இதய நோய் நீக்கும் அற்புத மூலிகை - மருத மரம்

4 comments

                         மருத மரம் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் முழுவதும் பயன் தரக்கூடிய , மனிதர் நோய்கள் அனைத்தும் குறிப்பாக இதயம்சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் வல்லமை உள்ள, சிறந்த மரம்.

மருத மரம் , இலை,பட்டை இப்படி அனைத்தும் உடல் நலம் சீராக்க மிக வல்லது.

மருதம் பட்டையின் பலன்கள்:

1. இதய நோய் குணமாக!

              இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு,இதய பலவீனம்,இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும் மருந்து. 

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம் , ஏலம் , இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து , பொடியாகி வைத்துகொண்டு , காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர ,இதய நோய் , விரைவில் குணமடையும்.

2. மன உளைச்சல் தீர!
                  
                இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம், அதிலொன்றுதான், இன்று இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரையும் , அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளால் வதைக்கும் 
மன உளைச்சல்.

மன உளைச்சல் கூடவே வரும் , படபடப்பு, வீண் பயம்,கோபம் மற்றும் தூக்கமின்மை. இத்தகைய கொடும் நோயிலிருந்து முற்றிலும் விடுபட மருதம் பட்டை சூரணம் ஒரு அரு மருந்து.

           மருதம் பட்டை, வில்வம் துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து , காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர, மன உளைச்சல் , தானேவிலகும்.3.இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு நோய் தீர !

            மன அழுத்தத்தின் தொடர்ச்சி தான் இரத்த அழுத்தம் [ உயர் அல்லது குறை ] இந்த நோயை உடலிருந்து அகற்ற அரு மருந்து இதோ!

      
           மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாகி , காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில்  கலந்து கொதிக்க வைத்து , தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் , பருகி வர, இரத்த அழுத்த நோய் , உடலை விட்டு அகலும்.

 4. சர்க்கரை நோய் அகல!

             இன்று , பல விதமாக , பல வகை காரணிகளால் , மக்களை மிக அதிகம் வாட்டும் ஒரு உடல் நலக்கோளாறு , இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து , மக்களை மீட்கும் அரிய மருந்து , மருதம் பட்டை கஷாயம்.

மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து , அதில் பத்தில் ஒரு பங்கு ஏலம், சுக்கு சேர்த்து , சூரனமாக்கி , காலை மாலை இரு வேலை , காய்ச்சி , காபி , டீ க்கு பதில் அருந்தி வர, சர்க்கரை நோய் தீரும்.

5. பெண்கள் மாத விலக்கு பிரச்னைகள் தீர!

     மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, பெண்களின் மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.

மேலும்,மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி முற்றிலும் தீர, சம அளவு மருதம் பட்டை, வேப்பம் பட்டையுடன் பத்தில் ஒரு பங்கு பெருங்காயம் சேர்த்து , காலை மாலை 200 மில்லி மோருடன் கலந்து பருகி வர, மாத விளக்கு வயிற்று வலி தீரும்.


மருத மரத்தினால் பித்த , சரும மற்றும் உஷ்ண நோய்கள் தீரும்.எல்லாவற்றையும் விட சிறப்பு , வாய்ப்பு கிடைக்கும் போது ,

 மகா மருத்துவ குணம் கொண்ட 
 
மருத மர  

அடியினில்,சற்று நேரம் நின்றாலே இதயம் பலப்படும், உடல் நலன் 

சீராகும்!.
                   4 comments :

 1. ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -2
  http://saramadikal.blogspot.in/2013/06/2_8645.html
  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
  இவண்

  சாரம் அடிகள்
  94430 87944

  ReplyDelete
  Replies
  1. அய்யா, திரு.என்.துரைசாமி அவர்களே!

   தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!
   அருட்பெரும் ஜோதியின் கருணை வெள்ளம் அகிலமெல்லாம் பரவட்டும்! தங்கள் ஆன்மீக சேவை,சிறப்பாக அமைய , எல்லாம் வல்ல இறையருளை இறைஞ்சுகிறேன்!

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
 2. அன்புள்ள மருத்துவர் ஐயா அவர்களூக்கு வணக்கம் மருதம்பட்டய் மருத்துவ குணம் மிக மிக அரும்பாடுபட்டு
  சொல்கிரீர்கள் ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்

  அன்புடன்
  என்.ராமகிருக்ஷ்ணன்
  அஞ்சல் அதிகாரி
  திருச்சி 620 015
  9443073195

  ReplyDelete
  Replies
  1. அய்யா திரு.என்.இராமகிருஷ்ணன் அவர்களே!

   தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!

   நாம் மருத்துவர் இல்லை, நம்மை எல்லாம் ஆளும் சித்தர்க்கெல்லாம் சித்தன் சதுரகிரியில் மகாலிங்கமாய் உறையும் சிவன் அவன் தான் மாபெரும் மருத்துவன்!

   நாம் அந்த இறையருளால் , நம் முன்னோர் பாதுகாத்து வைத்திருந்த , மூலிகை இரகசியங்களை, 20 ஆண்டு கால பயிற்சியுடன் கூடிய அனுபவத்துடன் இன்று இங்கே , வெளிக்கொணர அனுமதி கிட்டிய பின் வெளியிடுகிறோம்.

   தாங்கள் கோரிய மூலிகைகள் , திங்கள் கிழமை தங்கள் இல்லம் வந்து சேரும், தாமதமாகி விட்டது, சிரமத்திற்கு வருந்துகிறேன்.

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete