மூலம் குணமாக - காட்டு மூலக்கருணை சூரணப் பொடி

1 comment
                                                                                                                                                                                                                                   காட்டு மூலக்கருணைக் கிழங்கு   
                                                                   
            மூலம் உண்டாவதற்க்கு முக்கிய காரணமே அடிக்கடி டீ, குடிப்பதனால் பித்தம் அதிகரித்து உடல் சூடாகி மலச்சிக்கல் ஏற்பட்டு மூலம் வர ஒரு காரணமாகிறது. மேலும் தண்ணீர், பழங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் ஆசானவாய் பகுதியில் இரத்தகுழாய் தடிமன் ஆவதான் மூலமாக உருவாகிறது. இதன் அறிகுறியாக முதலில் அறிப்பு ஏற்படும். இயற்க்கை உபாதை கழிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

காட்டுக் கருணைக் கிழங்கினால் வாதப் பிரமேகமும் , முளைமூலமும், சுரதோஷமும் , போகும்.இன்னும் இதனால் மிகுபசியும் ,கரப்பானும் உண்டாகும் என்பதாகும்.மூலத்தில் ஒன்பது வகை உண்டு என்றும் கூறுவர் .எனவே நவ மூலம் என்பர் .அதே போல பவுத்திரமும் சில வகைகள் உண்டு.இரண்டையும் சேர்த்து 21 வகையாக கூறுவர். அத்தனையும்  அடியோடு அகற்றும் இந்த காட்டுக்கருணைச் சூரணமும் மற்றும் அதிலுள்ள பொருட்களும்.

1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)
நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிறிதல், மலவாயில் நுரையுடன்கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.


2 செண்டு முளை மூலம்(செண்டு மூலம்)
செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குப் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டிப்படும். மலவாயில் வலி ஏற்படும்.


 
3. பெருமுளை மூலம்,( பெரு மூலம்)
முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல்போலாகும். மலவாய் சுருங்கி அரிப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.


 4. சிறுமுளை மூலம் (சிற்றும்)
சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.


5. வறள் முளை மூலம்(வறள் மூலம்)
வறள் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளிதுளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.

6. குருதி முளை மூலம் (ரத்த மூலம்)
ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.

7. சீழ் முளை மூலம் (சீழ் மூலம்)
சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்கு முன்பு சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணுக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.

8. ஆழி முளை மூலம் (ஆழி மூலம்)
ஆழி மூல நோயில் மலவாயில் ஆழி வடிவமாம் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளையாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.

9. தமரகமுளை மூலம் (தமரக மூலம்)
தமரக முளை மூல நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப் போல பெரிதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். தமரக வாயு மேலேறி அடிக்கடி மூச்சு முட்டல் , இதய வலி உண்டாகும்.செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.

10. வளிமுளை மூலம் (வாத மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண்டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும்.

11. அழல் முளை மூலம்  (பித்த மூலம்)
அக்கினியென்னும் ,தீயால் ( தேயு ) தோன்றும் பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.

12. ஐயமுளை மூலம்  (ஐய மூலம்)
ஐயமாகிய தண்ணீரால் (அப்பு ) தோன்றும் ,ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எரிச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற் போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

13. முக்குற்ற முளை மூலம் (தொந்த மூலம்)
வளியெனும் காற்றாகிய (வாயு )வாதமும் ,அக்கினியென்னும் ,தீயும் ( தேயுவும் ) ,ஐயமாகிய தண்ணீரும் (அப்புவும்  ) சேர்ந்து  தொந்த மூல நோய் உண்டாகிறது. இதில் மலவாய் இறுகி முளை யானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.

14. வினை முளை மூலம்  (வினை மூலம்)
செய்த வினைப்பயனால் வருவதால் இதற்கு இப்பெயர்.வினை மூல நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.

15. மேகமுளை மூலம் (மேக மூலம்)
மேக மூளை நோய் மேக ரோக தொந்தத்தால் உண்டாகிறது.இதில் ஆண் குறியில் வெள்ளை விழும். மூல முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.

16. குழி முளை மூலம் (பவுத்திரம்)
குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம் போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூல நோய்க்கு உரியவையாகும்.

17. கழல் முளை மூலம் (கிரந்தி மூலம்)
கழல்  என்றால் கால்களைக் குறிக்கும்.கால்களுக்கு இடையில்  ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எரிச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறங்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உரியதாகும்.

18. அடித்தள்ளல் முளை மூலம் (குதயா மூலம்)
அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்து போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.

19. வெளிமுளை மூலம்(வெளி (புற)மூலம்)
வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.

20. சுருக்கு முளை மூலம் (சுருக்கு மூலம்)
சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.

21. சவ்வு முளை மூலம்(சவ்வு மூலம்)
சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எரியும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.

                                                               
எந்த வகை மூல நோயாக இருந்தாலும்  குணமாக, தினமும் காட்டுக் கருணை சூரணத்தை, சாப்பிட்டு வர, நல்ல பலன் விரைவில் தெரியும்

1 comment :

  1. கண்ணன் அய்யா அவர்களுக்கு
    ஏற்கனவே அனுப்பிய மருந்து சாப்பிட்டபின் மூல நோய் குணமாகி வருகிறது.. இன்னும் 2 அனுப்பவும்

    ஆகாச கருடனும் தயவு செய்து அனுப்பவும்.

    கண்ணன் சார் மறந்து விடாதீர்கள். நன்றி

    ReplyDelete