்சம், அத்திபழம், கல்வீர, காட்டுமா, பலா,போன்ற பழவகைகளும் சாப்பிடுவார்கள். இந்த இயற்க்கையான உணவுகளையும், பழங்களையும், சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் தருகிறது. எங்கள் ஊரில் குடியிருந்து வந்த ஆதிவாசி திரு, சண்முகம் என்பவர்  131 வயது வரை வாழ்ந்து வந்தார் அவர் இறக்கும் வரை வேலைசெய்து குழந்தைகளுக்கு பெரிய உதவியாக வாழ்ந்து வந்தார்.


                                                               கொட்லான் பழம் 
 
                 
                        மலைவாழ் மக்கள்  15 வயதுள்ள பெண்களுக்கு திருமண சடங்குகள் செய்து வைப்பார்கள்.இவர்கள் மகப்பேறுக்கு ஆஸ்பத்ரிக்கு செல்லாமலே  வழுக்கப்பட்டை போன்ற மூலிகைகளை பயன்படுத்த பிரசவத்துக்கு தேவையான தண்ணீரும், வழுவழுப்பும் கொடுத்து சுகபிரசவமாகிறது.
                
                   இவர்களுக்கு குழந்தை செல்வம் போதும் என்று முன்வந்த போது குடும்பகட்டுபாடு செய்ய  காட்டு பழுபாவை போன்ற அரியவகை மூலிகைகளை சாப்பிட்டு வர இந்த மூலிகைகளின் அதிசயம் உடனே குடும்பகட்டுபாடாகிறது.  இவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன்  காணப்படுகிறது.இந்த அறிய வகை மூலிகைகளை நாம் பயன்பாட்டிற்க்கு விரைவில் கொண்டு வருவோம், மகபேறுக்கான  அதிகமான அறுவைசிகிச்சையை தடுப்போம்!!!

                  இவர்கள் குளிப்பதற்காக பயன்படுத்திய குளியல் பொடிகள்
சீயகாய்,அறபு என்ற உசிளை இலை,  பூந்திகொட்டை,பூலான்கிழங்கு, புளுக்கபட்டை,கஸ்தூரிமஞ்சள் போன்ற பொருகளை பவுடர் செய்து குளிக்க உடலில் தோல் சுருக்கம் இல்லாமல் தோல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.


        மேலே கூறியுள்ளபடி நாமும் நீண்ட நாள் உயிர் வாழ தீய பழக்கங்களை ஒழித்து, தேவையற்ற உணவுகளை குறைத்து.

இயற்க்கை உணவுகளை அதிகபடுத்தி. ஆரோக்கியத்துடன் நோயின்றி வாழ்வோம்.!!!
                                                                                                                                                                                                                                                                                                                                                                                

2 comments :

  1. அனைவரும் நலமுடன் வாழ ஈசன் துணைபுரியட்டும்

    அன்புடன்

    மீ.முத்துவிஜயன்

    ReplyDelete
  2. arumaiyaan thakaval...neengal kooriyathaipola, kidaithaal penkalukku mikavum uthaviyaaka irukkume...

    ReplyDelete