நில வேம்பு விஷ்ணு கிராந்தி ஜுர நிவாரணி
நில வேம்பு விஷ்ணு கிராந்தி ஜுர நிவாரணி!
மழைக்காலம் நெருங்கி வருகிறது, தட்ப வெப்ப மாறுதல்கள் மற்றும் மாசுபட்ட சூழல்களால், உடல் நலனைப்பாதிக்கும் நோய்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நோய்களிலிருந்து நம்மை மீட்க உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் கிருமிகளின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க , நில வேம்பு விஷ்ணுகிராந்தி ஜுர நிவாரணி சூரணம் பேருதவி புரிந்து நம்மை நோய்களிலிருந்து காக்கும்.
நில வேம்பு எத்தகைய நோய்க்கிருமிகளையும் உடலிலிருந்து விரட்டும் ஆற்றல் மிக்கது, மக்களை தாக்கும் புது வகை ஜுரங்களை தடுக்க அரசும் அலோபதி மருத்துவமும் நாடுவது இயற்கை அளித்த மூலிகைக்கொடையான நில வேம்பு தான். அத்தகைய அற்புத ஆற்றல் பெற்ற நில வேம்பு சூரணத்துடன் நாட்பட்ட ஜுரங்களையும் உடலிலிருந்து நீக்கி, உடலை சக்தி பெறச்செய்யும் விஷ்ணுகிராந்தி மற்றும் சளி,ஜலதோசம் போக்கும் கற்பூர வள்ளி ஆகியவை கொண்ட இந்த நில வேம்பு விஷ்ணு கிராந்தி சூரணம் யாவரும், ஜுரம் வருமுன்னும் வந்த பின்னும் முறையாக சாப்பிட்டு வர, எத்தகைய கடும் ஜுரமும் விரைவில் நீங்கிவிடும். உடலும் புத்துணர்வு பெறும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment