ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்

3 comments
                             தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.

இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.பூனைக்காலி விதை


இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

அமுக்கராக் கிழங்கு


அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.

இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.

அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.

பூமிச்சக்கரைக் கிழங்கு

உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் ,  சுரம்  , மூலம்  போகும்  உடல் பூரிக்கும்.

திரிகடுகு

திரிகடுகு சூரணம் என்பது  சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.

திரிபலாதி

திரிபலாதிச் சூரணம் என்பது  கடுக்காய் ,நெல்லி வற்றல்  , தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.

விஷ்ணுகிராந்தி 

விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.

மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.
சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.

நிலப்பனங்கிழங்கு

நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம்  , மூலம் இவைகள் நீங்கும் .

தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் , சுரம்  , மூலம் இவைகள் நீங்கும். .இளமையைத் தக்க வைக்கும் .உடல் பூரிக்கும்.

ஒரிதழ்த்தாமரை

ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.


ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!

நில ஆவாரை

பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT]  வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.

   மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு  மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.

நெருஞ்சில் விதை

                நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் . 

நீர்முள்ளி விதை

                        நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும். 

சாதிக்காய்

தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.

மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.

முருங்கைப்பூ

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். 

விளாம் பிசின்


விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.


நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.


           இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.

வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.


 

3 comments :

 1. dear sir pls price for this product?
  inbaraj.my mail id is inbarajkp@gmail.com

  ReplyDelete
 2. Mr.Inbaraj, Please contact us over Phone, for the product details and price.
  thanks

  Herbal Kannan.

  ReplyDelete
 3. மிகவும் நன்றாக இருந்தது.

  ReplyDelete