சகல காரிய சித்தி ஐஸ்வர்யம் தரும் அதிசய கொம்பு தேங்காய்!

6 comments
முக்கண் முதல்வனே போற்றி! வேத விநாயகனே போற்றி! போற்றி!!

அல்லல் போம் வல்வினைகள் போம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லை போம் போகாத்துயரம் போம், நல்ல
குணமதிக மாமருணைக்கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்.

-விவேக சிந்தாமணி.

சகல காரிய சித்தி ஐஸ்வர்யம் ஆன்மீக பலம் தரும் அதிசய கொம்பு தேங்காய்!மூலிகை எமக்கு ஒரு கண் என்றால் ஆன்மீகம் எமது மறு கண். அகில உலகை ஆட்சி செய்யும் ஆதி சித்தர் நித்தமும் வணங்கும், வந்தவர்க்கும் மனதார வணங்குவோர்க்கும் வேண்டுவன நல்கும் அந்த சுந்தரன் திருக்கயிலாய ஈசன் வீற்றிருக்கும் சதுரகிரியின் அடிவாரத்தில் வசிக்கும் பேறு பெற்ற எமக்கு, முக்கண் முதல்வன் அவன் திரு மைந்தன் அருளுடன் எமக்கு அளித்த மூன்றாவது கண், அற்புதங்கள் தரும் விக்னங்கள் நீக்கி நல்வினையளிக்கும் அரிய தேங்காய்! முழு முதற்கடவுள் முக்கண் முதல்வன் விநாயகன் வாசம் புரியும் அற்புத கொம்பு தேங்காய்!

உலகில் மிக எளிமையாக வழிபடக்கூடிய , எல்லோரும் எப்போதும் எக்காரியம் ஆரம்பிக்கும் முன்னும் வணங்க வேண்டிய முழுமுதற்கடவுள் விநாயகன்.

அந்த விநாயகனே , எப்போதாவது நிகழும் அரிய தெய்வீக நிகழ்வாக, கொம்பு தேங்காய் வடிவில் காட்சி தந்தால், நினைக்கவே ஆன்ம சிலிர்ப்பு ஏற்படும்.

அந்த அற்புதப்படைப்பு , நம் வீட்டில் வைத்து முறையாக , தனி பூஜை அறையில் வைத்து மிக மிக சுத்தமாக வழிபட்டு வர எல்லாவிதத் தடைகளும் சூரியனைக்கண்ட பனித்துளிபோல உருகி ஓடிவிடும். அது மட்டுமா?

வீட்டில் தன தான்ய விருத்தியை உண்டுபண்ணும். மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது ஆகியும் கிரகக் கோளாறுகளால் தடைபட்டு வந்த திருமணம், விரைவில் கை கூடும்.

தடைபட்டத் திருமணம் விரைவில் கைகூட, இந்த முக்கண் கொம்பு தேங்காயை வீட்டில் மிக மிக சுத்தமாக தனி இடத்தில் வைத்து, 48 நாட்கள் சிரத்தையாக , ஆன்ம சுத்தியுடன் பூஜை செய்து வர, 48 நாட்களுக்குள் நல் வரன் வாயிற்கதவைத்தட்டும், அத்துடன் மனம் விரும்பிய மண வாழ்வு அமையும்.

குடும்பத்தின் மேன்மையே குடும்பத்தலைவனின் வியாபாரத்திலோ அல்லது செய் தொழிலிலோ இருக்கிறது, அவை நஷ்டத்திலோ அல்லது இயங்காமல் இருந்தால் என்னாவது? கலங்க வேண்டாம், விநாயகன் உங்கள் விக்னங்கள் யாவும் களைந்து, உங்கள் வியாபாரம்,செய்தொழில் மேன்மையுறச்செய்து,உங்கள் குடும்பம் ,சுபிட்சம் அடைய வைப்பான்.

