நெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்!

9 comments











சிறுநீரகக் கல் அடைப்பு


 மிகக்கடும் வலியையும் , வலி வரும்போது தன்நிலை மறந்து, வலியின் வேதனையை அவர்கள் அனுபவிக்கும் போது பார்ப்பவர்கள் யாவரும் தாமும் அந்த வலியை உணரும் வண்ணம் இருக்கும், சிறுநீரகக் கல் அடைப்பு நோய்.

சிறுநீரகக் கல் பல வகைக் காரணிகளால் உண்டாகிறது, அவை,

1. உணவுப் பழக்கம் - தக்காளி. இது யாவரும் எப்போதும் முற்றிலும் துறக்க வேண்டிய ஒரு ஒன்று, விரைவில் அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

2. சிறுநீரை உணர்ந்தவுடன் கழிக்காமல் , அடக்கி வைத்து கழிப்பது, மிகக்கடும் விளைவுகளைத் தரும் கெட்ட பழக்கம் இது.

3. மோனோ சோடியம் குளுடோமேட் எனப்படும் அஜிநமோட்டோ சேர்த்த உணவு வகைகள் [ ந்மது நாட்டில் தடை செய்யப்பட வேண்டிய ஒரு பொருள் , தடையில்லாமல் நமது சமையல் கூடத்தில்]

4.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்,அவற்றில் எல்லாமே செயற்கையான மூலப்பொருட்கள் தான். இயற்கையோடு இணைந்து வாழும் நமக்கு எதற்கு அந்த சாயத்தண்ணீர்? அதுமட்டுமன்றி,  மேற்கத்திய அவசர வாழ்வின் உணவு முறைகளான பிசா,பர்கர் நமக்கு எதற்கு? அந்த உணவு வகைகளின் பக்க விளைவுகள் அறிவீர்களா ? மேலும் நமது கேழ்வரகு அடைக்கும்,முடக்கத்தான் தோசைக்கும் ஈடு இணை உண்டா? அவற்றின் பலன்கள் யாவரும் அறிவர். 

சிறுநீர்க் கடுப்பு, முதலிய வலிகளும் நோய்களும் அனுபவித்தவர் க்குத்தான் தெரியும், அத்தனை கடுமையான வலியும் அதனால் ஏற்படும் மன அமைதி இழப்பும் வேதனையும்.

அத்தகைய சிறுநீர் கோளாறுகள் மற்றும் அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரிசெய்யும் ஒரு அற்புத மூலிகை - நெருஞ்சில்!
மூன்றே நாட்களில் சிறுநீரகக் கல்லைக் கரைத்து, நம்மை வியாதியிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு அற்புத மூலிகை நெருஞ்சில்!

நாம் அன்றாட வாழ்வில் , எத்தனையோ மூலிகைகளை சாலைகளின் வழியாக,இரயில் பாதைகளின் வழியாகக் கடந்து செல்கையில் காண்கிறோம், பணிக்கான அவசரத்தில் , நாம் அதை கவனிக்க நேரம் கூட இல்லை, ஆயினும் , நம்க்கு ஒரு உடல் நலக்கோளாறு என்றால், அலோபதி மருத்துவத்தின் அவலம் தெரிந்தபின் , நாம் இயற்கை மூலிகை வைத்தியத்தைத்தான் நாடுகிறோம், 

அங்கே, சித்த மருத்துவர் நமக்கு நாமறிந்த சில மூலிகைகளைப் பரிந்துரை செய்து, இதை சாப்பிடுங்கள் குணமாகிவிடும் எனும்போது தான் , நாம் எத்தனை எத்த்னை அரிய மூலிகைகளின் பேராற்றல் உணராமல், அவற்றை உதாசீனப்படுத்துகிறோம் எனத்தெரியும்.

அத்தகைய ஒரு பேராற்றல் வாய்ந்த , மணற்பாங்கான இடங்களிலும்,வயல் வெளிகளில் ,திடல்களில் அதிகம் காணக்கிடைக்கும் ஒரு மூலிகை தான் நெருஞ்சில் எனப்படும் முள் வகைச்செடி, மூன்று வகை இருந்தாலும் சிறுநெருஞ்சில் வகையே அதிகம் பயனாகிறது.

நெருஞ்சிலின் பயனை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை அதி சிறப்பு வாய்ந்த அற்புத மூலிகை நெருஞ்சில்!

நெருஞ்சில் சமூலம் [ நெருஞ்சில் செடியின் வேர் உள்ளிட்ட  அனைத்தும் ] ,100 கிராம் கொத்தமல்லி 10 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல் அடைப்பு, சதை யடைப்பு, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.அத்துடன் எத்தகைய கல்லானாலும் மூன்றே நாட்களில் கரைந்து ஓடி விடும்.

யூரினரி இன்ஃபெக்சன் எனப்படும் சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று நோயால் அதிகம் அவதிப்படுபவர்கள் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிகம், வெளியில் சொல்ல முடியாமல் அவதிப்படுவர், அவர்களுக்கு ஒரு அரு மருந்து, நெருஞ்சில் முள். நெருஞ்சில் முள்ளை சேகரித்து நன்கு தண்ணீர் விட்டு அலசி, பின்னர் நெருஞ்சில் முள்ளுடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி, அதனை நன்கு கொதிக்க விட்டு, சூடு ஆறியவுடன், கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, சில தினங்களிலேயே , யூரினரி இன்ஃபெக்சன் எனும் சிறுநீரகத்தொற்று நீங்கி விடும்!

பெண்களின் கருப்பை கோளாறுகள் , வலிகள் மற்றும் வெட்டை நோய்கள் நெருஞ்சில் சமூலத்தை கொத்தமல்லியுடன் கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, ஓடிவிடும்.

சிறுநெருஞ்சில் இலைகளுடன் சிறுகண்பீலை வேர் கலந்து கொதிக்க வைத்து பருக, சிறுநீருடன் இரத்தம் வெளியாதல் நிற்கும்.
சிறுநெருஞ்சில் சமூலத்தை அருகம் புல்லுடன் சேர்த்து காய்ச்சி பருகி வர , உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சல், கண் நீர் வடிதல் மற்றும் சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல் யாவும் குண்மாகும்.

சிறுநெருஞ்சில் சமூலம் மற்றும் சீரகம் கலந்து கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு கலந்து பருகி வந்தால் , டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளையே விரைவில் குணமாக்கும் வல்லமை வாய்ந்த மகா மூலிகை தான் நெருஞ்சில்.

சித்த மருத்துவத்தின் சிறப்பு நாம் எவ்வளவு தான் கூறினாலும், பைசா செலவில்லாமல் , நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் அரு மருந்துகள் நம் உடல் துயர் தீர்க்கும் என நாம் இங்கே எப்போதும் கூறி வந்தாலும், இன்னும் நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பதே எதார்த்தம்.

அதனால்தான், ஹிமாலயா எனும் வட நாட்டு மருந்து நிறுவனம் , ஆயுர்வேத மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் நமது பாரம்பரிய சித்த மூலிகையான நெருஞ்சிலை மூலமாகக் கொண்டு  சிஸ்டோன எனும் சிறுநீரக கல்லைக் கரைக்கக்கூடிய நல்ல பலனையும், உலகப்புகழையும் தரும் அந்த மருந்தை உற்பத்தி செய்து , நம்மிடமே அவற்றை அதிக விலையில் விற்று அவர்கள் வணிகத் தன்னிறைவு அடைகிறார்கள். 

ஒன்று தெரியுமா? நம் முன்னோர்கள் அந்த காலத்தில் நெருஞ்சில் முள் கஞ்சி என்று ஒன்று செய்வார்கள், நெருஞ்சில் முள்,சோம்பு,சுக்கு,சீரகம் இவைகளை உரலில் இட்டு நன்கு இடித்து,ஒரு துணியில் கட்டி, அரிசியில் போட்டு, நன்றாக வெந்த பிறகு, அந்தத்துணி மூட்டையை எடுத்து விட்டு, கஞ்சியை  இது போன்று செய்து , தினமும் சாப்பிட்டு வந்தால் , சிறுநீரகக் கோளாறுகள் குணம் அடையும், இந்த நமது பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகளைத்தான் மருந்தாக இன்று ,வட நாட்டு ஹிமாலயா, டாபர் மற்றும் ஜண்டு போனற ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும் கையாண்டு, அதிக வருவாயும் உலகப்புகழும் ஈட்டி வருகின்றனர்.

