கண் திருஷ்டி பில்லி சூன்யம் விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு

5 comments


வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு,  சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.



கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).
இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.


 

5 comments :

  1. திரு.கண்ணன் சார் இந்த மாதிரியான அபூர்வம் மிக்க இந்த ஆகாசகருடன்கிழங்கு எமக்கும் அளித்த உங்களுக்கும் அந்த ஈசனுக்கும் நானும் என் குடும்பத்தாரும் நன்றி கடன் பட்டு உள்ளேன்


    சரவணன்
    திருச்சி

    ReplyDelete
  2. திரு.சரவணன் அவர்களே!

    தங்கள் பதிவிற்கு நன்றி!
    ஆகாச கருடன் கிழங்கு துளிர்விட்டு , துளிர் செழித்து,வளர வளர, உங்கள் இல்லத்தில் மன நிம்மதியும்,மகிழ்ச்சியும்,சுபிட்சமும் நிறையும்.
    மேலும் தீயவைகளை அண்டாது விரட்டி உங்களைக்காக்கும்!
    இப்படிப்பட்ட அரிய மூலிகைகள் உலகிற்கு அளித்தவன், நம்மைப்படைத்த ஈசனே! மூலிகைகளை வகையறிந்து , பயன் முறைகளை உலகிற்கு விட்டுச்சென்றவர்கள் உலகோர் நலன் நாடும் சித்தமகா புருஷர்களே!
    நாம் கருவி, நடத்துவது அவர்களே!

    என்றும் தங்கள் அன்பில்,
    ஹெர்பல் கண்ணன்.

    ReplyDelete
  3. கண்ணன் சார்
    ஏற்கனவே தங்களிடம் கூறியபடி பில்லி சூனியத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறேன். ஆகாச கருடனை அனுப்பி என் வாழ்க்கையை நிம்மதி ஆக்குங்கள்.

    தயவு செய்து தயவு செய்து அனுப்பி வையுங்கள் அய்யா.

    ReplyDelete
  4. Kannan sir

    Kindly send me a Aagasar Garudan Kilangu and Sakarai kolli suranam.

    ReplyDelete
    Replies
    1. Kindly submit yr order in odrer form with postal address or call.
      thanks,
      Kannan.

      Delete