எந்த அடி வேண்டுமானாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது, எனும் மூதுரைக்கு ஏற்ப அன்பர் பலர் திருஷ்டி போன்ற வினைகளால் , குடும்ப சுபிட்சம்,வியாபார விருத்தி இழந்து வாடுவர். அத்தகையோர் இந்த அற்புத கொம்பு தேங்காய் வணிக இடத்திலும்,வீட்டிலும் தனி இடத்தில் வைத்து நித்ய பூஜையை மன சுத்தம்,ஆன்ம சுத்தத்துடன் ஆற்றி வர, கண் திருஷ்டி விலகி தொழில் வசியம் ஏற்பட்டு இழந்தவை யாவும் விரைவில் திரும்பும் , பொருளும் அருளும் என்றும் தங்கும்.

இல்லத்தில் செல்வம்,புகழ் எல்லாம் இருந்தாலும், செய்வினை அல்லது பில்லி சூன்யம் போன்ற தீய வற்றால் எடுத்த காரியம் எல்லாம் தோல்வியுற்று மனம் கலங்கி வாடி துயரும் அன்பர் வாட்டம் எல்லாம் பொடியென நொறுக்கி, அன்பர் மனமும் குடும்பமும் அல்லலிருந்து விடுபட வைத்து நல்லருள் செய்து நல்வழி காட்டுவான் சிவ பாலன்.

இத்தகைய அருள் மிக்க அற்புத கொம்பு தேங்காய் வீட்டில் வைத்து சிரத்தையாக பய பக்தியுடன் நித்ய பூஜை செய்து வர, வீட்டில் சுபிட்சம் தங்க அருள் புரிவான். மேலும் சகல காரிய வெற்றி, ஐஸ்வர்யம், தெய்வீக அருள் அளித்து வணங்குவோர் யார்க்கும் நலம் பல அளிப்பான், உமை மைந்தன்.இத்தகைய அரும்பெருமை வாய்ந்த அந்த ஆனைமுகனே கொம்பு தேங்காய் ரூபத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து , உங்களுக்கு அருள் பாலித்தால் ? நினைக்கவே மனம், என்ன பேறு பெற்றோம், என மெய்சிலிர்க்கிறதா?

நிம்மதியற்ற வாழ்வினால் ,வருத்தமா? கலக்கமா? கலங்க வேண்டாம்! 

நல்வினைப்பயனாக, உண்மையான, நல்ல காரணத்திற்காக , நல் வாழ்க்கை சுபிட்சத்திற்கு,நல்ல வரன் அமைய, செய் தொழில் வெற்றிகரமாக அமைய,கண் திருஷ்டி, செய்வினை பில்லி சூனியம் அகல, குடும்ப அமைதி கிடைக்க, முக்கண் விநாயகன் கடைக்கண் அருள் தங்களுக்கு என்றும் கிடைத்து தங்களை நல்வழிப்படுத்த, இந்த அரிய கொம்பு தேங்காயை நாங்கள் உங்களுக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறோம்.

உலகில் எல்லாவற்றிற்கும் விலை வைக்கலாம், பெற்ற அன்னையின் தன்னலம் கருதா அன்புக்கும்,பாசத்திற்கும் விலை வைக்க முடியுமா?

ஈசனின் இறை அருளுக்கும், ஆதி சித்தர்களின் ஆசிர்வாதத்திற்கும் விலை பேச எண்ண முடியுமா? எண்ணிலால் என்ன ஆகும் ?

அப்படித்தான் இந்த அரிய சகல காரிய சித்தி தரும் ,பரம்பொருள் விக்ன விநாயகர் வாசம் புரியும் கொம்பு தேங்காய்!

விலை மதிப்பில்லா இந்த கொம்பு தேங்காய்க்கு விலை வைக்க முனையாதீர்கள்.

இல்லை, விலை மதிப்பிட வில்லை, இந்த சகல ஐஸ்வர்யம் தொழில் வசியம் குடும்ப சுபிட்சம்,ஒற்றுமை மற்றும் மன அமைதி தந்த இந்த அரிய கொம்பு தேங்காய் எமக்கு கிடைத்ததற்கு யாம் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினால், மலை வாழ் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் எமது ட்ரஸ்ட்க்கு உங்களால் முடிந்த தொகையை செலுத்தி நிம்மதி பெறலாம்.