நோயாளிக்கும் , மருத்துவருக்கும் அதிக இடைவெளி இல்லாத ஒரே வைத்திய முறை , நமது சித்த வைத்திய முறை, இதை யாவரும் , அவரவர் குடும்பத்திலாவது பயன்படுத்தி, பலன்களைப் பெறலாம்.

சிறுநீர் பிரச்னை அல்லது கல் பிரச்னை தான் நமக்கு இல்லையே என எண்ணாமல், யாவரும் மாதமிரு முறையோ அல்லது ஒரு முறையோ , செருஞ்சில் நீர் பருகி வந்தால் , எத்தகைய சிறுநீரக பிரச்னைகளும் அணுகாமல் ஆரோக்கியம் நம்முடனே , என்றும் தங்கும்!.

எத்தனை எத்தனை மூலிகைகள் நமக்கு கிடைத்தாலும், நெருஞ்சில் போல அற்புத மூலிகை ஒன்றே போதும் ,

சிறுநீரக நோயாளிகளின் துயர் துடைக்க! 

சிறுநீரக நோய்கள் வராது காக்க!!

விழிப்புணர்வு பெறுவோம்! விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! 




9 comments :

  1. அய்யா,
    தங்களின் பதிவுகளும் சேவைகளும் சிறப்பாக தொடர வாழ்த்துகிறேன். தினந்தோறும் தங்களின் பதிவினை காண ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. திரு.G.இரவிஅவர்களே!

      தங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      மூலிகை சார்ந்த விழிப்புணர்வை கடமையாக எண்ணி,
      உருவாக்க முயல்கிறோம்! கடமைக்கு எதற்கு வாழ்த்து?
      தங்களின் வருகையே, எமக்கு ஊக்கம்!

      இறையருளால்,தங்கள் மேலான விருப்பம் நிறைவேறட்டும்!

      என்றும் அன்புடன்,
      ஹெர்பல் கண்ணன்.

      Delete
  2. நெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்! மிக மிக நன்று
    அன்புடன்
    என்.ராமகிருக்ஷ்ணன்
    திருச்சி-15

    ReplyDelete
    Replies
    1. அய்யா திரு.N.இராமகிருஷ்ணன் அவர்களே!

      தங்களின் மேலான கருத்துகளுக்கு,மிக்க நன்றி!

      உங்களின் அன்பும் ஆதரவும், எமக்கு பலம்!

      என்றும் அன்புடன்,

      ஹெர்பல் கண்ணன்.

      Delete
  3. அண்ணன் அவர்களுக்கு,
    அருமையான மருத்துவக் குறிப்புகள். மேலும் தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    ReplyDelete
  4. அன்புச்சகோதரர் திரு.ஸஹதுல்லாஹ் அவர்களே!

    தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    இறையருள் சித்தம் எப்படியோ அப்படியே, நம் பயணம்!

    இன்ஷா அல்லாஹ்!

    என்றும் அன்புடன்,
    ஹெர்பல் கண்ணன்.

    ReplyDelete
  5. Thanks for your service. .
    We're expecting more about herbals from you. Thanks again. .

    ReplyDelete
  6. Thanks for your suggestions Mr.Vivek Kayamozhi!

    we'll try to publish about various kinds of herbals when ever time lets us to write.
    Thanks

    Herbal Kannan.

    ReplyDelete
  7. திரு.கண்ணன் அய்யா தங்கள் பதிவுகள் மிக மிக அருமை.இன்னும் தெரியாத விடயங்கள் பற்றி எழுதுங்கள்.வாழ்க வளமுடன்.

    நன்றி.

    சசி.இராஜசேகர்.துபாய்.

    ReplyDelete