மூலிகை ஹேர் டை - நரைக்கு நிரந்தர தீர்வு!

11 comments


வெகு சிலர் தலைமுடியில் நடுத்தர வயதிலே, இளநரை தோன்ற ஆரம்பித்தால், வயது அதிகரித்து விட்டது என எண்ணி மிகக்கவலை கொள்வார்கள்,குடும்பக்கடமை முடிக்க வில்லையே,இன்னும் பொருளாதாரத் தன்னிறைவு அடையவில்லையே என ஏதேதோ, கற்பனை செய்துகொண்டு தலைமுடியின் நரையால் வாழ்க்கையே முடிந்தது போல நிகழ்காலத்தை, துன்பமாக்கிக்கொள்வர்.

சிலரோ, தலைமுடி நரைத்தால்தான் என்ன, நமக்கு தான் நிறைய ஹேர் டை கடைகளில் கிடைக்கிறதே, என ஏதேதோ கிடைத்த ஹேர் டை எந்த விலையானாலும் வாங்கி, தலையில் தடவிக்கொண்டு செயற்கைக் கரு நிறத்தை தலையில் உண்டாக்க முயல்வர், ஆயினும், தலைமுடியை அது கருப்பாக்குகிறதோ இல்லையோ, மி அதிக பக்க விளைவுகளை பரவலான ஹேர் டைகள் அளித்து விடுகின்றன.அதாவது சில இடங்களில் மட்டும் தோன்றிய நரை , இந்த செயற்கை சாயத்தினால், தலை முழுவதும் பரவிவிடும் , அத்துடன் அடிக்கடி சாயம் தலைக்கு அடிக்க வைக்கும், நீங்கள் ஒரு தடவை தலைக்கு சாயம் அடித்து விட்டு, பின்னர் சாயம் அடிக்காமல், வெளியில் எங்கும் செல்ல இயலாது, உஙகளுக்கே ஏன் இந்த சாயம் உபயோகித்தோம் , ஏதோ சில முடிகள் தான் நரைத்து இருந்தன, இப்போது , தலையெங்கும் பரவி, சினிமா நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் வருவது போல, நாமும் , டை அடித்துக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே, என வருந்தும் நிலைக்கு, சென்றுவிடுவர்.

நாம், இங்கே மனிதரின்  புறத்தோற்ற விருப்பத்தைக்குறைத்துக்கூற முயல வில்லை, மாறாக , அவர்களின் அந்த அதீத ஆர்வம், எப்படியாவது , தலை நரையை யாரும் அறியுமுன் , நாம் ஏதாவது ஹேர் டை வாங்கி, அதை மறைத்து விட வேண்டும், என்ற எண்ணத்தால் , கடைக்காரர் பரிந்துரை செய்வதையோ அல்லது வேறு எவரும் சொன்னதையோ அல்லது இணையத்தில் பார்த்தோ அதை வாங்கி பயன்படுத்தி , தலைமுடிக்கு நிரந்தர கேடு விளைவித்துக்கொள்வர். இந்த செயற்கை டை பாதிப்புகள் , தலை முடி உதிர்தல், ஒவ்வாமை மற்றும் வேறு சில சருமப்பாதிப்புகளை உண்டாக்கும்.

தலைக்கு சாயம் அடிப்பது அவரவர் உரிமை, ஆயினும் இரசாயன செயற்கைச் சாயங்களைத் தவிர்த்து, இயற்கை மூலிகைச்சாயங்களை தலைக்குத் தடவி, நரையையும் கருப்பாக்கி, தலைக்கும், சருமத்துக்கும் எந்த பாதிப்புமின்றி, இருக்கலாமே!

இதுபோன்ற, எண்ணங்களிலிருந்து உதித்து தான் , தற்போது , முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது, நம்முடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் இயற்கை மூலிகை தலைமுடி ச்சாயம்.

முற்றிலும் பக்க விளைவுகள் இல்லாதது! தலைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தையும்,தலைக்கும் உடலுக்கும் குளுமை அளிக்கக்கூடியது!
கண்களின் பார்வைத்திறனையும் அதிகரிக்கும்!
அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை! 

இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் தயாரானதும் , உங்களுக்கு இங்கே அறிவிக்கப்படும்!

நம்முடைய இணைய மூலிகை ஆர்வலர்கள் , இந்தத் தகவலை , அவர்களுக்குத்தெரிந்த ஹேர் டை உபயோகிப்பவர் களிடம் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த முன் பதிவு இங்கே வெளியிடப்படுகிறது!


                                                   

11 comments :

 1. சரவணன்
  திருச்சி

  திரு.கண்ணன் சார் நானும் உங்களிடம் எனக்கு நரை முடி உள்ளது என்று கூறியுள்ளேன் எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எனக்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் திரு.சரவணன் அவர்களே! , நீங்கள் கூறியது , எமது நினைவில் உள்ளது, மூலிகை தலைமுடி சாயப்பொடி தயாரானதும், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,

   உங்கள் மூலிகை ஆர்வமும்,ஈடுபாடும் , பதிவுகளும் ,எமக்கு நிறைவைத் தருகிறது!

   நன்றி!

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
 2. அய்யா,
  சேவையையே கடமையாக கருதுவதிலிருந்து தங்களின் மேலான குணம் வெளிப்படுகிறது. ஏராளமானோரின் ஆரோக்கியத்தை கெடுக்கும் கெமிக்கல் தலை சாயத்திற்கு (எமது உறவினர் ஒருவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்) மாற்று வழியினை மூலிகை வழியில் வழங்குமாறு தொலைபேசி மூலமாக தங்களுக்கு வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன். ஆனால் மறுதினமே மூலிகை தலை சாயம் குறித்த தங்களின் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. தங்களிடம் ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகள் ஏதும் நாங்களாக வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். விரைவில், அதிவிரைவில் மூலிகை தலை சாயத்தினை தங்களிடமிருந்து எதிர் நோக்கியுள்ளோம்.

  ReplyDelete
  Replies
  1. அன்புடைய திரு.G.இரவி அவர்களே!

   செயற்கை தலைமுடி சாய பாதிப்பை அடிக்கடி கண்டும் கேட்டும் வந்ததன் பிரதிபலிப்பே இந்த பதிவு! இயற்கை மூலிகை தலைமுடி சாயத் தயாரிப்பு, சில காரணங்களால் தாமதம் ஆனதால்தான், நாம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை இட்டோம்! உங்கள் உறவினர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் துயர் களைய,எமையாளும் ஆதி சித்தனருளால் விரைவில் இயற்கை தலைமுடி சாயம் தயாராகி இங்கே அறிவிக்கப்படும்.

   உங்கள் உணர்வுபூர்வமான மடலுக்கும்,அன்புக்கும் நாம் தலைவணங்குகிறோம்!
   ஆயினும், உங்கள் அதீதப் புகழுரை எமக்கு உரியது இல்லை,
   நாம் ஒரு கருவி மாத்திரமே!, ஆட்டுவிப்பவன் எல்லாம் அந்த சதுரகிரி வாழ் சித்தருக்கெல்லாம் சித்தன், பெருஞ்சித்தன் சிவனே! ஈசனே!!

   அன்பர் நலம் நாடி,அவன் பதம் பணிந்து,

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.   Delete
 3. நமஸ்காரம் அய்யா

  அருமையான பதிவு . ஆவலுடன் எதிர்பார்கிறோம். அப்படியே நாட்டு மகளையே உலுக்கி கொண்டிருக்கும் கொசுவை விரட்ட மூலிகை முயற்சி செய்தால் நாடே நன்றி கடன் படும்.

  நன்றியுடன்

  திருச்சி மனோகரன்

  ReplyDelete
  Replies
  1. திரு.மனோகரன் முத்துவீரன் அவர்களே!

   தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!
   நன்றிக்கடனை இறைவனிடத்தில் செலுத்துவோம்!
   இறையருளே, மூலிகைப் பயன்களை வெளிக்கொணர்கிறது!
   நம்பிக்கை கொள்வோம்! நல்லதே நடக்கும்!

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
 4. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்றைய காலத்திற்கு நிறைய தேவைப்படுகிறது. மூலிகை சாய பொடி தயாரான உடன் தகவல் தெரிவிக்கவும்

  நன்றி.
  அன்புடன்
  வெங்கட்
  9865824794
  சங்ககிரி

  ReplyDelete
 5. திரு.வெங்கட் அவர்களே!
  தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!

  உங்கள் பதிவின் நடை , போனில் கேட்ட உங்கள் குரலை , எமக்கு நினைவுபடுத்துகிறது, மகிழ்ச்சி!
  நமது மூலிகை மருந்துகள் ஸ்டாக் இருக்கின்றனவா?
  மூலிகை தலைமுடிச் சாயப்பொடி தயாரானவுடன், உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்! நன்றி!

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 6. Respected Sir,Pre-mature greying of hair, is becoming problem even in children. Details about treatment will be a great blessing.Ravi.

  ReplyDelete
 7. Dear Mr.Ravi,

  Please contact us over phone, preferably in evening time.
  Thanks.

  Regards,
  Herbal Kannan.

  ReplyDelete
 8. திரு.கண்ணன் சார் எனக்கு நரை முடி உள்ளது எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எனக்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்

  ReplyDelete