கண் பார்வைக்கோளாறுகள் , சைனஸ் போக்கும் நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம்!

15 comments

நேத்திரப்பூண்டு [Blepharis maderaspatensis]

கண் பார்வைக்கோளாறுகள் ,
 சைனஸ் போக்கும் 
நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம்!

       குழந்தைகள் புத்தகப்பையை சுமப்பது, ஒரு பெரிய சுமை என்றால் அதைவிட கொடிய சுமை, அவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டு, அதைக் கவனமாகக் சரிசெய்து கொண்டு, புத்தகப்பையையும் சுமந்து செல்வதுதான். 

    இன்றைக்கு, மிகச்சிறிய வயதிலேயே, கண் நோய் காரணமாக, குழந்தைகள் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது, உணவிலிருந்து, அனைத்து வகையான வாழ்வியல் காரணிகளின்  தலைகீழ் மாற்றத்தால் ஏற்பட்டது தான் இன்றைய இந்த நிலை.

  நடுத்தர வயதில் இருப்போர், அதிகம் பேர் வாகனங்களில் செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தின் அதிக ஒளி வெள்ளத்தாலும், கண் பார்வைத்திறன் கோளாறாலும் தடுமாறும் நிலை, மற்றும் செய்தித்தாள் வாசிக்க சிரமப்படுதல்,எந்த ஒரு சிறு விசயத்துக்கும்கூட , கண்ணாடியைத் தேடும் நிலை. 

       சிறியோர் முதல் பெரியோர் வரை , அனைவரும் பாதிக்கப்படும், கண் நோய் பிரச்னைகள் பலப்பல!, கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள், போன்ற நோய்கள் ஏராளம்.

      இத்தகைய குறைபாடுகளைக் களைய , அன்றே , நம் ஆதி சித்தர்கள் ஏடுகளில் எழுதி வைத்திருக்கும் அரிய சித்த வைத்திய முறைதான், அனைத்து கண் நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் சிறந்த தீர்வு காணும், நேத்திரப்பூண்டு கண் தைலம்.

        மிகவும் அரிதான ஒரு மூலிகை வகை தான், நேத்திரப்பூண்டு. இந்த மூலிகையை , சாப நிவர்த்தி*  செய்து , பறித்து வந்து, சுத்தம் செய்து அத்துடன்,  நாட்டுச்செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் கலந்து, ஒரு மண் பாண்டத்தில் இட்டு , அதன் வாயைத் துணியால் சுற்றி, வெயிலில் 10 முதல் 15 நாட்கள் வரை புடம் போட வேண்டும், 

       இடையில் அந்தக் கலவையை எடுத்து , நல்ல துணியில் வடிகட்டி, மீண்டும் வெயில் புடம் இட வேண்டும், இப்படி 6 முறை வடிகட்டிய பிறகு கிடைப்பது தான், நேத்திரப்பூண்டுக் கண் தைலம்.

     அனைத்து வகை கண் நோய்களுக்கும் , கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள் போன்ற வற்றைப்போக்கும் சிறந்த தீர்வு, 

   கண்களைக் குளுமைப்படுத்தும், கண் குறைபாடு களையும், அற்புத மூலிகைத்தைலம் தான் , நேத்திரப்பூண்டு கண் தைலம்.

       தினமும் , கண்களில், ஒன்று முதல் இரண்டு சொட்டு விட்டு வர, 15 - 20 நாட்களில் , கண் நோய் யாவும் ஓடி விடும். 

   தலையில் நீர் கோர்ப்பு, தலைவலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற சைனஸ் எனச் சொல்லப்படும், ஜலதோசத்தின் முற்றிய நிலை வியாதியை, முற்றிலும் நீக்கி விடும், இந்த நேத்திரப்பூண்டு கண் தைலம்!.
*சாப நிவர்த்திபிடுங்கப்படும் மூலிகையின் சக்தியை அதிலேயே, இருக்கச்செய்ய, சித்தர்கள் அருளிய மந்திர முறை! - விரைவில்,இதனைப்பற்றிய அதிக விபரங்கள், தனிப்பதிவில்அறியக் காணலாம்.

15 comments :

 1. சரவணன்
  திருச்சி

  திரு.கண்ணன் சார் மிகவும் அருமையான பதிவு எப்பொழுது தயாராகும் என்று கொஞ்சம் தெரிய படுத்தினால் மிக மிக நன்றாக இருக்கும் சார் நன்றி

  ReplyDelete
 2. திரு.சரவணன் அவர்களே!

  தங்களின் , பதிவிற்கும் ஆர்வத்திற்கும், மிக மிக நன்றி!
  நேத்திரப்பூண்டு மூலிகைக்கண் தைலம் , தயாரானவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்,

  நன்றி!

  என்றும் தங்கள் அன்பில்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 3. கண் பார்வைக்கோளாறுகள் , சைனஸ் போக்கும் நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம் மிக மிக அருமை நன்றி

  அன்புடன்
  என்.ராமகிருக்ஷ்ணன்
  திருச்சி

  ReplyDelete
 4. ஐயா திரு.N.இராமகிருஷ்ணன் அவர்களே!

  தங்களின் மேலான கருத்திற்க்கும், பதிவிற்கும் மிக்க நன்றி!

  என்றும் தங்கள் அன்பில்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 5. திரு கண்ணன் சார் கண் பார்வைக் கோளாறுகளுக்காக அண்டத்தைலம் என் குடும்பத்தில் உபயோகித்து வந்ததில் நல்ல பலன் கிடைத்தது. கண்ணாடி அணியாமல் பார்க்க இயலாது என்று இருந்தவர்களுக்கு 15 நாள் உபயோகித்ததில் கண்ணாடி இல்லாமலேயே பார்க்ககூடிய திறன் வந்துவிட்டது. நேத்திரபூண்டு தைலமும் அண்டத்தைலம் போல் அற்புதமானதாகத்தான் இருக்கும் எப்பொழுது தயாராகும் என்று கூறவும். நானும் என் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 6. நம் முன்னோர் நம் வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்கி நமக்கு விட்டுச்சென்ற அரியவை பலப்பல, அவற்றில் தலையாயது தான் சித்த மருத்துவ முறைகள். அவற்றின் முறை தெரிந்து சரியாக உண்டாக்கினால் , எல்லா மருந்தும் நல் மருந்து தான்!
  நிச்சயம் பலன் தரக்கூடிய , அற்புதம் நிறைந்த சித்த மருந்துகள் எல்லோர் துயரும் தீர்க்கும்!
  உங்கள் பதிவிற்கு நன்றி, கணேஷ்வேல் நாகப்பன் அவர்களே!

  என்றும் தங்கள் அன்பில்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 7. ஐயா வணக்கம்,

  ௧)டியாபிடிஸ் வயதானவர்களுக்கு கண் நோய் வராமல் இருக்க இதை உபயோகிக்கலாமா??

  ௨)laser technology மூலம் கண்ணாடி இல்லாமல் பார்க்க வசதி அல்லோபதியில் உள்ளது.அந்த பலன் இந்த தைலம் மூலம் கிடைக்குமா?

  ReplyDelete
 8. ஐயா, பெயர் சொல்ல விரும்பாத அன்பரே!
  பொத்தாம் பொதுவான வினாக்களைத் தவிர்க்கவும்,
  இங்கே, கருத்துப்பரிமாற்றம் என்பது, அன்பர்களின் மூலிகை ஆர்வத்தை ஊக்குவிக்கவே, யாம் பதிவிடுகிறோம், இப்படி பெயர் கூறாமல் வரும் அன்பர்களுக்கு நாம் இனி , பதில் கூற மாட்டோம். பெயரில்லாப் பதிவுகளையும் நீக்கி விடுவோம்.முதல் முறை என்பதால் , உங்களுக்கு பதில் அளிக்கிறோம்.எனினும் உங்கள் கேள்விக்கு நாம் முறையாக பதில் அளிக்க வேண்டுமெனில், அதுவே மிக நீண்ட பதிவாகிவிடும், கேட்பவர் எப்படி கேட்டாலும், நாம் இடும் பதில் , படிப்பவர் யாவருக்கும் பயன் தர வேண்டுமென்பதே,
  லேசர் டெக்னாலஜி மூலம் தான் ஆங்கில மருத்துவத்தில் கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியும் எனக்கூறினீர்கள், நம்முடைய சில பாரம்பரிய சித்த மூலிகைகள் , எந்த வித கண் பார்வைக்குறைபாடுகளையும் நீக்கிக்களையும் வல்லமை வாய்ந்தது.கண்ணாடி பற்றிய உங்கள் கேள்விக்கு இங்கே காணும் பதிவுகளில் உங்களுக்கு விடை கிடைக்கும்.
  நன்றி!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா மன்னிக்கணும்,

   அடுத்த கேள்வி ,பெயருடன் வருகிறேன்.நன்றி...

   Delete
 9. Sir, I am 45 years old, and started using reading glass. Can I benefit by this oil. If yes, please send me the same.
  Thank you,
  Ravi A.

  ReplyDelete
 10. Yes, Mr.Ravi, you can use this eye drops to cure from your sight problems, please send your address details at ORDER FORM in front page. thank you.

  Regards,
  Herbal Kannan.

  ReplyDelete
 11. கண்ணன் அவர்களே,
  தங்கள் பணியை இறைபணி என்றே கூறவேண்டும்.
  சர்கரை பொடி சாப்பிட்டு வருகிறேன். முன்பு 102 / 145 இருந்த அளவு, தற்போது 82 / 122 ஆக குறைந்துவிட்டது. பாததில் இருந்த எரிசலும் குறைந்துவிட்டது.
  தங்களுக்கும், அன்பின் குரு ஐயா திரு, சாமீ அழகப்பன் அவர்களுக்கும் என் மன்மார்ந்த் நன்றிகள்.
  என்றும் அன்புடன்,
  லா வெங்கட்.

  ReplyDelete
 12. இறைவன் நமக்கு அளித்த மூலிகை வளத்தை சித்தர்கள் இட்ட வழியில், நாடுபவர்களுக்கு நாம் அளித்து வருகிறோம்.
  ஈடுபாட்டுடன் ஆற்றும் எக்காரியமும் இறை பணிதான்,
  திரு.இலா.வெங்கட் அவர்களே!, உங்களின் இந்த நன்றிக்கருத்துரை உட்பட!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 13. Sir,
  I have ordered for Nethira thailam one month ago and have not received yet. Could you please send me.
  Thank you,
  Ravi.

  ReplyDelete
 14. ஐயா,

  வணக்கம்.தங்களின் இந்த பணி மேலும் சிறப்படைய வேண்டும். எனக்கு கடந்த 5 வருடங்களாக கண்புரை பாதிப்பு உள்ளது. இதற்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வு கூறுங்கள். நன்றி

  -தினேஷ்

  ReplyDelete