ஆண்மைக்குறையை நீக்கிக்களையும் சங்கம் பழம் குழித்தைலம்

1 comment


ஆண்மைக்குறையை நீக்கிக்களையும் சங்கம் பழம் குழித்தைலம்

மனிதனுக்குத் தனிப்பட்ட முறையில் சில உடல்நல பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை சமாளித்து வாழ்ந்து வரும் மனிதன், குடும்ப இல்லற வாழ்வில் பிரச்னை என வரும்போது, துவண்டு விடுவதற்குக்காரணம் அது கணவன் மனைவி இடையே மிகப்பெரிய இடைவெளியை அதிகரிப்பது மட்டுமன்றி, தாழ்வுமனப்பான்மையும் சேர்ந்துகொண்டு அவனை நடைப்பிணமாக்கி விடுகிறது.அவன் சமூகத்தில் தனிமைப்பட்டுக்கொண்டு, அவமானத்தில் வாழ்ந்து வருவதை எம்மிடம் நிறைய அன்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். இந்த விசயத்திற்காக இவ்வளவு வேதனையா?, வாழ்க்கையே பறிபோனது போல ஏன் இந்த அவல நிலை எனும் சிந்தனையுடன்,நாம் இதற்கு தீர்வுகாண பல முறை முயன்றிருக்கிறோம்.

இறுதியாக ஒரு தீர்வு , நிரந்தரத் தீர்வு இறையருளால் கிடைத்தது, அது என்ன எனப் பார்க்குமுன், நாம் இந்த பிரச்னைகளின் மூலம் , இது எதனால் எப்படி மனிதனைப் பாதிக்கிறது எனப் பார்ப்போம்.

நாம் சில தவறுகள் அறிந்தே செய்கிறோம், சில தவறுகள் அறியாமல் செய்கிறோம், இல்லற வாழ்வில் இன்று நமக்கு குறை, மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை, குற்ற உணர்வில் தவிக்கிறோம் என்றால் என்ன காரணம்? இளமையில் செய்த சில தவறுகள் மற்றும் உடல் ஆரோக்கியக் குறைபாடு.

இளமையில் தவறான சேர்க்கையின் மூலம் அநேகம் பேர் பழகிய சுய இன்பம், அப்பழக்கத்தினால் உறுப்பு சிறுத்து, உணர்வற்றுப்போதல் அதீதப்பழக்கத்தினால் பிற்காலத்தில் அதாவது, திருமணக்காலத்தில் ஏற்படும், அதனுடன் கூட, உடல் பலஹீனம்,சோர்வு, எதிலும் நாட்டமின்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும்.

அதிகக்குடிப்பழக்கம் மற்றும் அதிகப்புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த சிகரெட் பீடி உட்பட்ட போதைப்பொருட்கள் உபயோகித்தல் அதனால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட உடல் குறைபாடுகள்.

இது போன்ற செயல்கள் இல்லாமலும், பிற உடல் ஆரோக்கியக்குறைபாடு காரணமாக ஏற்படும் சர்க்கரை வியாதி போன்ற குறைபாடுகள் காரணமாக உடல் இராஜ உறுப்புகள் பாதிப்புகளினால் ஏற்படும் உடல் சோர்வு காரணமாக ஏற்படும் ஆண்மைத்தன்மை பாதிப்பு காரணமாக உறவில் நாட்டமின்மை மற்றும் உறவில் ஈடுபட முடியா நிலை போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.

வியாதிகளுக்கு மூலிகைகள் மூலம் நிச்சயம் தீர்வு காண முடியும், ஆயினும், தவறான பழக்கங்களால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகளுக்கு யார் என்ன செய்ய முடியும், இதுபோன்ற விசயங்களுக்கு எம்மிடம் அனுதாபம் இல்லை, அவர் வினை எனத்தான் எண்ணத்தோன்றும், ஆயினும், தற்போது எமக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும், இந்த விசயத்தைச் சார்ந்தே வருகின்றன, இந்த ஆண்மை இழப்பு பிரச்னைகள் காரணமாக, குடும்பங்கள் பிரியும் சூழலும் இன்றைய நவீன வாழ்வியல் சூழலால் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற தகவலும் மற்றும் இதே காரணத்தால் அநேகக்குடும்பங்கள் பிரிந்திருப்பதும் யாம் அறிந்ததே. இத்தகைய கணவன் மனைவி உறவு திருப்தி இன்மையால் குடும்பங்கள் பிரியும் சூழல் ஏற்படும்போது பிரிவது அவர்கள் மட்டுமல்ல, அவர்தம் மக்கள் மற்றும் உறவுகள் மற்றும் அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் சமூக உறவு சார்ந்த பாதிப்புகள் என அனைத்துக் காரணிகளையும் யோசித்துப் பார்க்கும்போது தான் , இத்தகைய சூழலிருந்து, அவர்கள் மீண்டு , நல்வாழ்வு பெற வழி கிடைத்தது!