யாம் பெற்ற அற்புத பரம்பொருள் அனுபவம், பெறுக இவ்வையகம்! என எம்மால் முடிந்த மானுட சேவை ஆற்றி வரும்  யாம், இந்த உயரிய சிவனருள் கொம்பு தேங்காயை வணிக எண்ணத்தில் இங்கே பதிவிட வில்லை. 

காரணம் தெரியாமல் , மானிட வாழ்வின் அல்லலில் சிக்கி வாடும் இறை நம்பிக்கை கொண்ட அன்பர் யாவருக்கும் , எம்மால் முடிந்த ஒரு வழி காட்டல் தான் இந்த கொம்பு தேங்காய் பதிவு!

யாம் கிராமத்தில் வசிப்பவன், இங்கே இந்த கொம்பு தேங்காய் பற்றிய அன்பவம் எமக்கு அதிகம், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இத்தகைய அரிய நிகழ்வை, அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள். 

மேலும் கிராமங்களில் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் போது, இந்த அதிசய கொம்பு தேங்காய் மிக மிக அரிதாகக் கிடைத்தால், என்ன செய்வர் தெரியுமா?

வீட்டில் கொண்டு வைத்துக்கொள்வர், யாரிடமும் இந்த செய்தியைப்பகிர்ந்து கொள்ளாமல் அதி இரகசியமாக வீட்டில் வழிபட்டு வருவர். எத்தனை கொம்பு தேங்காய் கிடைத்தாலும் , யாரிடமும் தர மாட்டார்கள், யாரிடமாவது கொடுத்தால் இறையருளும்,ஐஸ்வர்யமும் கொடுப்பவரிடம் சென்று விடும் என அவர்கள் நம்பி, இத்தகைய தெய்வீக கொம்பு தேங்காய்களை தம்மிடமே வைத்துக்கொள்வர்.

ஏன் இதனை இங்கே கூறுகிறோம் என்றால், யாமும் கிராமத்துவாசிதான், ஆயினும், எம்மை வழிநடத்தும் அந்த ஆதி சித்தர் ஆசியாளும், சதுரகிரி ஈசன் கருணையினாலும்,நல்லருளாலும், எமக்கு இத்தகைய எண்ணங்களில்லாமல் , பிறவிப்பெருங்கடலில் சிக்கித்தவிக்கும் அன்பர் யாவருக்கும், எம்மால், முடிந்த அளவு , அவர்களுக்கு நல் இறையனுபவம் கிடைக்கச்செய்ய யாம் முயல்கிறோம்!, அவ்வளவே!நாமறிந்த நல் வழியினை பொதுவினில் வைத்தோம்! இனி அவன் சித்தம்!

எமது தந்தையார் வணங்கி வரும் அற்புத கொம்பு தேங்காய் பற்றிய அன்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். காணுங்கள்!


நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

6 comments :

 1. கண்ணன் சார் அவர்களுக்கு
  கொம்பு தேங்காய் பற்றிய அரிய தகவல்களை தெரிநது கொண்டேன். கிராமத்தில் நான் வளர்ந்திருந்தாலும் தெரியவில்லை.
  "எத்தனை கொம்பு தேங்காய் கிடைத்தாலும் , யாரிடமும் தர மாட்டார்கள், யாரிடமாவது கொடுத்தால் இறையருளும்,ஐஸ்வர்யமும் கொடுப்பவரிடம் சென்று விடும் என அவர்கள் நம்பி, இத்தகைய தெய்வீக கொம்பு தேங்காய்களை தம்மிடமே வைத்துக்கொள்வர்" என்று நீஙகள் சொல்லியவாறு நடந்திருப்பதனால் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் அனைவரும் கொம்பு தேங்காயின் அற்புதங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்கின்ற தங்களின் நல்ல எண்ணத்திற்கு கோடானு கோடி நன்றி ஐயா

