சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை

No comments

SRI SATHURAGIRI HERBALS AND SOCIAL WELFARE TRUST   Regd.No: 6 / 2013

ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ் & சோசியல் வெல்பேர் அறக்கட்டளை 

சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற இந்த டிரஸ்ட் , மலை வாழ் மக்களுக்கு அவர் தம் வாழ்க்கைத் தரம் உயர , அவர்களின் குழந்தைகளின்,கல்வி மற்றும் நல்ல எதிகாலத்திற்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

புலம் பெயர்ந்த மலை வாழ் மக்கள் மறு வாழ்வு திட்டமாக , அவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி , மருத்துவம் முதலானவை முன்னுரிமையாக க்கொண்டு அதன் அடிப்படையில்,சதுரகிரி ஹெர்பல்ஸ் ட்ரஸ்ட்  செயல்பட்டு வருகிறது.

சதுரகிரி ஹெர்பல்சில் தயாராகும் அனைத்து மூலிகை மருந்துகளுக்கும் தேவையான மூலிகைகள் , இவர்களாலேயே , மலையிலிருந்து , மிகக் கவனமாக, தகுந்த முறையில் உரியவிதத்தில் பக்குவம்  செய்து கொண்டு வரப்படுகிறது.

மலை வாழ் மக்கள் பலர் சதுரகிரி ஹெர்பல்சில் முழு நேர பணியில் இருந்து , மூலிகை தயாரிப்பில் உறுதுணையாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு , தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மற்றும்  வாழ்வியல் தேவைகளையும் சதுரகிரி ஹெர்பல்ஸ் நிறைவேற்றி வருகிறது.

இவர் தம் , குழந்தைகளுக்கு , கல்வி மற்றும் இதர சேவைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் பெற்றுத் தரப்படுகிறது.

மலை வாழ் மக்களுக்கு , உடை மற்றும் உறையுள் வழங்கி , அவர் தம் வாழ்க்கைத்தரம் உயர, சமூக பாதுகாப்பு கிடைக்க உறுதுணையாக, சதுரகிரி ஹெர்பல்ஸ்  செயலபட்டு வருகிறது.

மலை வாழ் மக்களின் மேம்பாடு மட்டுமன்றி, மூலிகைகள் மூலம் மக்கள் உடல் நலம் பேணவும், இருக்கும் உடல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடவும் ,  ,உரிய மருந்துகளை தயாரித்து , மிக மிகக் குறைந்த விலையில்   வழங்கி ,  அவர் தம்  நோய் நீங்கவும், நல் ஆரோக்கிய வாழ்வு பெறவும், பொதுச்சேவையும் செய்து வருகிறது சதுரகிரி ஹெர்பல்ஸ்.













No comments :

Post a Comment