சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி
சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி
இன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டது , வாராந்திர சீயக்காய் எண்ணைக் குளியல் பழக்கம் மறைந்து வருடம் முறை தீபாவளிக்கு எண்ணைக்குளியல் சீயக்காயுடன் அதுவும் மட்டுமே எனும் நிலை நம்மிடையே வந்து நெடுநாளாகிவிட்டது.
உடல் ஆரோக்கியம் காத்து , உடல் வெம்மை தணித்து மனதிற்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய எண்ணைக்குளியல் அத்துடன் உடலுக்கு குளுமை மற்றும் தோல் நோய பிரச்னை தீர்த்து , தலைமுடி உதிராமல் கருக்கச்செய்து உடலுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது இன்று அருகிவிட்டது.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கூட எண்ணைக்குளியல் என்பது , இன்றைய அவசர வாழ்வில் இயலாத ஒன்று என , விடுமுறை நாட்களில் கூட ஓய்வு எடுக்காமல் ஏதேதோ வேலை என .பரபரப்பாக இருக்கிறார்கள்.
நம்முடைய முன்னோர் கடைசிவரை உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததற்கு, வாரம் தவறாமல் எடுத்துக்கொண்ட எண்ணைக்குளியலும் ஒரு காரணம்.
எண்ணைக்குளியல் எடுக்க முயற்சி செய்யுங்கள்! .உடல் நலம் பேணுங்கள்.
எண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் ஸ்நானப்பொடி, நலம் பல பயக்கும் மூலிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில் விளைந்த சீயக்காய், குமிழம் பழம்,செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான் சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி.
உடலில் தேய்த்த எண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்ல இந்த ஸ்நானப் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்கு குளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும் புத்துணர்வையும் ஊட்ட வல்லது.
நம்முடைய நாட்டுக்கு சற்றும் பொருந்தாத மேலை நாட்டு உணவு வகைகளை அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏதுமின்றி , அதன் மூலப் பொருட்கள் என்ன எனத் தெரியாமலேயே செயற்கைச்சுவையால் அதனிடம் கவரப்படும் நாம்,நம்முடைய மூதாதையர் பின்பற்றிய உடல் ஆரோக்கிய முறைகளை மறந்துபோனோம்! அதனால் அவதிப்படுகிறோம்.
இனி ஒரு முடிவு செய்வோம்! உடல் ஆரோக்கியம் காக்கும் எண்ணைக்குளியல் எடுத்துக்கொள்வோம்! நலமுடன் வாழ்வோம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
திரு.கண்ணன் சார் உங்களின் அணைத்து பதிவுகள் மிக மிக அருமை சார்
ReplyDeleteமு.சரவணன்
திருச்சி