  ReplyDelete
 2. நன்றி,திரு.உலகநாதன் முருகேசன் அவர்களே, உலகில் நிறைய விசயங்கள் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கின்றன, இத்தகைய அறியாமை மனோ பாவங்களால்தான், பல அரிய காலத்தால் அழிக்க முடியாத சுவடிகளும் ஏடுகளும் வெளி உலகிற்கு வராமல் மறைந்துவிட்டன. இன்னும் ஒரு விசயம், முந்தைய காலத்தில் கிராமத்து படிப்பறிவில்லாத வெகுளி மனிதர்கள் தாம் உழைத்து அரும்பாடு பட்டு சம்பாதித்த செல்வத்தை குடும்பத்தார் யார்க்கும் கொடுக்க மனமில்லாமல், பூமிக்கடியில் புதைத்து வைத்து, இடத்தையும் யாவருக்கும் சொல்லாமல், காலப்போக்கில் மாண்டும் போய்விடுகின்றனர்.இன்றைக்கு என்னாகிறது? அவர்கள் சேர்த்த செல்வத்தை அவரும் அன்பவிக்காமல், அவர்தம் குடும்பத்தாரும் அனுபவிக்க விடாமல், இன்று பல்வேறு தலைமுறை கடந்து , அந்த நிலத்தை வாங்கும் யாரோ ஒருவருக்கு,அத்தகைய புதைத்து வைக்கப்பட்ட செல்வம் புதையலாகக் கிடைக்கிறது! என்ன சொல்வது? விந்தை மனிதர்கள்!
  நன்றி, நண்பரே!
  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 3. உயர்திரு.கண்ணன் சார் நான் இந்த கொம்பு தேங்காயை நம் தளத்தில் இப்பொழுது தான் பார்கின்றேன் மிக மிக பயனுள்ளது இந்த செய்தி உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இந்த மாதிரி நல்ல செய்திகள் மக்களிடத்தில் சேர்கின்றன எமக்கும் நீங்கள் அனுப்பி வைத்தால் எமக்கு மிக மிக சந்தோசபடுவேன் மிக்க நன்றி சார்

  மு.சரவணன்
  திருச்சி

  ReplyDelete
 4. தம்மைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் தம்மால் இயன்றதையும் அதற்கு மேலும் நல்லன செய்யும் எண்ணம் கொண்ட சரவணனுக்கு இல்லாமல் போய்விடுமா இந்த அரிய கொம்பு தேங்காய்? நிச்சயம் உங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கிறோம்.சந்தோசம் தானே!
  நன்றி சரவணன்.
  அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 5. அன்புள்ள கண்ணன் அவர்களுக்கு, வணக்கம். முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதற்கு இந்த நன்றி என்று தாங்கள் குழம்பவேண்டாம். உண்மையில், நீங்கள் எத்தனையோ உதவிகள் செய்துள்ளீர்கள்.இந்த நன்றி, தாங்கள் அனுப்பி உதவிய சந்தானகரணிக்குத் தான். எனக்கு கையில் ஏற்பட்ட காயத்தினை தங்களது சந்தானகரணி மூன்று நாட்களில் குணப்படுத்திவிட்டது. இதுமட்டுமல்ல, எனக்குத் தெரிந்த சர்க்கரை நோயாளிக்கு புரையோடிய புண்ணுக்கு இதை கொடுத்துப் பார்த்ததில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தங்களது உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி.
  தி.ஸ்ரீ.
  சென்னை.

  ReplyDelete
 6. ஐயா திரு.தி.ஸ்ரீ அவர்களே! சந்தான காரணி அனும் அரிய மூலிகை,சஞ்சீவி மூலிகைக்கு நிகராக அக்காலத்தில் போர்களில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களையும், விபத்தில் ஏற்படும் பெருங்காயங்களையும் விரைவில் ஆறச்செய்யும் அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.காலப்போக்கில்,
  நம் அன்றாட வாழ்வில் மறைந்து போன, அந்த அரிய மூலிகையை ,அன்பர் யாவருக்கும்,எத்தகைய காயங்களுக்கும் பயன்படுத்தி வெகுவிரைவில் காயங்கள் ஆற்ற , வெளிஉலகிற்கு கொண்டு வர நம்மைக் கருவியாக்கிய , எமை வழிநடத்தும் அந்த ஆதி சித்தர் திருவடி பணிந்து வணங்குகிறோம்.

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete