காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்
உடலை பிணி,மூப்பு,பசி இவைகள் அண்டாது , நீண்ட ஆயுளுடனும், இளமையுடனும் வைத்திருக்க சித்தர் பெருமக்கள் அருளிய , சாகாக்கலைகளில் சிறப்பான காய கற்ப வைத்திய முறையின் அறிமுகத்தை , சென்ற பதிவில் பார்த்தோம்.
இன்றைய பதிவில் ,சட்டை முனி மகா சித்தர் அருளிய ஒரு எளிய கற்ப மருந்தை , நூற்றாண்டு வேம்பு கற்பம் எனும் மருந்தை தயார் செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.
நூறாண்டு கடந்த வேப்ப மரத்தின் பட்டையை , சேகரித்து , அதன் மேல் பகுதியை நீக்கி விட்டு , உள் பகுதியை சூரணமாக்கி அதனுடன் , சம அளவு கருங்குன்றி சாறு சேர்த்து , வெயிலில் உலர்த்த வேண்டும் , இது போல 6 அல்லது 7 முறை செய்து சூரணமாக்கி , தினமும் காலை , மாலை வேளைகளில் , 6 கிராம் அளவு இந்த கற்பத்தை , சிறிய அளவு பனங்கல்கண்டுடன் உண்டு வர , உடல் இருகும், நரை நீங்கும் , கண் பார்வை அதிகரிக்கும், நோயனுகா வாழ்க்கை உண்டாகும், என்கிறார், சட்டை முனி சித்தர்!
எளிய இந்த கற்பத்தை கடைபிடிக்க , சிறப்பாக பத்தியம் எதுவும் அவர் சொல்லவில்லை, ஆயினும் , மருந்து உண்ணும் காலங்களில், கட்டுப்பாடான உணவு சிறந்த பலன்களைத்தரும்.
* குறிப்பு:
பொதுவாக, நூற்றாண்டு கடந்த வேப்பமரங்கள், திருக்கோவில்களில் மட்டும் அரிதாகக் காணப்படும் , தயவு செய்து, அந்த மரங்களில், பட்டையை எடுக்கத்துணிய வேண்டாம், உடல் நலம் பெற, காய கற்பம் செய்ய வேப்பம் பட்டை எடுக்கப்போய், இறைவனின் சாபத்தை பெற்றுவிடாதீர்கள்!.
நூற்றாண்டு வேப்ப மரங்கள் , உங்கள் ஊர் மரப் பட்டறைகளில் , கிடைக்கும், இல்லையேல், எம்மை தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு, அனுப்பி வைக்கிறோம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
தினம் ஒருசெய்தி மிகமிக நன்று அன்புக்கு நன்றி உறித்தாகுக
ReplyDeleteஅன்புடன்
என்.ராமகிருக்ஷ்ணன்
திருச்சி
அய்யா இராமகிருஷ்ணன் அவர்களின், வருகையும், வாழ்த்தும் எமக்கு தினம் தினம் கிடைக்கும் , உற்சாக ஊக்க வித்து!
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் , கருத்துரைக்கும் நன்றி , அய்யா!
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
ayya! malaimakkaluku ennaal mudintha uthaviyai neril sendru seiya virumbukirean.
ReplyDeleteemail-jebasamy@gmail.com
மலை வாழ் மக்கள் வெளி உலக அனுபவம் இல்லாமல் , மிக மிக வறிய நிலையில், அவர்தம் எளிய வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள்.தற்போது தான் எம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். அவர்தம் மழலையரை பள்ளியில் சேர்ப்பது,உணவு ,உறைவிடம் ,உடைகள் உள்ளிட்ட வாழ்வாதார அத்தியாவசிய தேவைகளை நிரைவேற்றி வருவது, தகுந்த மருத்துவ உதவிகள் அளிப்பது போன்ற சேவைகள் உங்களைப்போன்ற நல் எண்ணம் கொண்ட அன்பர்கள் மூலம் செய்து வருகிறோம்.
ReplyDeleteமலை வாழ் மக்களுக்கு உதவ விரும்பும் உங்கள் தூய அன்பிற்கு நன்றி, எம்மை போனில் தொடர்பு கொண்டு பின்னர் நீங்கள் வசதிப்படும் நாளில் நேரில் வரலாம்.
மீண்டும் ஒரு முறை உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி கூற விரும்புகிறோம் திரு.G.கருப்பசாமி அவர்களே!
என்றும் நல்லோர் அன்பில்,
ஹெர்பல் கண்ணன்.