இப்போது நாம் , ஆண்மைத்தன்மை குறைபாடு களைந்து , கணவன் மனைவி இல்லற வாழ்வில் தென்றலை வீசச்செய்யும், அற்புத சங்கம் பழம் குழித்தைலம் பற்றிப் பார்ப்போம்.

சங்கம் வேர் நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்பர், சிலர் அதைப் பார்த்திருக்கலாம், ஆயினும் சங்கம் பழம் பற்றி அறிந்தவரோ அல்லது அப்பழத்தைப் பார்த்தவரோ அரிது எனும்போது, அந்த சங்கம் வேர் எப்படி நமக்கு ஆன்ம தீர்வளிக்கிறதோ அதேபோல சங்கம் பழம் அதனால் உருவாக்கப்பட்ட ஆண்மைத்தைலம் குடும்ப இல்லற உறவில் பாதிக்கப்பட்டோர் பலருக்கு அருமருந்தாக, அவர்தம் இழந்த மதிப்பை,இழந்த தன்னம்பிக்கையை மீட்டுத்தரும் ஆண்மை வலுத் தரும் அற்புத விளக்காக இங்கே அவருக்கு விளங்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

ஆற்றல் மிக்க ஆண்மை வலுக்கொடுக்கும், அற்புத சங்கம் பழம் குழித்தைலத்தினை , தினமும் இரவு வேளைகளில், படுக்கப்போகுமுன், ஆண்குறியில் தடவிவர, சில தினங்களில் , ஆண்குறியானது, இயற்கையான அதன் அளவிற்கும், இயற்கையான உறவில் ஈடுபடும் தன்மைக்கும் விரைவில் மாறி விடும்.

கடைசியாக ஒன்று, நம்முடைய இயற்கை நமக்கு மூலிகைகள் எனும் மிகப்பெரும் செல்வத்தை நமக்கு அளித்திருத்திருக்கிறது.அதன்மூலம் நாம் விரும்பும் வண்ணம் நமது உடல்நிலையை இறையாற்றலால் பாதுகாத்துக்கொள்ளலாம், அதைவிடுத்து, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை வகை பொருட்களால் நிவாரணம் தேடியோ அல்லது செயற்கையாக ஊசி மூலம் நிவாரணம் தேடியோ ஈடுபட்டு , வெளியில் சொல்ல முடியாத அவலத்திற்கு ஆளாக வேண்டாம், இது நாம் சொல்வதல்ல, நம்மிடம் இந்தத்தைலம் மூலம் முழுமையான நிவாரணம் பெற்ற அன்பர் ஒருவர் அவரது அனுபவமாக இதை எம்மிடம் சொன்னது.

எனவே,பக்க விளைவுகள் இல்லாத இந்த சங்கம் பழம் குழித்தைலத்தினை தினமும் நாள் தவறாது தடவி வர, தீர்வு விரைவில் கிட்டும்.

பாதிப்புள்ள இல்லறத்தோர் அனைவரும் நலமும் வளமும் பெற்று , மக்கள் செல்வத்துடன் நிறைந்த நல்வாழ்வு வாழ, சதுரகிரியில் உறையும், எமையாளும் ஈசனை வணங்கிப் பிரார்த்திக்கிறோம்!


1 comment :

  1. இது ஒரு அருமருந்து..... 10 நாட்கள் உபயோகபடுதியதன் பயனாக சோர்ந்து தளர்ந்து இருந்த எனது அண்குறி இப்போது நன்கு விறைக்க தொடங்கியுள்ளது.... ஆனால் இந்த எண்ணை பயன்படுத்துவதால் சில இரவு நேரங்களில் உடல் உஶ்ணம் ஆகிறது...

    ReplyDelete