குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவங்கள்!!!
குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம்!!!
மாசிக்காய்
இது குழந்தைகளுக்கு நாக்கில் வெள்ளையாக படிந்திருந்தால். இது அசீரணத்தை குறிக்கும்.இந்த மாசிக்காயை தாய்பாலில் அல்லது பசும்பாலிலுரைத்து நாக்கில் தேய்க்க சுத்தமாகிவிடும்.
குழந்தைகளுக்கு பிரளி (பேதி) இது அசீரணத்தால் வரக்கூடியது.
இதற்க்கு அதிக காரணம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் புருஷனோடு
சையோகம் செய்து விட்டு பிறகு உடனே பிள்ளைக்கு பாலூட்டினால் அந்த பால் காமப்பால் ஆவதால் குழந்தகளுக்கு வயிறுப்பிசம் வந்து பல நிறங்களில் பேதியாகும். இப்பிணிக்கு உடனே எந்த மருந்தும் வசப்படாது. இந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பது குளித்துவிட உடல் குளிர்ச்சியாகும்.
வேலிப்பருத்தி
மேலும் இந்த வேலிபருத்தியிலையை (உத்தாமணி என்றும் சொல்வார்கள்) ஒரு கைப்பிடி இலை சோற்றுப்பு இரண்டு சிட்டிகைகள்
சேர்த்து இடித்து கசக்கி பிழிந்து சாறு 5, 6, சொட்டுக்கள் தாய்பால் அல்லது
பசும்பாலில் விட்டு காலை, மாலை கொடிக்க 3 நாட்களில் குணமாகும்.
அல்லது
வசம்பை சுட்டு கரியாக்கி தூள் செய்து 1/4 தேக்கரண்டி அளவு வெண்ணீரில் கலக்கி நாள் ஒன்றுக்கு 4 முறை கொடுக்கவும் . சிசுக்களுக்கு 2 சிடிகை முதல் வயதிற்க்கு ஏற்றவாறு கூட்டிக் குறைத்துக் கொடுக்க குணமாகும்.
உஷ்ண பேதிக்கு மருந்து
குழந்தைகளுக்கு தண்ணீர் போலவே கொல்லைக்குப் போகும்
ஆசணம் சிவப்பாகி புண்போலாகிவிடும். ஆசன எரிச்சலுக்கு குழந்தைகள்
வீர், வீரென்று அழும். சரியாக பால் குடிக்காது,
இதற்க்கு மருந்து
மாசிக்காயில் சிறிய பொத்தல் இருக்கும் அப்படிபட்ட காயே மருந்துக்குச் சிறந்த்து. இந்தகாய் பலசரக்கு கடைகளில் கிடைக்கும் மாசிக்காய் வாங்கி வந்து சந்தனகல்லில் தண்ணீர் விட்டு உரைத்து சந்தனம் போல் வரும். அதை சுண்டைகாய் அளவு சங்கிலிட்டுக் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து தண்ணீர் அகவுடன் கலக்கி 2 மணிக்கொருதரம் கொடுக்க 2 வேளையிலேயே பேதி நின்று மலம் கட்டியாகும். ஆசன எரிச்சலுக்கு தேங்காயெண்ணையைத தடவ உடனே குணம்கிடைக்கும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் அழுதுகொண்டே பறக்க, பறக்க முலிக்கும். இதற்க்கு மருந்து கிராமங்களி்ல் பாட்டி வைத்தியம் என்று சிவப்பு சோபபில் விளக்கெண்ணெய் தடவி லேசாக ஆசன வாயில் சொருக மலம் இறங்கும். சில நபர்கள் அறியாமையால் விரல் அளவுக்கு சீவி ஆசன பாதையில் மலகுடல் வரை அலர, அலர சொருக மலமும் இறங்கி புண் ஏற்ப்படும்.
கடுக்காய்
இதை தவிற்க்க சித்தர்கள் சொன்ன கடுக்காய் வைத்தியமும் உண்டு இந்த கடுக்காயை சந்தனக்கல்லில் தண்ணீர் விட்டு உரைத்து சுண்டைக்காய் அளவு தண்ணீரில் அல்லது பசும்பாலில் கலக்கி கருப்பட்டியும் கொஞ்சம் சேர்த்து பிரதிதினமும் மாலையில் கொடுத்துகொண்டே வர மலச்சிக்களும் தீரும்,குழந்தையும் வலிமை பெற்று மேனியுடன் வளரும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
சார். அருமையான பதிவு .
ReplyDelete