நோய் எதிர்ப்பு சக்திக்கு காயகற்ப மூலிகைகள்!!!

1 comment

  நோய் எதிர்ப்பு சக்திக்கு காயகற்ப மூலிகைகள்!!!

            மூலிகைகள் இறைவன் நமக்கு  கொடுத்த வரப்பிரசாதமாகும்
இயற்கையாகவே உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தும்
மூலிகைகளில் நிரைந்துள்ளன .இதனாலேயே உடல் நோய் எதிர்ப்புத்
தன்மை மூலிகைகளின் அதிகம் உள்ளது.ஆரோக்கியமாக இருக்க மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன.

            சித்தர்கள் காயகற்ப மூலிகைகள் பற்றி பாடலில் கூறபட்டுள்ள
மூலிகைக்ள்,

1, வெள்ளைக் கரிசாலை  [ Eclipta prostrata ]
2, குப்பைமேனி  [ Acalyapha indica ]
3, கரந்தை [கொட்டை கரந்தை] [ Spaeranthus Zeylanicus ]
4, வல்லரை [centella asiatica]
5, நீலி [அவுரி] [Indigofera tinctoria]
6, மஞ்சள் கரிசாலை சமூலம் [Wedelia chinensis ]

            மேற்க்ண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து
தனிதனியாக நிழலில் உலர்த்தி, தனிதனியாக இடித்து, அவற்றை
ஒன்றாக கலந்து பின்  ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு ,தேனில்
கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர,

          இரத்த் குறைவு, சோகை, பாண்டு, கல்லீரல், மண்ணீரல்,வீக்கம்,
உடல் அசதி முதலிவை குணமாவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியையும் அதிகப்படுத்தும்
  
1 comment :